சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்  - 5

*குற்றவியல் சட்டமும் குழந்தைகளும் :*

*
*

1. 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் செயல்கள் குற்றமாகக் கருதப் படாது.

2. 7 முதல் 12 வயது வரை வயிதிலான குழந்தைகள் தாம் செய்வதன் விளைவுகளை
அறியுமளவு போதுமான பக்குவப்படாத நிலையில் , தம் செயலின் பின் விளைவுகள்
குறித்துப் புரிந்து கொள்ளாமல் செய்வதேதும் குற்றமாகக் கொள்ளப்படுவதில்லை.

3. கருச்சிதைவு , பிறக்க இருக்கும் குழந்தைக்கு காயம் விளைவிப்பது , பிஞ்சு
குழந்தைகளைக் கவனிப்பின்றிக் கை விடுவது , பெற்ற குழந்தையை மறைத்தல் ஆகியவை
தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

4. தவறான நோக்கத்தோடு குழந்தையைக் கடத்துதல் குற்றம். குழந்தைகளைக் கடத்திச்
சென்று பெருந்தொகை கேட்டு மிரட்டுவது குற்றம். அங்கக் குறை பாடுள்ளதாக்கி
இரந்துண்ணச் செய்வதும் , அதில் பொருளீட்டித் தரச் சொல்வதும் குற்றம்.

5. பாலியல் குற்றத்திற்கு வலியுறுத்த , பெண் குழந்தையைக் கடத்தி இத்தகைய
நோக்கில் பணத்திற்காகக் கை மாற்றுவது , வியாபாரம் செய்வது முதலியவையும்
குற்றம்.

வருங்காலத்தை வளம் கூட்ட வரும் வழித்தோன்றல்களை , எதிர்காலத் தூண்களை,
நிகழ்கால நியாயமற்ற தேவைகட்காக விலை பேசுவது அடிமைத் தொழிலாளியாக்குவது ,
அறிவாற்றல் , நல் வாய்ப்பு , மனித நேய மனப்பாங்கு , ஆகியவற்றை வளர்க்க வேண்டிய
இளம் வயதில் அவர்கட்குரிய வாழ்வை அமைத்துக் கொடுக்கத் தவறிய சமூகம் அறிந்தோ
அறியாமலோ அவர்களைச் சமுதாய காழ்ப்புணர்வோடு வளரச் செய்யும் கொடுமையைச் செய்து
விடுகிறது.

வாழையடி வாழை என வழித் தோன்றல் வேண்டி நோன்பிருந்து மக்கட்பேறு பெறுவோர் தம்
அறியாமையாலோ , வேண்டாத பழக்கங்கட்கு அடிமையாகியோ தம் மழலைச் செல்வத்தை
மாண்பிழக்கச் செய்யும் கொடுமையே பல தீய விளைவுகளுக்கு அடித்தளம் அமைத்து
விடுகிறது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.




-- 


 ****
****

  [image: Photo Sharing and Video Hosting at
Photobucket]<http://photobucket.com/>
*V a n a k k a m  S u b b u *[image: Photo Sharing and Video Hosting at
Photobucket] <http://photobucket.com/>

  <http://groups.yahoo.com/group/sometimeonthenet/join>

* *
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
**வாழிய பாரதமணித் திருநாடு!*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply via email to