சமணம், புத்தம் இவற்றிறன் தாய் மதமாகக் கருதப் பெறும் ஆசீவகம் எனும் மதம்.
யானை இருபுறமும் இருக்கும் இலக்குமி, சாஸ்தா என்றும் ஐயனார் என்றும்
பதினெட்டாம் படி கருப்பர் என்றும், ஐயப்பன் என்றும் அழைக்கப் பெறும் ஐயனார்
வழிபாடு இதன் சிறப்பு. நகரத்தார் வீடுகளிலும், அவர்கள் கட்டிய
பள்ளிக்கூடங்கள், ஆலயங்கள் இவைகளில் திகழும் கஜலட்சுமி ஓவியம் அல்லது சுதை
நம்மவர்கள் ஆசீவகத்தைப் பின்பற்றியதற்குச் சான்று. ஆசீவகத்தினர் அறுவகை
நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம்
சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை,ஊழ்கப் பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை
அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு நிறங்களாவன:
1. கருமை & சாம்பல் - துவக்க நிலை – இரவு விண்ணின் நிறம்
2. நீலம் - இரண்டாம் நிலை – விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின்
நிறம்
3. பசுமை - மூன்றாம் நிலை – கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய
நேரத்திற்கு இருக்கும் நிறம்
4. செம்மை - நான்காம் நிலை – கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்
5. மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்
6. வெள்ளை - இறுதி நிலை – கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்
இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:
1. துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய
ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல்
படிநிலையிலிருப்பவர்.
2. இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி
முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.
3. கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து
அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.
ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின்
அழுத்தம் குறைக்கப்படும். இந்த 6 x 3 =18 நிலைகளைக் குறிப்பவையே 18 படிகள்
கொண்ட ஐயப்ப வழிபாடு.
நம்மவர்களில் காணப்பெறும், கருப்பையா, கருப்பன், முத்துக் கருப்பன்,
பெரியகருப்பன், சின்னக்கருப்பன், கருப்பஞ்செட்டி, கருத்தாள், முத்துக்
கருப்பி, கரிய மாணிக்கம், நீலகண்டன், அபூர்வமாகக் காணப் பெறும் நீலமேகம்,
நீலாம்பரி, பச்சையப்பன், பரவலாகக் காணப்பெற்ற சிகப்பி, செந்தாமரை, வெள்ளையன்,
வெள்ளச்சி, வெள்ளையப்பன் போன்ற பெயர்கள் இந்த தத்துவத்தைச் சார்ந்து நாம்
திகழ்ந்ததாலும், தமிழர்களின் தொன்மையான (வழக்கிழந்த) மதமாக ஆசீவகம்
இருப்பதாலும் இன்றளவும் நமது நகரத்தார்களின் பெயர்களாகத் திகழ்ந்து நம்
பாரம்பரியத்தைப் பறைசாற்றுகிறது.
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
[image: Healer]
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
[image: சிவா.ஜி's Avatar] *v **a n a k k a m** S u b b u* [image:
சிவா.ஜி's Avatar]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.