* <http://overview.mail.yahoo.com/?.src=iOS>*

  * ------------------------------ *

            *ராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய
புகைப்படங்கள்!
<http://prabanjaveliyil.blogspot.com/2013/06/blog-post.html> *
 *
<http://3.bp.blogspot.com/-T-5uYxGzzPY/Ub8xax3qacI/AAAAAAAAAWk/BVB7m5aIbiU/s1600/pbaac044_ram_sita_laxman_and_hanuman.jpg>*


 *பொதுவாக ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில்
வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை
பேரானந்தத்துடன் ரசித்து கேட்பதாக ஒரு ஐதீகம்.*
*இதனால்தான் துளசிதாசர் ஸ்ரீ ராமாயண பிரவசனம்(சொற்பொழிவு) தொடங்கும் முன்னர்
பக்தர்களை பிரதட்சனமாக சுற்றி வருவாராம் .அங்கு பக்தர்களுடன் பக்தராக
மாருதியும் எழுந்தருளிருப்பார் என்பதாலேயே அனுமனை வணங்கும் விதமாக துளசிதாசர்
பக்தர்களை வலம் வந்து வணங்கியபிறகே, தனது சொற்பொழிவை துவக்குவாராம்.*
*அதனாலேயே, ராமநாமத்தை சொல்லும் முன்பாக அந்த இடத்தில் ஒரு சிறிய
மனையைப்போட்டு அதன்மீது ஒரு சுத்தமான துணியை போர்த்தி ஒரு இருக்கை
தயார்செய்துவைத்துவிட்டுத்தான் ராமாயண உபன்யாசம் துவக்கப்படுவது வழக்கம்.*
*நிச்சயம் அங்கு அனுமன் வந்து அந்த மனையில் அமர்ந்து ராமகாதையை மனம்குளிர்ந்து
கேட்பார் என்பது இதுநாள் வரை பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.*
*ஆனால், நிஜத்தில் அப்படி ஒருக்காட்சியே அரங்கேறி பார்ப்பவர்களை சிலிர்க்க
வைத்திருக்கிறது.*

*இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நகரம்தான்
 ரட்லம்(Ratlam).*
*
<http://4.bp.blogspot.com/-uuUNEL50Rok/Ub8zX4kQXXI/AAAAAAAAAXM/4dPpDFNZ8uQ/s1600/53509833.jpg>*

* இங்கு காளிகாமாதா எனும் மிகவும் பிரபலமானதொரு கோவில் நகரின் மையப்பகுதியில்
அமைந்துள்ளது.*




*
<http://3.bp.blogspot.com/-L56InMjXypw/Ub8zYdbybpI/AAAAAAAAAXU/1TcNI3B45pI/s1600/kalikamata_ratlam_138.jpg>
*
*இங்கு சமீபத்தில் ஸ்ரீராமாயண சரித்தித்தை உபன்யாசம் செய்ய ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.*

 *ராமா..ராமா..என உபன்யாசகர் பாட ஆரம்பித்ததும்...அங்கே அழகான ஒரு வெண்குரங்கு
வந்து அதை ரசிக்கத்தொடங்கிய அழகை நீங்களே பாருங்கள்!*

   *
<http://1.bp.blogspot.com/-z6E1JtOYU8g/Ub8xZbDwpEI/AAAAAAAAAWM/yWz9Q60dI-4/s1600/247107_10150198535911186_4530508_n.jpg>*
  *மைக்கைப்பிடித்தபடி  ஸ்ரீராமன் புகழை கேட்கும் காட்சி*

   *
<http://4.bp.blogspot.com/-RVYNvTEoKjk/Ub8xZhDdvPI/AAAAAAAAAWU/M2c31Zt7peI/s1600/Ratlam-Hanuman2.jpg>*
  *ஸ்ரீராமன் புகழ்பாடிய உபன்யாசகரை தழுவும் காட்சி*

   *
<http://1.bp.blogspot.com/-zBVYHd2KAD8/Ub8xYwFVsJI/AAAAAAAAAWI/L8l-DcJaCZU/s1600/Ratlam-Hanuman3.jpg>*
  *ஸ்ரீராமன் புகழ் பாடிய உபன்யாசகரை ஆசீர்வதிக்கும் காட்சி*

   *
<http://2.bp.blogspot.com/-fHeFaApQlMY/Ub8xaMqO8HI/AAAAAAAAAWc/d3qb1qXanL0/s1600/Ratlam-Hanuman4.jpg>*

*ஸ்ரீராமனுடைய பாதங்களை மலர் எடுத்து பூஜிக்கும் காட்சி*
   *நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே*
*தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே*
*சென்ம மும் மரணமும் இன்றித்தீருமே*
*இம்மையே இராம என்றிரண் டெழுத்தினால்.....!*

*ஓராயிரம் மகப்புரி பயனை உய்க்குமே*
*சுராதிபர் செல்வமும் புகழும் நல்குமே*
*வீராய் எனும் பாவங்களை வேரறுக்குமே*
*இராம என் றொரு மொழி இயம்பும் காலையே...!*

*மும்மை சால் உலகுக்கு எல்லாம் *
*மூல மந்திரத்தை, முற்றும்*
*தம்மையே தமர்க்கு நல்கும்*
*தனிப்பெரும் பதத்தை, தானே*
*இம்மையே எழுமை நோய்க்கும்*
*மருந்தினை, 'இராமன்' என்னும்*
*செம்மைசேர் நாமம் தன்னைக்*
*கண்களின் தெரியக் கண்டான்...!*

*இப்படி ராமநாமத்தின் சிறப்புகளை கம்பர் பாடியதன் சுவையை இந்த வானரமும்
அனுமனாகவே வந்து ரசிக்கிறதோ.*

 * ​K.Raman​*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply via email to