<http://1.bp.blogspot.com/-ZBNx6hUCog0/UwbLVBjUiyI/AAAAAAAArJ8/HQXaBAUzpDA/s1600/Puliothai.jpg>



 *திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு சம்பத் என்பவரருக்கு
நன்றி.**.*

*! **தேவையான பொருள்கள்**:*

*பச்சரிசி **– 5 **கப்*
*நல்லெண்ணை **– 50 **கிராம்*
*மிளகு **– 200 **கிராம்*

*புளிக்காய்ச்சல் தயாரிக்க*
*புளி **– 100 **கிராம்*
*நல்லெண்ணை **– 100 **கிராம்*
*கடலைப் பருப்பு **– 100 **கிராம்*
*உளுத்தம் பருப்பு **– 100 **கிராம்*
*வெந்தயம் **– 10 **கிராம்*
*சீரகம் **– 5 **கிராம்*
*கடுகு **– 10 **கிராம்*
*பெருங்காயம் **– **சிறிது*
*முந்திரிப்பருப்பு **– 50 **கிராம்*
*உப்பு**- **தேவையான அளவு*
*மஞ்சள் தூள் **– 10 **கிராம்*

*செய்முறை**:*

*புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்**.*
*புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்**.*
*நல்லெண்ணையை வாணலியில் வைத்து**, **அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்**.*
*எண்ணை காய்ந்ததும்**, **அதில் கடுகு**, **கடலைப் பருப்பு**, **உளுத்தம்
பருப்பு**, **வெந்தயம்**, **சீரகம்**, **பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு
நன்றாகச் சிவக்க வறுக்கவும்**.*
*பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு**, **கெட்டியாக
கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும்**.*
* 2 **நிமிடம் கொதித்தவுடன்**, **உப்பு**, **மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக்
கிளறவும்**.*
*புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு**, **இறக்கி எடுத்து வைக்கவும்**.
[**மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்**'**மென்று மணமாக
இருக்கவேண்டும்**. **சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை
வரும்**.]*
*மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து**, **ஒரு அகலமான தட்டில் அல்லது
பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்**.*
*சாதம் ஆறியதும்**, **கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்**.*
*பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை**, 50 **கிராம் நல்லெண்ணையோடு
கலந்து**, **அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்**.*



--
Posted By Blogger to
Raman's<http://kramans.blogspot.com/2014/02/blog-post_20.html>at
2/20/2014 07:43:00 PM

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply via email to