திருமணப் பொருத்தம் காண்பதில் பல்வேறு குழப்பங்கள், தற்பொழுது இருப்பது
எதார்த்தமான உண்மையே! பையன் வீட்டில் ஜாதகப் பொருத்தம் காணும் ஜோதிடர்
பொருத்தம் உள்ளது என்கிறார், பெண் வீட்டில் ஜாதகப் பொருத்தம் காணும் ஜோதிடர்
பொருத்தம் இல்லை என்கிறார், திருமணப் பொருத்தம் காண்பதில் ஜோதிடர்களுக்கு
இடையே இவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்படும் பொழுது, திருமணப் பொருத்தம் காண
வந்தவர்களின் நிலை என்னவாகும்? மேலும் பாரம்பரிய முறைப்படி திருமணப் பொருத்தம்
காணும் ஜோதிடர்கள் ஜாதக ரீதியாகக் கவனிக்கும் விஷயங்களை பற்றியும், இதில் எந்த
அளவிற்கு உண்மை உள்ளது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் ஆய்வுக்கு
எடுத்துகொள்வோம் அன்பர்களே !
1) நட்சத்திரப் பொருத்தம் :
பாரம்பரிய ஜோதிடத்தில் ஜாதகப் பொருத்தம் காணும் பொழுது அடிப்படையாக, அனைத்து
ஜோதிடர்களும் கவனத்தில் எடுத்துகொள்ளும் விஷயம் நட்சத்திரப் பொருத்தமே என்றால்
அது மிகையில்லை, இதன் வழியே பொருத்தம் காண வந்த பையன், பெண், இருவரின் ஜெனன
நட்சத்திரத்தை வைத்து ( தினம்,கணம்,மாகேந்திரம்,ஸ்திரீ
தீர்க்கம்,யோனி,ராசி,ராசி அதிபதி,வசியம்,ரஜ்ஜு,நாடி,வேதை ) எனும் 11
பொருத்தங்களை இருவரின் நட்சத்திரங்களுக்கும் கண்டு, குறைந்த பட்சம் 7
நட்சத்திரப் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம் என்று
பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பு :
நட்சத்திரப் பொருத்ததில் ரஜ்ஜு, வசியம், யோனி,மாகேந்திரம்,ஸ்திரீ தீர்க்கம்
ஆகியவை மிக முக்கிய பொருத்தமாக கவனிக்க படுகிறது, ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில்
பொருத்தம் இல்லை என்று திருமணம் தவிர்க்கப் படுகிறது.
2) ராகு கேது தோஷம் :
ராகு கேது தோஷம் தற்பொழுது வரன் வது இருவரின் பெற்றோர்களும் ஜாதக ரீதியாகக்
கவனிக்கும் அளவிற்கு இருக்கின்றது, இலக்கினத்தில் இருந்து 1,2,5,6,7,8,12 ஆம்
ராசிகளில் ராகு கேது அமர்ந்தால் அந்த ஜாதகம் ராகு கேது தோஷம் உள்ள ஜாதகம்
என்று நிர்ணயம் செய்யபடுகிறது, மேலும் பையன், பெண் இருவரின் ஜாதகத்திலும் ராகு
கேது தோஷம் உள்ளதாக இணைப்பது திருமண வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துத் தரும்
என்பது பாரம்பரிய ஜோதிடர்களின் கணிப்பு, ராகு கேது தோஷம் இல்லாத ஜாதகத்துடன்,
ராகு கேது தோஷம் இருக்கின்ற ஜாதகத்தை இணைப்பது சரியான பொருத்தம் அல்ல என்பதும்
இவர்களின் கருத்து, மேலும் அப்படி இணைக்கும் ஜாதகம் திருமண வாழ்க்கையைக்
கேள்விக்குறியாக மாற்றும் என்பதும் இவர்களின் கருத்து.
3) செவ்வாய் தோஷம் :
இலக்கினத்தில் இருந்து செவ்வாய் பகவான் 2,4,7,8,12 ஆம் இராசிகளில் இருந்தால்,
செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்றும், பையன், பெண் இருவரின்
ஜாதகத்திலும் செவ்வாய் பகவான் இலக்கினத்தில் இருந்து மேற்கண்ட ராசிகளில்
இருப்பதைப் போலவே தேர்வு செய்து திருமணம் செய்வது, இருவரின் திருமண
வாழ்க்கையைச் சிறப்பாக நீடிக்கச் செய்யும், தவறி, செவ்வாய் தோஷம் உள்ள
ஜாதகத்தை, செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகத்துடன் இணைத்து அவர்களுக்குத் திருமணம்
செய்து வைத்தால், மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பிரிவும் ஏற்படும் என்று
சொல்பவர்களும் உண்டு, இதற்கு ஒருபடி மேலே சென்று உயிருக்கு ஆபத்து ஏற்படும்
என்று சொல்பவர்களும் உண்டு, ஆக செவ்வாய் தோஷம் பலரது திருமண வாழ்க்கைக்குத்
தடையாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
4) ஏக திசை சந்திப்பு :
பையன், பெண் இருவருக்கும் சம காலத்தில் ஒரே திசை நடைபெறுவது, திருமண
வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிக்கும், திருமண வாழ்க்கையைக் கேள்விக்குறியாக
மாற்றிவிடும், ஏக திசை சந்திப்பு என்பது தற்பொழுது, பல ஜோதிடர்களால்
அறிவுறுத்தப் படுகிறது, பையன், பெண் இருவருக்கும் ஒரு திசை நடைமுறையில்
இருந்தால் திருமணம் வேண்டாம் என்று தவிர்த்து விடுகின்றனர் ஆக ஏக திசை
சந்திப்பு என்பதும், பலரது திருமணத் தடைக்குக் காரணமாக அமைகிறது.
