அன்பிற்கினியீர்,

 போதி தர்மா மாஸ்டர் ஆஃப் ஜென்:1

இறைவன் அருளாலும், நல் ஊழினாலும் உயர்திரு இராமபத்ரன் போன்ற பெரியோர்கள்
அன்பினாலும், குறை ஒன்றும் இல்லா வாழ்வு பெறும் பேறு பெற்றிருக்கிறேன்.
 இணையத்தில் தேடிய போது திரு. தினேஷ்ராம் அவர்களது போதி தர்மா மாஸ்டர் ஆஃப்
ஜென்:1 கிடைக்கவில்லை.  மற்ற 7 பகுதிகளும் கிடைத்தன.  போதிதர்மரின் வாழ்க்கை
பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்புடைய நண்பர்களின் வேண்டுகோளை
முழுதுமாய் நிறைவேற்றும் பேறு பெற்றிலனே என்று வருந்தினேன்.  இன்று அது
உயர்திரு இராமபத்ரன் அவர்களால் நீங்கிவிட்டது.

*நல்லவற்றைப் படிப்போம்.  நல்லவற்றைச் சிந்திப்போம்.  நல்லவற்றைப்
 பகிர்ந்து கொள்வோம்.*

---------- Forwarded message ----------
From: Ramabhadran N.K. <[email protected]>
Date: 2015-05-24 3:27 GMT+05:30
Subject: Re: போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2
To: Vanakkam Subbu <[email protected]>


Sir,
"போதி தர்மரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்
எழுந்துள்ளது என நண்பர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அறிஞர் தினேஷ் ராம்
அவர்கள் எழுதிய போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென் என்ற தொடரை சனிக்கிழமை
தோறும் அனுப்பி வைக்கிறேன்."   என எழுதியிருந்தீர்கள்.
அவரது முதல் பாகம் இதோ:
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1
போதி தர்மர் பெளத்த மதத்தின் பிரிவான “ஜென்”னைத் தோற்றுவித்தவர். ‘தனித்திரு;
பசித்திரு; விழித்திரு’ என்று வள்ளலார் 19வது நூற்றாண்டில் சொன்னதை தான்
போதிதர்மர் 5வது நூற்றாண்டிலேயே நாடு கடத்தி உள்ளார். தன் குருவான ப்ரஜ்ன தாரா
கட்டளையின்படி பெளத்த மதத்தைப் பற்றிப் பிராச்சாரம் செய்யவே போதிதர்மர் சீனா
சென்றாரே அன்றி ஏழாம் அறிவு படத்தில் சித்தரிப்பது போல் எந்தத்
தொற்றுநோயையும் தடுக்க அன்று.

1994ஆம் ஆண்டு சீனர்களால் எடுக்கப்பட்ட ‘மாஸ்டர் ஆஃப் ஜென்’ என்ற படம் போதி
தர்மரை நெருக்கமாக உணர உதவுகிறது. உண்மையிலேயே போதி தர்மரைக் கெளரவிக்கும்
வகையில் எடுக்கப்பட்ட படம். படத்தின் தலைப்பு தோன்றும் முன்பே.. போதி தர்மரைப்
பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்கிறார்கள். ஷவோலின் மட பிக்குகளுக்கு ‘குங் ஃபூ’
கற்று தந்தார் என்றாலும், போதி தர்மரின் தனித்துவம் ஜென் கோட்பாடுகளைப்
போதித்ததிலியே இருந்தது என்கிறது வாய்ஸ்-ஓவர். சீன பெளத்தத்தின் தொடக்கமாக
போதி தர்மர் இருந்ததாகவும், அவரின் சிந்தனைகள் சீனக் கலாச்சாரத்தை மேம்படுத்த
உதவியதாகவும் அந்த அறிமுகம் முடிகிறது.

தென்னிந்திய இளவரசரான போதி தர்மரின் இயற்பெயர் போதி தாரா. தன் தந்தைக்கு பிறகு
அரசாளும் உரிமை தனக்கு தான் என்ற நிம்பிக்கையில் இருப்பவர். திடீரென
பேச்சரவமின்றி முடங்கும் போதி தாராவின் தந்தையை, தீய ஆவிகளின் பிடிகளில்
இருந்து மீட்கிறார் புத்தப் பிக்குவான ப்ரஜ்ன தாரா. மன்னன் பரிசளிக்கும் விலை
மதிப்பற்ற முத்தினை வாங்காமல், அதை விட அதிக மதிப்புமிக்க பொருள் ஏதேனும்
உலகத்தில் உள்ளதா என கேள்வி எழுப்புகிறார். போதி தாராவின் மூத்த சகோதரர்கள்
இருவரும் இல்லை என்று மறுக்க ப்ரஜ்ன தாரா போதி தாராவைப் பார்க்கிறார்.

