*வெற்றியைக் காண**ச்** சிறந்த வழிகள் எவை?*


* செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு
உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.*

 *- ஜேம்ஸ் ஆலன்.*

* உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உனக்குள்ளேயே
குடிகொண்டு இருக்கின்றன.*

 *- சுவாமி விவேகானந்தர்.*

* தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக்
கொள்கிறது.*

 *- எமர்சன்.*

* வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.*

 *- நெப்போலியன்.*

* அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் தேர்வை வைக்கிறது.
பின்னர் பாடம் கற்பிக்கிறது.*

 *- வெர்ணன்.*

* வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதுபோலத்தான் வாழ்வில் உயர்வதும்.*

 *- ரூசோ.*

 * அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக
நினைப்பவன் புத்திசாலி.*

 *- சாணக்கியன்.*

* சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே வாழ்க்கையை சிறப்பான
வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.*

 *-டென்னிசன்.*

* மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;மனிதனை வெறுக்காதே.*

 *- ஷேக்ஸ்பியர்.*

* எல்லாத் தடைகளையும் தாண்டி, எடுத்த செயலை நன்னெறிப் பாதையில் முடிப்பவனே
உண்மையான மனிதன்.*

 *- துளசிதாசர்.*

* நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;அது திரும்பிவராது.*

 *- ஜேஷி.*

 * அறிவு மௌனத்தைக் கற்றுத்தரும். அன்பு பேச்சைக் கற்றுத்தரும்.*

*- ரிக்டர்.*

 * உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.*

*- ஷெல்லி.*

 * தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.*

*- சாணக்கியன்.*

 * அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை
அனைவருக்கும் செய்வது.*

 *- ரஸ்கின்.*

* வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.வேறு
குறுக்கு வழிகள் இல்லை.*

 *- எட்மண்ட் பர்க்.*

* பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.*

 *- ஹிட்லர்.*

* வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.*

 *- விவேகானந்தர்.*

* மனம் சொர்க்கத்தை நரகமாக்கும்/நரகத்தை சொர்க்கமாக்கும் தன்மையுடையது.*

 *- மில்டன்.*

* தீயுள்ள இடத்தில் சூடுண்டு; சூடுள்ள இடத்தில் தீயுண்டு. அறிவுள்ள இடத்தில்
நினைப்புண்டு; நினைப்புள்ள இடத்தில் அறிவுண்டு.*

 *- ஜேம்ஸ்ஆலன்.*

* உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால்,
வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.*

 *- எடிசன்.*

*தொகுப்பு:- கணேஷ் அரவிந்த்.*
-- 

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

   *V a n a k k a m   **  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to