5) ஏழரை சனி :
பையன், பெண் இருவருக்கும் சனிபகவான் சந்திரனுக்கு ஏழரைச் சனியாக சஞ்சாரம்
செய்யும் பொழுது திருமணம் செய்வது, மிகுந்த துன்பத்தை ஏற்ப்படுத்தும் ஏழரை சனி
காலத்தில் திருமணம் செய்வது மிகுந்த துன்பத்தையே ஏற்ப்படுத்தும் என்று
செல்பவர்களும் உண்டு, ஆகத் திருமணத் தடைக்கு ஏழரை சனியும் ஒரு காரணமாக
அமைகிறார் என்றால் அது மிகையில்லை.
மேலும் இலக்கினத்தில் இருந்து 2, 7ல் சனி அமர்ந்தாலும் ஜாதகருக்குத் திருமணம்
நடை பெறாது அல்லது திருமணம் தாமதம் ஆகும் என்று சொல்பவர்களும் உண்டு, ஆக
ஒருவருக்குத் திருமணம் நடைபெற மேற்கண்ட விஷயங்களை எதிர்கொண்டு, மேற்கண்ட
பொருத்தங்கள் நல்ல நிலையில் அமைந்து, பையன், பெண்ணுக்குப் பிடித்து,
பெற்றோர்களுக்குச் சம்பந்தம் பிடித்து, திருமண வாழ்க்கை அமைவதற்குள் பிறந்த
நாள் கண்டு விடும்.
மேற்கண்ட ஜாதகப் பொருத்தங்களில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதைப்
பார்ப்போம் அன்பர்களே !
1) நட்சத்திரப் பொருத்தம் :
நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமண வாழ்க்கையை 100% சரியாக அமைத்து
தருவதில்லை என்பது முற்றிலும் உண்மை, நட்சத்திரப் பொருத்தம் 11 பொருத்தம்
அமைந்து திருமணம் செய்தவர்கள் வாழ்க்கையில் பிரிவு என்ற நிலைக்கு செல்வதற்குக்
காரணம் என்ன? என்பதை அவர்களின் சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் நிச்சயம்
புரியும், மேலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் கூட திருமணம் செய்யலாம்
என்பது ஜோதிட தீபத்தின் கருத்து.
2) ராகு கேது தோஷம் :
ராகு கேது எனும் இரண்டு கிரகங்களும் சுய ஜாதகத்தில் இலக்கினத்திற்கு எந்தப்
பாவகத்தில் அமர்கின்றனர், அப்படி அமரும் ராகு கேது கிரகங்கள் ஜாதகருக்கு
எவ்வித யோக அவயோக பலன்களை வழங்குகின்றனர் என்பதை முதலில் தெளிவாகக் கணிதம்
செய்து பலன்களை நிர்ணயம் செய்வது அவசியம், மேலும் ராகு கேது கிரகங்கள் திருமண
வாழ்க்கையில் எவ்வித தடைகளையும், சிரமங்களையும் தருவதில்லை என்பதே உண்மை,
குறிப்பாக 2, 7 ல் அமர்ந்த ராகுவோ கேதுவோ 2, 7ஆம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு
உள்ளாக்கினால் மட்டுமே திருமண வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்துகிறது.
மேலும் அப்படிப்பட்ட ஜாதகங்களை 2,7ஆம் பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கும்
ஜாதகங்களுடன் இணைத்தால் மட்டுமே திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் , 2,7ஆம்
பாவகங்கள் இருவருக்கும் பாதிக்கப்படுமாயின் திருமண வாழ்க்கை எப்படிச் சிறப்பாக
அமையும்? உதாரணமாக 2,7 ஆம் பாவகங்கள் இருவருக்கும் ராகு கேது கிரகங்களால்
பாதிக்கப்படும் பொழுது, இந்த இருவரின் ஜாதகத்தை இணைத்தால் ராகு கேது கிரகங்கள்
எப்படி நன்மையைச் செய்யும்? தோஷம் உள்ள ஜாதகத்தை தோஷம் அற்ற ஜாதகத்துடன்
இணைத்தால் தானே தோஷம் உள்ளவர் நன்மை பெறுவார்.
