செவ்வாய் தோசம் ! மாங்கல்ய தோசம் !- ஹேமா
மனிதர்களுள் இந்த தோசம் ஆனது அனேகம் பேருக்கு வருவதாக இருக்கும். இதில்
ஜோதிடர்கள் நிலை பலவாறு இருக்கிறது,
ஒன்று சந்திர லக்னம் ஜன்ம லக்னம் என்ற இரண்டு லக்னம் பொருத்தவரை எந்த லக்னம்
மட்டுமே அவர்கள் பார்த்து இதனை உறுதி செய்கிறார்கள் என்ற நிலை. சிலர் சந்திர
லக்னம் மட்டுமே பார்த்துச் சொல்லுவர், சிலர் ஜன்ம லக்னம் மட்டுமே பார்த்துச்
சொல்லுவர்.
செவ்வாய், மங்களன் என்று அழைக்கப்படுகிறார் அதாவது மங்களம் பொருந்தியவன்
மங்களம் கொடுக்க வல்லவன் எனப் பொருள். திருமணத்திற்கு மங்களம் பொருந்தியவை
என்பது அவசியம். அப்படி இருக்க மங்களன் என்ற செவ்வாய் எந்த ஸ்தானத்தில்
இருந்தால் அவர் திருமணத்திற்க்கு அதன் வாழ்விற்கும் பங்கம் விளைவிக்கிறார்
என்றால் செவ்வாய் நெருப்பு ஆனவர் அவருக்கு மூன்று கொடிய பார்வை கொண்டவர் அது
4,7,8. அவர் இருக்கும் வீட்டையும் தன் யுத்த பலத்தால் ஆட்கொண்டு அவர் சக்தியை
அந்த ஸ்தானத்தில் பிரவேசிக்க செய்கிறார். அவர்* 2, 4, 7, 8, 12* இல் இருப்பது
செவ்வாய் தோசம் எனப்படும்.
2 ஆம் இடம் இருக்கும் செவ்வாய் கண் காது மூக்கில் செவ்வாய் பலம்
பிரவேசிக்கும். 4 ஆம் பார்வையாக 5 ஆம் இடம் புத்திர பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்
முன்னோர்கள் சாபம் வாழ்க்கை முன்னேற்றத்தில் இடையூறு தரும். புத்திரப்
பேற்றில் தடை ஏற்படுத்தும், குழந்தை பிறப்பில் குறை ஏற்படுத்தும். அமானுஷ்ய
சக்திகள் தொந்தரவு ஏற்படுத்தும்.
7ஆம் பார்வையாக 8 ஆம் வீடு ஆயுள் ஸ்தானம் மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கப்
படும் அந்த பார்வை ஆயுளுக்குக் கண்டம் விளைவிக்கும், விபத்துக்கள்
விளைவிக்கும். பாலின மறைவிட ஸ்தானம் 8 ஆம் இடம் அதில் தீய பார்வை தனது பால்
குறி இடங்கள் அங்கங்களில் காயம் நோய் ஏற்படுத்தும்.
8 ஆம் பார்வை பாக்யா ஸ்தானம் ஆனா 9 ஆம் வீடு கெடுக்கும் வாழ்க்கை துணை
வீட்டார் எதிரி ஆவது தந்தைக்குப் பங்கம் விளைவிக்கும்.
4 ஆம் இடம் இருக்கும் செவ்வாய் 4 ஆம் பார்வையாக 7 ஆம் கல்யாண வீடு திருமணம்
ஸ்தானம் கல்யாண வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கிறார்.
7 ஆம் பார்வையாக 10 ஆம் இடம் தொழில்/ஜீவன ஸ்தானம் பங்கம் விளைவித்து பஞ்சம்
தரித்திரியம் ஏற்படுத்தும்.
8 ஆம் பார்வையாக 11 ஆம் இடம் லாப ஸ்தானம் பங்கம் ஏற்படுத்தும் வாழ்க்கை துணை
எண்ணிக்கை அதிகப் படுத்துதல் போன்றவை தரும்.
