செல்லினம் - ஆன்ராய்டு மொபைல் தமிழ்
எழுதி<http://www.luckylimat.com/2013/01/sellinam-android-tamil-key-input.html>

நண்பர்களே,
         கணிணியில் தமிழில் எழுத பல மென்பொருள்கள் உள்ளன. உதாரணமாக Google
Indic , NHM Writter என்ற சிறந்த மென்பொருள்கள் பலரால் தமிழில் எழுத
பயன்படுகிறது. ஆனால் மொபைல்களுக்கு தமிழில் எழுத பல மென்பொருள்கள் இணையத்தில்
கிடைத்தாலும் எந்த மென்பொருளும் சிறப்பாக இல்லை எனலாம். முக்கியமாக ஆன்ராய்டு
மொபைல் தற்போது பலரால் பயன்படுத்தபட்டு வருகிறது. ஆன்ராய்டு மொபைல்களுக்கென
சிறப்பான தமிழ் எழுதி இதுவரை இல்லை எனலாம். இந்த குறையை தீர்க்க வந்துள்ளது
செல்லினம் என்ற இந்த மென்பொருள்.

ஏற்கனவே ஐபோன்களுக்கு மட்டுமே செயலாற்றிய இந்த மென்பொருள் தற்போது ஆன்ராய்டு
மொபைல்களுக்கும் வந்துள்ளது. இதுவரை உள்ள தமிழ் எழுதிகளை விட சிறப்பாகவும் ,
எளிதாகவும் உள்ளது. மேலும் முக்கிய வசதியாக தமிழ் வார்த்தை  பரிந்துரைகளும்
காட்டுகிறது.

<http://sellinam.com/wp-content/uploads/2012/12/device-2012-12-12-210459-168x300.png>
<http://sellinam.com/wp-content/uploads/2012/12/device-2012-12-12-210246-168x300.png>
<http://sellinam.com/wp-content/uploads/2012/12/device-2012-12-12-210745-168x300.png>

இந்த மென்பொருள் தமிழில் எழுத இருவகையான விசைபலகை முறைகளை தருகிறது.


   1. தமிழ் 99
   2. முரசு அஞ்சல்

 முதலில் தமிழ் 99 மூலமாக எவ்வாறு எழுதுவது என பார்ப்போம். இதில் தமிழ் என
எழுத த , ம+இ=மி , ழ+புள்ளி=ழ் என எழுத வேண்டும். மேலும் செல்லினம் என்பதை
ச+எ=செ,ல+புள்ளி=ல்,ல+இ=லி,ன,ம+புள்ளி என எழுதவேண்டும். மேலும் விபரங்களுக்கு
Tamil99 keyboard எனகூகுளில் தேடவும்.

இரண்டாவது முறையான முரசு அஞ்சல் மிகவும் எளிது. தங்கலிஷ் முறையில் டைப்
செய்தால் போதும். உதாரணம் amma = அம்மா. சில எழுத்துகளை மட்டும் உதாரணமாக ன,ந
எழுதும் போது மட்டும் எதுவென தேர்வு செய்ய வேண்டும்.

எனது ஆன்ராய்டு HTC மொபைலில் சிறப்பாக இயங்குகிறது இந்த மென்பொருள். எனது
மொபைல் ஆன்ராய்டு வெர்சன் 2.3.எனது மொபைலில் சிறப்பாக இயங்குவதை கீழே
வீடியோவில் காணலாம். இதன் மூலம் பேஸ்புக் பயன்படுத்துவது மிக எளிதாக உள்ளது.


இந்த மென்பொருள் பற்றி மேலும் அறிய இதன் அதிகாரபூர்வ இணையதளமான
http://sellinam.com/ செல்லுங்கள். இதனை Google Play Store ன் மூலமாக
டவுன்லோட் செய்து கொள்ளலாம்.Download
Sellinam<https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&feature=nav_result#?t=W251bGwsMSwxLDMsImNvbS5tdXJhc3Uuc2VsbGluYW0iXQ..>

-- 

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

  * V a  n  a  k  k a  m    S u  b b u    *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply via email to