- விவேக சிந்தாமணி - பாடல் 19; நன்றி அசோக் குமார்
தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
தியங்கியே கிடந்தது கண்டு
தான்அதைச் சம்புவின் கனியென்று
தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வான்உறு மதியம் வந்ததென்றெண்ணி
மலர்க்கரம் குவியுமென் றஞ்சிப்
போனதுவண்டோ! பறந்ததோ பழம்தான்
புதுமையோ இதுவெனப் புகன்றாள்.
ஒரு வண்டு வயிறுமுட்டத் தேன் குடித்து கிறக்கத்தில் கீழே விழுந்து கிடக்கிறது.
அந்தப் பக்கமாக நடந்து வந்த ஒரு பெண் தரையில் நாவல் பழம் (சம்புவின் கனி)
ஒன்று கிடப்பதாக நினைத்து அந்த வண்டைக் கையில் எடுத்து உள்ளங்கையில் வைத்துக்
கொண்டு அதைப் பார்த்தாளாம்.
கொஞ்சம் போதை தெளிந்த வண்டு லேசாகக் கண்ணைத் திறந்ததாம். அரை மயக்கத்தில்
இருந்த அந்த வண்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததாம் பிரகாசமாக இருந்த
அவள் முகத்தைக் கண்டு நிலா வந்துவிட்டது இது இரவு என்று எண்ணியதாம். சரி....
தான் எங்கு இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்க்க....... மிருதுவாக
இருந்த அவள் கையை தாமரை மலர் என்று எண்ணியதாம். இரவானால் தாமரை மூடிவிடும்
தான் உள்ளே அகப்பட்டு இறந்துவிடுவோம் என்று எண்ணி வேகமாகப் பறந்ததாம்.
இதைக் கண்ட அந்தப் பெண்....இது என்ன புதுமை பழம் பறக்கிறதே! என்று வியந்து
சொன்னாள்.
இந்தப் பாடலில் உள்ள கற்பனை ரொம்பவே ரசமானது. ஆனால் இந்தப் பாடலில்
பொதிந்துள்ள அல்லது தற்செயலாய் அமைந்துள்ள அந்த வரியின் மூலம் ஒரு அறிவியல்
உண்மையையும் சொல்ல விரும்புகிறேன்.
முகநூலில் சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையைப்
படித்தேன். அதன் சாரம் இதுதான்...மகரந்தச் சேர்க்கை மூலமாக இனச் சேர்க்கை
நடைபெறும் தாவரங்களின் பூக்கள் அயல் மகரந்தச் சேர்க்கைக்காக அவை வண்டினங்களை
நம்பி இருக்கின்றன அவற்றை ஈர்க்க தாவரங்களானது தேனை உற்பத்தி செய்கிறது.
தேனைக் குடிக்கும் வண்டுகள் மூலம் மகரந்தத்தூள் ஒரு பூவிலிருந்து இன்னொரு
பூவிற்கு பரவுகிறது. இது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தாவரங்கள் தங்கள்
மகரந்தம் மட்டும் அதிக அளவில் பரவ விரும்புகிறது என்றும் அதற்கு அவை அதிக
அளவில் தேனீக்களை ஈர்க்க வேண்டியிருக்கிறது. இதற்காக தாவரங்கள் ஒரு சதிவேலை
செய்கிறன.அது என்னவென்றால் தான் சேகரிக்கும் தேனில் அவை ஒருவித போதை தரும்
ரசாயனத்தைச் சேர்க்கின்றன. இவற்றைக் குடிக்கும் அந்த வண்டுகள் அந்ததப் பூவின்
மதுவுக்கு அடிமையாகின்றன. இதனால் அந்த வண்டுகள் ஆதே தாவரத்தைத் தேடிச் சென்று
தேன் குடிக்கின்றபடியால் அதிக அளவில் அந்தத் தாவரத்திலிருந்து மகரந்தச்
சேர்க்கை நடக்கவைக்கிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது.
இந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்ததும் எனக்கு முன்பு படித்த
மேற்ச்சொன்ன பாடல்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பாடலில் மேலே சொன்ன ஆய்வுக்க்
கருத்து சொல்லப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியதே அதற்கு காரணம்.
இந்தப் பாடலின் முதல் வரியில் தேன் குடிக்கின்ற வண்டானது மதுவைக் (மது
என்பதற்கு தேன் என்றும் போதை தரும் பானம் என்றும் பொருள் உண்டு) குடித்து
தியங்கிக் கிடந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. தியங்குதல் என்பது போதையில்
மயங்கிக்கிடப்பதை குறிக்கும் வார்த்தை (அறிவு மயங்குதல்). ஆதலால் மது என்பது
தேனில் தாவரங்கள் சேர்க்கும் போதைப் வஸ்துக்களாகக் கொள்லலாம். இந்தப் பாடலின்
முதல் அடி மேற்ச்சொன்ன ஆய்வுக் கட்டுரை முடிவை சொல்வதாகவே எனக்குப் படுகிறது.
அல்லது இது என் மனப் பிரமையாகக் கூட இருக்கலாம்.
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S
u b b u*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.