7 ஆம் இடம் இருக்கும் செவ்வாய் 4 ஆம் பார்வையாக 10 ஜீவன ஸ்தானம் கெடுக்கும், 7
ஆம் பார்வை லக்னம் உடல் உயிரை கெடுக்கும், 8 ஆம் பார்வை குடும்பம் பிரிவினை,
தனம், கல்வியை கெடுக்கும்.
8 ஆம் இடம் இருக்கும் செவ்வாய் ஆயுள் பங்கம் விதவை கோலம் புக செய்யும். 4 ஆம்
பார்வை 11 இடம் 7 ஆம் பார்வை குடுக்ம்ப தான ஸ்தானம் கெடுக்கும் 8 ஆம் பார்வை 3
ஆம் இடம் ஆயுள் மற்றும் இளய சகோதரம் வீரம் வீரியம் ஜெயம் கெடுக்கும்.
12 ஆம் இடம் இருக்கும் செவ்வாய் 4 ஆம் பார்வையாக 3 ஆம் இடம் ஆயுள் இளைய சகோதர
ஸ்தானம் பாதிப்பு தரும்,
7 ஆம் பார்வையாக ரோகம் சத்ரு ஸ்தானம் பாதிப்பு தந்து நோய் நொடியான கடன் எதிரி
பயம் உண்டான வாழ்க்கை ஏற்படும். 8 ஆம் பார்வையாக திருமண 7 ஆம் ஸ்தானம்
பாதிப்புத் தரும்.
இதனாலயே செவ்வாய் தோசம் ஆகிறது. இத்தோடு மற்ற பாவ கிரஹம் சேர்ந்து இது
பார்க்கும் இடத்தை பார்த்தால் நிலமை மோசமாகி அந்த ஸ்தானம் அழிந்து விடும்.
இதன் பார்வை படும் இடம் சுபக் கிரஹம் பார்த்தால் பரிஹாரம் எளிதில் பழிக்கும்.
இதற்கு மூன்று பார்வை போல் குருவிற்க்கும் மூன்று பார்வை ஆகையால் மனித
வாழ்வில் அனைவருக்கும் அனைத்தும் நல்ல முறையில் கிடைக்க வாய்ப்பில்லை இதுவே
மனித வாழ்வின் விதி.
சில ஜோதிடர்கள் வெறும் சில மணி நேரம் அரை குறையாக பார்த்தும் பார்க்காமலும்
செவ்வாய் தோசம் உண்டு இல்லை என்று கூறி நிலமைக்கு ஏற்றார் போல் சமாளித்து
அனுப்பி விடுவர். உண்மையில் செவ்வாய் தோசம் என்பது செவ்வாய் பலவீனம்
அடைந்தாலும் பலம் அடைந்தாலும் அதே சரிசம நிலை உள்ள ஜாதகருக்கு சேர்ப்பதே அதி
உத்தமம்.
நட்சத்திரம் மட்டும் பார்க்கும் ஆசாமிகளுக்கு நோட் செய்யவும் ! செவ்வாய் நிலை
பொறுத்து ஜாதகம் சேர்த்த வேண்டும். செவ்வாய் சுக்கிரன் போன்ற காம வீரியம் உள்ள
கிரஹங்கள் பொறுத்தே ஜாதகம் சேர்த்த வேண்டும். இல்லையேல் திருமண தாம்பத்திய
நிலை திருப்தி இன்றி நரகமாகும்.
சில ஜோதிடர்கள் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கிறது உச்சம் பெற்றிக்கிறது ஆதலால்
தோஷம் இல்லை என்று சொல்லி விடுவார்கள் !அப்படி ஆட்சி உச்சம் பெற்று
இருந்தாலும் சனி, ராஹூ, கேது, சூரியன் பார்வை செய்தால் அந்த தோஷம் நிச்சயம்
பரிஹாரம் கிடையாது. அதுவும் சனி பார்த்தால் அந்த ஸ்தானம் முடிவு எழுதி அனுப்ப
பட்டது.இன்னும் ஒன்று செவ்வாய்க்கு சாதகமான லக்னததிற்க்கு உடைய ஜாதகருக்கு
தோஷம் இல்லை என்று கூறிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு எந்த லக்னம்
ஆனாலும் சரி செவ்வாய் லக்னம் ஆனால் விருச்சிக மேஷம் ராசி லக்னத்தவருக்கும்
செவ்வாய் தோஷத்தில் கெடில் செவ்வாய் தோஷம் உண்டு.
