*என் பாசமிகு தம்பி பழநியப்பன் ஆலய அறங்காவலராகத் திகழும் மும்பை பத்லாப்பூர் நாக காயத்ரி அம்மன் ஆலயக் குடமுழுக்கு விழாவில் மார்ச் 8 ஆம் தேதி கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அங்கு சிவாச்சாரியார்களிடமும் ஸ்தபதிகளிடமும் கலந்து உரையாடிய பின் காயத்திரி மந்திரம் பற்றிய பல செய்திகளை அறிய முடிந்தது. [குறிப்பாக விக்னேஷ் சிவாச்சாரியார் முனைவர் பிச்சை ஐயா (பிள்ளையார்பட்டி) விடம் பயின்றவர். அவருடன் அளவளாவிய போது நான் ஏற்கெனவே பிச்சை ஐயா அவர்கள் மீது கொண்டிருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. மாணவர்களுக்கு வெறுமனே வேதப் பிரயோகத்தைச் சொல்லி விட்டு கடமை முடிந்தது என்று இராமல் அதன் ஆழமான அர்த்தங்களை எடுத்துக் கூறி வேதத்தை வாழ வைக்கும் அந்தப் பெரிய உள்ளத்தை மனதார வணங்கினேன்.] யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் 4 அல்லது 5 பாகங்களாக திங்கள் தோறும் பகிர்ந்து கொள்ள விழைந்து முதல் பாகத்தைத் தவழ விட்டிருக்கிறேன்,* [image: காயத்திரி மந்திரம்]
*காயத்திரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.ஓம்பூர்: புவ: ஸுவ:தத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ: யோந: ப்ரசோதயாத்அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதைத் தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்குத் தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.காயத்ரி என்ற மந்திரத்திற்குச் சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்திச் சொல்ல வேண்டும்.மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.காலையில் கிழக்கு முகமாகச் சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்குச் சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:யோ -எவர்ந -நம்முடையதியோ -புத்தியைதத் -அப்படிப்பட்டப்ரசோதயாத் -தூண்டுகிறாரோதேவஸ்ய -ஒளிமிக்கவராகஸவிது -உலகைப் படைத்தவரேண்யம் -மிகவும் உயர்ந்ததானபர்கோ -சக்தியைதீமஹி -தியானிக்கிறோம்நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.* *--* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> -- <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> [image: JUSTME] *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