3) செவ்வாய் தோஷம் :
செவ்வாய் பகவான் 2,4,7,8,12 ராசிகளில் இருந்தால் ஜாதகருக்குத் தோஷத்தைத்
தருவார் என்பதெல்லாம் முற்றிலும் தவறான கருத்தாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஒரு
வேலை 2,7 ஆம் பாவங்களுக்கு அதிபதியாக செவ்வாய் இருந்து, அவர் தனது வீட்டிற்கு
2,6,8,12 ஆம் ராசிகளில் மறைந்தாலோ , அல்லது பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம்
பெற்றாலோ, ஜாதகருக்கு 2,7 ஆம் பாவ வழியில் இருந்து இன்னல்களை தரக்கூடும் .
*4) ஏக திசை சந்திப்பு :*
* இதைப் போன்ற ஒரு நகைச்சுவை வேறு எதுவும் இல்லை எனலாம், ஏனெனில் ஒருவருக்கு
நடக்கும் திசை அவருக்கு எந்த பாவத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பது
தெரியாமல் போகும் பொழுதே, ஏக திசை சந்திப்பு என்று ஜோதிடர்களும் குழம்பி,
பொருத்தம் காண வந்தவர்களையும் குழப்புகின்றனர், உதாரணமாக பையன் பெண்
இருவருக்கும் ஒரே திசை நடப்பில் இருந்தாலும், நடைபெறும் திசை நல்ல பாவங்களின்
தொடர்பைப் பெற்று பலனை தந்துகொண்டு இருக்கும் என்றால், சம்பந்தபட்ட
இருவருக்கும் யோகத்தையே வழங்கும், ஒரு தீமையும் நடைபெறாது. ஆக ஒருவருக்கு
நடைபெறும் திசை எந்த பாவத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெற
வேண்டியது ஜோதிடர்களே !*
*5) ஏழரை சனி :*
* அன்பர்களே ஒருவருக்கு ஒரு தீய பலன்கள் நடைபெற்றால் அதற்க்குக் காரணம் சனி
பகவான்தான் என்று நிர்ணயம் செய்யும், மனப்பான்மை உள்ளதனால் இந்த குழப்பம்
உருவாகிறது, ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்த பல தம்பதியர் மிகவும் சிறப்பான
மணவாழ்க்கையை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர், ஆக ஏழரை சனிக்கும் திருமண
வாழ்க்கைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை, மேலும் 2,7ல் சனி இருந்தால்
திருமணம் இல்லை என்றும், திருமணம் தாமதமாகும் என்றும் நிர்ணயம் செய்வது
முற்றிலும் தவறான ஜோதிடக் கணித முறையாகும்.*
*குறிப்பு :*
* ஒருவரின் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது 2, 7 ஆம் பாவமே என்றால் அது
மிகையில்லை,பையன், பெண் இருவரின் ஜாதகத்தில் 2,7 ஆம் பாவம் நல்ல நிலையில்
இருந்தால் மேற்கண்ட விஷயங்கள் பற்றி நாம் ஆய்வு செய்யத் தேவையில்லை,
அவர்களுக்குத் துணிந்து திருமணம் செய்து வைக்கலாம், திருமண வாழ்க்கையை மிகவும்
சந்தோசமாக நடத்திச் செல்வார்கள், பிரிவு என்பதே நிச்சயம் இல்லை எனலாம், மேலும்
அவர்களின் சுய ஜாதகத்தில் 5 ஆம் பாவம் வலிமை பெற்று அமைந்தால் தம்பதியருக்கு
உடனடியாக புத்திர சந்தானம் உண்டாகும்.*
பொதுவாகத் திருமண பொருத்தம் காணும் பொழுது நட்சத்திர பொருத்தம் காண்பதை விட (
ஏனெனில் நட்சத்திரப் பொருத்தம் திருமண வாழ்க்கையில் 5% பலனை மட்டுமே தரும் )
ஜாதகங்களில் 12 பாவங்களின் வலிமை உணர்ந்து திருமணப் பொருத்தம் காண்பது இல்லற
வாழ்க்கைக்குச் சிறப்பைச் சேர்க்கும், தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சி
பொங்கும். மேற்கண்ட பொருத்தங்கள் இருந்தும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாமல்
மணமுறிவை நோக்கிச் செல்லக் காரணம் ஜாதகப் பொருத்தம் இல்லாமல் இருப்பதே என்றால்
அது மிகையல்ல.
வாழ்க வளமுடன்
ஜோதிட தீபம் - ஜோதிடன் வர்ஷன்
--
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u*
[image: onljWQ1FowU4lCzM7NUx09r5Io-4SfdVdtQ8bQUN]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.