ஸ்ரீ ராமர் ஜாதகமும் செவ்வாய் தோஷம் கொண்டது எத்தனை பேருக்குத் தெரியும். ஸ்ரீ
ராமர் கடக லக்னம் கடக ராசி ஆகும். அவருக்கு 7 ஆம் இடத்தில் மகரம் ராசியில்
செவ்வாய் உச்சம். கடக ராசி கடக லக்னம் இருந்து பாக்ய, பூர்வ புண்ணிய மூல திரி
கோணம் 5, 9 சுப இடத்திற்க்கு அதிபதி செவ்வாய் அவர் உச்சம். இது போக சுப
லக்னாதிபதி சந்திரன் லக்னத்திற்கு உச்சமான குரு இரண்டும் செவ்வாயை 7 ஆம்
பார்வையாக பார்க்கிறார்கள். இயற்கையில் குரு பார்வை கோடி புண்ணியம். இப்படி
சூழ் நிலையில் சில ஜோதிடர்கள் செவ்வாய் தோஷம் இல்லவே இல்லை என்பார்கள் ! ஆனால்
அவருக்கு செவ்வாய் தோஷம் உண்டு.
விஷ்வாமித்திரர் முதல் அனைத்து ஞானிகள் பரிஹாரம் செய்ய முற்பட்ட போதும் விதியே
வென்றது. திருமணத்திற்க்குப் பின்பு செவ்வாய் தோஷத்தால் எவ்வளவு இன்னல்கள்
நான் சொல்லித் தெரிய வேண்டாம். சீதை பிரிவு, துணை மீது சந்தேக நிர்பந்த சூழ்
நிலை. 4 ஆம் பார்வை ஜீவனம் பாதிக்கப் பட்டு வனவாசம். குடும்பத்தை விட்டு
பிரிவு எட்டாம் பார்வையால். 7 ஆம் பார்வையால் பிறந்த அரச வாழ்க்கை விட்டு
வெளியேறுதல்.
அதற்காகப் பரிஹாரமே இல்லையா என்று வினவ வேண்டாம். உண்டு ராமாருடன்
பாஞ்சாலியுடன் யோசிக்க அவசியம் இல்லை அவர்கள் பரமார்த்த தர்மம் ஸ்தாபிக்க
பிறந்தவர்கள். நாம் நமக்கான தர்மத்தில் பரிஹாரம் செய்து கொள்ள ஆண்டவன்
நிச்சயம் அருள் புரிவார்.சம்பந்தப் பட்டவர் ஆண்டவன் ஆத்மார்த்தமாக நினையாமல்
கடமைக்கு என்ன வென்று தெரியாமல் செய்யும் பரிஹாரம் பலன் அளிக்காது.
பெற்றோர் மன்றாடினாலும் தோஷம் கொண்டவர் ஆத்மார்த்தமாக செய்தால் மட்டுமே பலன்.
*அறிவியல் ரீதியாக எப்படி ஜோதிடம் செவ்வாய் தோஷம் ஒத்து போகிறது என்று
கூறுகிறேன். *
*செவ்வாய் நெருப்பு உஷ்ணம் தன்மை கொண்டவர் ஆதலால் அவர் 2,4,7,8,12 ஸ்தனங்கள்
உரிய உடல் பாகங்களில் பிரவேசித்து உஷ்ணத்தை ஏற்படுத்துகிறார்.*
*அது போக தனது 4,7,8 பார்வையாலும் உஷ்ண கதிர் வீச்சால் அந்த ஸ்தான பாகங்கள்
உஷ்ணம் அடையச் செய்கிறார். ஆதலால் அந்த ஸ்தானம் தாம்பத்திய உறவு உறுப்புக்கள்
புத்திரப் பேறு உறுப்புகள் போன்றவை அடக்கமாகும் அவைகள் உஷ்ணம் ஆகி கதிர்
வீச்சால் பாதிக்கப் படும். அவ்வளவே செவ்வாய் தோஷம். *
*இதற்கான உஷ்ணம் போக்கக் கூடிய பரிஹாரம் ஆண்டவன் அனுக்கிரகத்தால் உண்டு.*
[image: திருமணத் தடை செய்யுமா செவ்வாய்?]
