திருமணம்
திருமணம் என்பது இந்து தர்மப்படி பஞ்ச (ஐந்து) மகா கடமைகளைக் கொண்டது. இதனை
நிறைவேற்றவே ஆண், பெண் தம்பதிகள் ஆகிறார்கள். திருமண பந்தம் எனப்படுவது
தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நன்மை பயப்பதாகவே அமைய வேண்டும்.
திருமணமான பின் செய்ய வேண்டிய ஐந்து கடமைகள் (யஜ்ஞங்கள்) என்ன என்பதை நமக்கு
வேதங்கள் தெரிவிக்கின்றன! 1.பித்ரு கடமைகள் 2.பிரம்ம கடமைகள் 3.ரிஷி கடமைகள்
4.மனுஷ்ய கடமைகள் 5.பூத கடமைகள்.
பித்ரு கடமைகள்
பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய நித்ய, நைமித்ய கடமைகளை தவறாமல் செய்ய
வேண்டும். பித்ரு லோகம் எனப்படுவது இறந்த பின் ஜீவன்
காத்திருக்குமிடம்.(ஸ்வர்க்க நரகத்திற்கு போகு முன்) பித்ரு லோகத்திற்கு
போய்ச்சேருகிறது. வைதீகம் (மேலுலக ) புண்ணியம் செய்யப்படும் காரியங்களே
புண்ணியத்தைக் கொடுக்கிறது.
பிரம்ம கடமைகள்
பிரம்ம கடமை என்பது வேதத்திற்குச் செய்யப்படும் கடமைகள் ஆகும். முதற்படியாக
குலகுருவிற்கு தங்களின் கடமைகளைச் செய்ய வேண்டும். இரண்டாவதாக
குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள். மூன்றாவதாக குல ஷாக்கா எனப்படும்
வேதத்திற்கு அடுத்த நிலையிலிருக்கும் பகவத் கீதையிலிருந்து அல்லது விஷ்ணு
சகஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் நித்திய பாராயணம் செய்ய வேண்டும்.
ரிஷி கடமைகள்
ரிஷிகளுக்கும் ரிஷி பரம்பரைகளுக்கும் சேவை செய்வது. ரிஷிகளைப் பற்றி புகழ்ந்து
பேசுவது, வேதங்களைப் பற்றிய அறிவைப் பேசுவது,ரிஷி கடமைகள் மிகவும்
புண்ணியத்தைக் கொடுக்கிறது. ஐந்து கடமைகளுள் முதல் மூன்று கடமைகளே மிகவும்
புண்ணியத்தைக் கொடுப்பதாய் வேதங்கள் கூறுகிறது.
மனுஷ்ய கடமைகள்
தன் சக காலத்தில் வசிக்கும் தொடர்புடைய மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய
கடமைகள். (உறவினர்கள்,நண்பர்கள்,உடன் பிறந்தோர்கள் ) நம்மிடம் வைக்கப்பட்ட
எதிர்பார்ப்புகளை முறையாகச் செய்ய வேண்டும்.சக்தி மீறிய எதிர்பார்ப்புகளை
மரியாதையுடன் தவிர்த்து விட வேண்டும். சக்திக்கு ஏற்ப நியாயமானதாய் இருந்தால்
செய்ய வேண்டும். இதன் விதி: இப்பிறவியிலேயே பயன் தருவதாகச் செய்ய வேண்டும்.
பூத கடமைகள்
மனிதர்களைத் தவிர ஏனைய ஆறறிவு,ஐந்து அறிவு ஜீவன்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
பூத கடமைகள். அதனதன் எதிர்பார்ப்புகளைச் செய்ய வேண்டும்.நம் தொடர்புடைய
உயிரிகளுக்கு உரிய கடமைகளைச் செய்து இயற்கையை நன்றியுடன், நேசிக்க வேண்டும்.
இதில் பூதம் எனப்படுவது பஞ்ச பூதங்கள் ஆகும். பஞ்ச மகா கடமைகளில் மிக
முக்கியம் ரிஷி கடமைகள்,. முதல் போதனை தெய்வ கடமைகள்.
திருமணத்தின் போது பஞ்ச மகா கடமைகளை மணமக்கள் இருவரும் துவக்குகிறார்கள்.
‘நாம் இருவரும் ஐந்து கடமைகளையும் நிறைவேற்றுவோம்’ என மணமகன் மணமகளுக்கு
வாக்குக் கொடுப்பதே ‘வாக்குப்பட்டவள்’ (வாக்கப் பட்டவள் ) என்றானது. ‘கற்பு’
என்பது: கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது என வேதங்கள் கூறுகிறது. எனவே கற்பு
என்பது இரு பாலருக்கும் பொது!
நமது தேசம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்சொன்ன கடமைகளை நெறி
பிறழாமல் செய்து வந்தது. அதன் பின் அந்நியர்களின்
ஆக்கிரமிப்பால்(சாஸ்திரங்களின் இருண்ட காலங்கள்) சடங்குகளும் சம்பிரதாயங்களும்
பொருள் தெரியாமல் போய் விட்டது. இளைய தலை முறையினர் இதனைப் பின்பற்றுவார்கள்
என நம்புவோம்!
இந்து வைதிகத் திருமணங்களில் ஒவ்வொரு சமூக மக்களுக்கு ஏற்ப நடைமுறைகளும்
சம்பிரதாயங்களும் வேறுபடும். திருமணத்திற்கு ஐந்து அம்சங்கள் முக்கியமானவை. 1.
(வாங்நிச்சயம்) நிச்சயதார்த்தம். 2. (வரப்ரேஷணம்) மணமகனை வரித்தல் 3. பெண்ணைத்
தானம் செய்தல் (கன்யாதானம்) 4. மணமகன் மணமகளின் கரம் பற்றுதல் (பாணிக்ரஹனம்)5.
சப்தபதீ (ஏழு அடிகள் வைப்பது).
வைதீகத் திருமணத்தில் மிகவும் முக்கியம் சப்தபதீ! இது இல்லாத திருமணத்தை
வைதீகம் ஏற்காது.வேத காலங்களில் தாலி கட்டுவது இருந்ததாகத் தெரியவில்லை.இது
ஒரு பிற்கால ஏற்பாடே!
நன்றி: மன்னங்காடு எஸ். முத்துக்கண்ணு
--
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
[image: gautam's Avatar] * Vanakkam Subbu* [image: gautam's Avatar]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.