“ஞான ஒளி தான் மிகுந்த மதிப்பு மிக்கதென நினைக்கிறேன்” என்கிறார் போதி தாரா.

“ஞான ஒளி என்றால் என்ன?”

“ஞான ஒளி நுண்ணறிவைத் தரும். நுண்ணறிவு நன்மை, தீமைகளைப் பிரித்துப் பார்க்க
உதவும்.”

போதி தாராவின் பதில்களால் திருப்தியுறும் ப்ரஜ்ன தாரா அரண்மனையை விட்டு
கிளம்புகிறார். அவரை தடுத்து விருந்துண்ண அழைத்துச் செல்கிறார் போதி தாரா.
சாப்பிடாமல் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதி தாராவைப் பார்த்து,
“சிந்தித்தல் சோறு போடாது” என உண்ணத் தொடங்கி ஜென்னின் பால பாடத்தை ப்ரஜ்ன
தாரா இனிதே தொடங்குகிறார். ப்ரஜ்ன தாரா சைவ உணவை மட்டுமே சாப்பிடுவதைக் கேள்வி
எழுப்பும் போதி தாரா, “வானத்தைப் பார்த்தவாறு முதுகு கொண்ட எந்த
உயிரினத்தையும் மனிதன் சாப்பிடலாம்” என்று வாதாடுகிறார். கூன் முதுகு கொண்ட
வேலைக்காரனைப் பார்த்து, “இவனையும் சாப்பிடுவாயா?” என கேள்வி எழுப்பி விட்டு
சென்று விடுகிறார். ப்ரஜ்ன தாரா விட்டுச் செல்லும் ஓலையைப் பிரித்துப்
படிக்கிறார் போதி தாரா.

“பிறக்கும் முன் நான் யார்? பிறந்த பின் நான் யார்” என்று அவ்வோலையில்
இருக்கிறது.

‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!’ என்ற குறிப்பு எப்படிப்
பட்டினத்தாரை லெளகீக வாழ்க்கையில் இருந்து விடுபட வைத்ததோ அவ்வாறே ப்ரஜ்ன
தாராவின் குறிப்பும் போதி தாராவிடம் வேலை செய்யத் தொடங்குகிறது. ‘நான்
யார்!?’ என்ற
கேள்வி போதி தர்மருள் எதிரொலித்த வண்ணம் உள்ளது. போதி தாராவின் தந்தை
இறந்ததும் அவரது மூத்த சகோதரன் கிரீடத்தை கையில் ஏந்தியவாறு போதி தர்மரைத்
தேட, போதி தர்மர் ப்ரஜன தாராவைத் தேடி ஜோல்னா பையை மாட்டிக் கோண்டு கிளம்பி
விடுகிறார் (அக்காலத்தில் ஜோல்னா பை இருந்ததா என்பதெல்லாம் தேவையில்லாத
ஆராய்ச்சி).

போதி தாராவும், மற்றொருவரும் ப்ரஜ்ன தாராவின் முன் வணங்குகின்றனர்.

“உன்னை யார் துறவியாக சொன்னது!?” என்று ப்ரஜ்ன தாரா கேட்கிறார்.

“என் குரு” என்கிறார் மற்றொருவர். உடனே அவர் தலையில் தட்டும் ப்ரஜ்ன தாரா,
“நீயாக முடிவு எடுக்க மாட்டியா?” என கேட்டு விட்டு, “இப்ப சொல்லு?” என்று
மீண்டும் கேட்கிறார்.

“நான் சுயமா தான் துறவியாக நினைக்கிறேன்.”