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க செயல் ஆற்றல்
உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம் பராக்கிரமம், வீரதீர செயல்கள்,
அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை,
தர்மம், நேர்மை, நியாயம், ஆண்மை போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம்.
போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, அதிகார பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை,
வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றிற்கான அதிபதி செவ்வாய். நம் உடலில்
முக்கியமாக ரத்த சம்பந்தமான ஆண்மை, வீரியம், உடல் உறவு போன்ற விஷயங்கள் சீராக
இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங் கள், உடல் திறன், வீரதீர
செயல்கள், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ் பெறவும், ரியல் எஸ்டேட்,
பில்டிங் காண்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும்
மருத்துவர் பணி, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருட்
கடாட்சம் அவசியம் தேவை*
*செவ்வாயும்-திருமணமும்பெண், பையனின் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்துவிட்டு நல்ல
நட்சத்திரமா, எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று கேட்பார்கள். மற்றபடி ஜாத கம்
எப்படி இருக்கிறது? நல்ல தசா யோகங்கள் இருக்கிறதா, வளமான வாழ்க்கை அமையுமா,
என்ன தோஷங்கள் இருக்கின்றன என்பதை பற்றி பலர் அலட்டிக் கொள்வதில்லை.
நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்பது ஒர் சம்பிரதாய வழக்கம். நட்சத்திரப்
பொருத்தம் மட்டும் ஒரு மண வாழ்க்கையை தீர்மானிக்காது. ஜாதக கட்டத்தில் உள்ள
அமைப்புக்கள்தான் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அந்தவகையில் சரியான
தோஷ ஜாதகத்தை அதே போன்ற சரியான தோஷ ஜாதகத்துடன் இணைப்பதன் மூலமே சுப யோகமான
திருமண வாழ்க்கை அமையும்.முக்கியமான தோஷங்கள்அங்காரகன் என்ற செவ்வாயால்
ஏற்படக்கூடிய தோஷம், மாங்கல்ய தோஷம். விஷக்கன்யா தோஷம், களத்திர தோஷம், சர்ப்ப
தோஷம், சூரிய தோஷம், புனர்பூ தோஷம், இவற்றுள் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம்,
மாங்கல்ய தோஷம் ஆகியவை மிக முக்கியமானவை. இந்த தோஷ வகை களில் மிகவும்
பிரபலமாகவும், ஒரு வித அச்சத்துடனும் அனைவரும் அறிந்தது செவ்வாய்
தோஷமாகும்.மங்களன் என்றழைக்கப்படும் செவ்வாய் உடலில் ரத்த ஓட்டத்திற்கு
ஆதாரமாக இருப்பவர். உடலில் வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியவர். ஆண் மகனின்
ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து இருந்தால்தான் ஊக்கம், தன்னம்பிக்கை,
ஆண்மை போன்றவை மேம்படும். உடல் உறவில் வீரியத்துடன் ஈடுபட முடியும். பெண்கள்
ஜாத கத்தில் பூப்படைதல், மாதவிடாய், உறவில் இன்பம், உள்ளக்கிளர்ச்சி பாலுணர்வு
ஆகியவற்றை தூண்டக் கூடியவர், செவ்வாய். ஆகையால்தான் தோஷம் என்ற பெயரில்
ஆண்-பெண் ஜாதகத்தை சேர்க்கும்போது செவ்வாய்க்கு மிகுந்த முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. திருமண பந்தத்தில் ஆண், பெண் உடல் உறவு சேர்க்கையே,
வம்சம் பெருகுவதற்கு, மிகவும் முக்கியமானது. இருவருக்கும் அந்த ஆற்றலை
