*கரிநாள் என்றால் என்ன?*

தினசரிநாட்காட்டிகளில்,

சித்திரை 6,15

வைகாசி 7, 16, 17

ஆனி 1,6

ஆடி 2, 10, 20

ஆவணி 2, 9, 28

புரட்டாசி 16, 29

ஐப்பசி 6, 20

கார்த்திகை 1, 4, 10, 17

மார்கழி 6, 9, 11

தை 1, 2, 3, 11, 17

மாசி 15, 16, 17

பங்குனி 6, 15, 19

என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர்.

இந்நாட்களில் விசேடங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர்.

இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை)
இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன.
 அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே
சொல்லப்படுகின்றன.


கரிநாட்கள் என்றால் என்ன?

ஏன் இந்நாட்களைக் கரிநாட்களாகக் குறிக்கின்றனர்?

அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


அன்பன்

கி.காளைராசன் (Mintamil Group)
 Vanakkam subbu replied as follows:

*தென்னிந்தியாவில்தான் கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன. மேலும் சில நூறு
ஆண்டுகளுக்கு முன் இந்த கரிநாட்கள் பார்க்கப்படுவதில்லை. சரி இதற்கு ஆதாரமாவது
வேறெங்காவது தேடினோமென்றால் கிடைக்கவில்லை. தமிழில் ஜோதிடத்திற்கு முதன்மையான
நூலான ஜோதிட கிரஹ சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூலில் கவி கொடுத்துள்ளாரே
தவிர அதற்கான காரணத்தை ஆசிரியர் கொடுக்கவில்லை.*

*அந்த கவி இதோ உங்கள் பார்வைக்கு:*

*இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம்  *சித்திரை 6,15

*ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம்  *வைகாசி 7, 16, 17

*அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ *ஆனி 1,6 ஆடி 2,

*டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும் *ஆடி 10, 20 ஆவணி 2,

*ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே *ஆவணி 9, 28, புரட்டாசி 16,

*டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில் *புரட்டாசி 29 ஐப்பசி 6

*முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம் *கார்த்திகை 1, 10, 17

*முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள். *மார்கழி 6, 9, 11

*உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று *தை 1, 2, 3

*வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா *தை 11, 17

*துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும் *மாசி 15, 16, 17

*சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும் *மாசி  17 பங்குனி 6

*பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம் *பங்குனி  15, 19

*பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு*

*கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட*

*கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே*


*மேற்சொன்ன கவியை நன்கு படித்து பாருங்கள். இந்த கவியில் எந்தெந்த தேதிகள்
கரிநாட்கள் என்று சொல்லியிருக்கிறாரே தவிர காரணத்தை சொல்லவில்லை.*






*Thyaajyam is the portion of weekest or worst portion of that
particular period of time.Some thyaajyams are:Thithi thyaajyamNakshathra
thyaajyamVaara thyaajyamMaasa thyaajyam which is also well known as " Kari
Naal " .*


-- 

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

  * V a  n  a  k  k a  m    S u  b b u  *


<https://www.facebook.com/photo.php?fbid=504008423030829&set=a.460816664016672.1073741828.460742874024051&type=1>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply via email to