உடனே அவர் தலையில் தட்டும் ப்ரஜ்ன தாரா, “நீ உன் குருவை அவமதிக்கிற!! எப்படி
நீயாக முடிவெடுப்ப?” என கேட்டு விட்டு, “இப்ப சொல்லு?” என்று மீண்டும்
கேட்கிறார். என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் திகைப்பவரிடம், “நீ பார்க்க
அப்பாவியாவும், அறிவுள்ளவனாவும்  இருக்கிறாய். உன்னை என் சீடனாக ஏற்கிறேன்” என
போதி தாராவிடம் செல்கிறார்.

“நீ ஏன் துறவியாகணுங்கிற முடிவுக்கு வந்த!?”

போதி தாரா பதிலளிக்காமல் மெளனமாக இருப்பதைப் பார்த்து, “நீ ஊமை இல்லை. ஏன் நீ
பேச மாட்டேங்கிற!!” என்று ப்ரஜ்ன தாரா கேட்கிறார்.

“பெளத்தத்தினை கற்றுக் கொள்ள என் மனம் எவ்வளவு விழைகிறது என வார்த்தைகளால்
சொல்ல இயலாது. அதனால் தான் மெளனமாக இருக்கிறேன்.”

“சரி. உன் மனம் பெளத்தம் கற்பதிற்கு தயாராக இருப்பதால்.. உன் எண்ணத்தை
நிறைவேற்றிக் கொள்ள வலுவானதொரு குடிலை அமைத்துக் கொள்” என்கிறார் ப்ரஜ்ன தாரா.

நதி தீரத்தில் குடில் அமைக்க மறு கரையிலிருந்து பொருட்களைக் கொணர்கிறார் போதி
தாரா. குடில் தயாராகி விடுகிறது. எவரோ வழிப்போக்கர் இருவரின் சண்டையில் குடில்
உடைபடுகிறது. போதி தாரா மீண்டும் குடிலை முதலில் இருந்து கட்டுகிறார்.
அன்றிரவு வரும் புயலில் மீண்டும் குடில் அழிகிறது. எத்தகைய புயலாலும் தகர்ந்து
விடாத அளவு மீண்டும் குடிலை நிர்மாணிக்கிறார். குடில் முழுமை அடைந்ததும்,
குடிலை சுற்றி வருகிறார் போதி தாரா. திடீரென ஏதோ தோன்றியவராக குடிலை இடித்து
தரை மட்டமாக்குகிறார்.

ப்ரஜ்ன தாராவுடன் வரும் சீடன் ஒருவன், “ஏன் கட்டிய குடிலை இடித்தாய்!?” என்று
பதறுகிறான்.

“நான் மிகுந்த முட்டாளாய் இருந்து உள்ளேன். குடிலைக் கட்டி முடிக்க அதிக நேரம்
எடுத்துக் கொண்டேன்” என்கிறார் போதி தாரா.

“என்ன.. இந்த இடிபாடுகளை குடில் என்கிறாயா!?” என்று பதற்றத்துடனே வினவுகிறான்
சீடன்.

“ஆமாம். ஆனால் குடில் கட்டப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்டது. மனம் தான் அந்தக்
குடில்” என்கிறார் போதி தாரா.

போதி தாராவை மடத்திற்கு அழைத்துச் சென்று தலைமுடிகளை மழிக்கின்றார் ப்ரஜ்ன
தாரா. நெற்றியில் இருந்து முடிகளை நீக்கியவாறு கத்தி பின்னந்தலை நோக்கிச்
செல்கிறது.

“முதல் மழிப்பில்.. அனைத்து உலகியல் ஆசைகளில் இருந்தும் விடு படு. இரண்டாது
மழிப்பில்.. சத்தியத்தின் கொள்கைகளைக் கற்பேன் என உறுதி எடு. மூன்றாவது
மழிப்பில்.. அனைத்து உயிரினங்களையும் காப்பேன் என உறுதி எடு” என போதி தாரா
மொட்டை அடிக்கப்படுகிறார்.

மொட்டையடிக்கப்பட்ட போதி தாராவிற்கு ‘போதி தர்மர்’ என பெயர் சூட்டி, “67
ஆண்டுகளுக்குப் பிறகு, நான் இறந்த பின்,  நீ சீனா செல்” என்கிறார் ப்ரஜ்ன
தாரா.

-இனி சீனாவில்-

வணக்கம்,

Ramabhadran NK





*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



  *v **a n a k k a m**  S u b b u*     [image: ❤ Ikkle Gem ❤♫ Melodymaker ♫]
*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to