தரக்கூடியவர் செவ்வாய். ஆகையால் தான் திருமணம் என்றவுடன் செவ்வாய்க்கு
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.இத்தகைய வீரியம் மிக்க செவ்வாய் நம்
ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய்
தோஷம் என்கிறோம். இதற்கேற்ப 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய்
இருக்கும் ஜாதகங்கள் இரண்டை சேர்ப்பதன் மூலம், தோஷம் சமன் அடைகிறது. பெரும்பா
லான ஜாதகங்களில் அதாவது 90 சதவிதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி
இருக்கும். தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக செவ் வாய் தோஷம் அறவே
இல்லாத ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு
நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்து தோஷ நிவர்த்தி ஆகி இருந்தால், அதே போல்
2, 4, 7, 8, 12ல் உள்ள ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும். 1, 3, 5, 6, 9, 11ல்
செவ்வாய் உள்ள ஜாதகத்துடன் சேர்க்க கூடாது.செவ்வாய் இருப்பிடமும் உங்கள்
குணமும்லக்னத்தில் இருந்து செவ்வாய் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதைப் பொறுத்தே
நமது குணங்கள் அமைகின்றன. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம், அதாவது செவ்வாய் 2, 4,
7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் பலன்:லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய்
இருந்தால் வீண் பேச்சுகள், விவாதங்கள், முன் கோபம் உண்டு. அதே நேரத்தில்
குணமும் இருக்கும். நியாய தர்மத்தை எடுத்துரைப்பார். குடும்பத்தில் சற்று
டென்ஷனான நிலை இருக்கும். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிராக இருக்கும். ஆகையால்
பேச்சைக் குறைப்பது நலம் தரும்.லக்னத்திற்கு நான்கில் செவ்வாய் இருந்தால்உடல்
உஷ்ண ஆதிக்கம் பெற்று இருக்கும். சொத்து சேரும் யோகம் உண்டு. அடிக்கடி
இடமாற்றம், பயணங்கள் இருக்கும். அரசு உத்யோகம் அமையும். லக்னத்திற்கு ஏழில்
செவ்வாய் இருந்தால்துணிச்சலாக பேசுவீர்கள். எப்போதும் பரபரப்பு, டென்ஷன்
இருக்கும். மூக்கின் மேல் கோபம் வரும். உஷ்ண உபாதைகள் இருக்கும். உடல் உறவில்
நாட்டம் கூடும்.லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்தால்படபடப்பு,
சிடுசிடுப்பு, கோப தாபங்கள், அதிகாரம் செய்தல், மர்ம ஸ்தானத்தில் நோய்கள்
என்று வரலாம். ரத்த காயங்களுக்கும் வாய்ப்புண்டு.லக்னத்திற்கு பன்னிரண்டில்
செவ்வாய் இருந்தால் ஏதாவது சிந்தனையில் மூழ்கி இருப்பீர்கள். படுக்கை சுகம்
குறைவு, எரிச்சல்-கோப தாபங்கள் இருக்கும். சகோதர உறவுகளால் பிரச்னை. இந்தப்
பலன்கள் எல்லாம் பொதுவான கருத்தாகும். அவரவர் ஜாதகம் லக்னம், ராசி
அமைப்பின்படி பலன்கள் மாறுபடும். ஆகையால் செவ்வாய் தோஷ ஜாதகத்தை செவ்வாய் தோஷ
ஜாதகத்துடன் சேர்ப்பது நன்மை தரும். செவ்வாய், தோஷம் மட்டும் கொடுக்காது பிரபல
யோகத்தையும் தரும். செவ்வாயால் இல்லறம் கசக்காது. சரியான ஜாதகங்களை
சேர்ப்பதன் மூலம் இல்லறம் இனிக்கும்.*
*ஜோதிட முரசு மிதுனம் செல்வம் *
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
[image: JEIRLY P] *v **a n a k k a m** S u b b u* [image: # 6 NO BUY
EVER!!! Love Assassin!]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.