ஓம்
தமிழுக்குத் தொண்டு செய்யும் பெரியோரில் மருத்துவர் ஜெயபாரதி ஒரு தன்னலமற்ற
தியாகி. நல்ல வரலாற்று ஆராய்ச்சியாளர். இலக்கிய வாதி. இணையத்தில்
பன்னெடுங்காலமாய் பதிவுக ள் செய்து வருகிறார்.
அகத்தியர் குழும்த்தில் அவர் இட்ட ஒரு மடலில் நான் கண்டவற்றை
பகிர்ந்துகொள்ளுமுகமாய் இதனை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். ஒரு உரையாடலாக
மாலைமாற்று பற்றி வ்

2015-05-31 16:01 GMT+05:30 subra manian <[email protected]>:

> groups.yahoo.com
> <https://groups.yahoo.com/neo/groups/agathiyar/conversations/topics/55299?soc_src=mail&soc_trk=ma>
>  Read
> Later
> Yahoo! Groups
>
>    - 1 min read
>    -  original
>    
> <https://groups.yahoo.com/neo/groups/agathiyar/conversations/topics/55299?soc_src=mail&soc_trk=ma>
>
> அன்புள்ள டாக்டர் ஜெயபாரதி,
> உங்கள் யுட்யூப் மாலை மாற்று பார்த்தேன், கேட்டேன். உங்களைப் பார்த்ததும்
> மிக்க மகிழ்ச்சி.
> கீழேயுள்ள வெண்பா நான்கு அளவடிகளாக இல்லாமல் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே
> கீழேயுள்ளவாறு பதியும்படி கேட்டுக் கொள்கிறேன்.
> இரு விகற்ப நேரிசை வெண்பா
> விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
> எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல்
> பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே
> பொய்யா மொழிப்பகைஞர் போல்!
> மேலும் சில தகவல்கள் அரசஞ்சண்முகனார் பற்றியும், அவர் இயற்றிய மாலை மாற்று
> மாலை’ பற்றியும் தந்திருக்கிறேன்.
> திருஞானசம்பந்தர் பாடிய சீகாழிப் பதிகம் முதல் மாலை மாற்று இலக்கியம்
> எனப்படுகிறது. அடுத்து சங்கரமூர்த்திக் கவிராயர், தண்டபாணி சுவாமிகள் ஆகியோர்
> மாலை மாற்றுப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
> பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் எங்கள் ஊர் சோழவந்தானில் 1868 ஆம் ஆண்டு
> செப்டம்பர் 15 ஆம் தேதி பிறந்தார். அவ்வூர் தெற்கு ரதவீதியில் உள்ள சிதம்பர
> விநாயகர் கோயில் கல்மண்டபத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் அழகர்சாமி தேசிகர்
> என்ற ஆசிரியரிடம் எழுத்திலக்கணம், நிகண்டு, அந்தாதி ஆகியன கற்றுத் தேர்ந்தார்.
> பின்னர் அவ்வூரிலுள்ள பேட்டை, கிண்ணிமங்கல மடத்திலிருந்த சிவப்பிரகாச
> சுவாமிகளிடம் சங்க நூல்கள், இலக்கண இலக்கியங்கள், தருக்கம், சோதிடம் ஆகியன
> கற்றுப் புலமை பெற்றார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் 1890 முதல் 1901
> வரை தமிழாசிரியராகப் பணி புரிந்தார். 1901 ல் தொடங்கப்பட்ட மதுரைத் தமிழ்ச்
> சங்கத்தின் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையில் 1902 முதல் 1906 வரை சண்முகனார்
> பேராசிரியராகப் பணி புரிந்தார்.
> தமிழ் ஆர்வலரும், சண்முகாரின் புலமையின் மீது தீராத பற்று கொண்டவருமான என்
> தகப்பனார் ’கன்ட்ரோல்’ C.கன்னியப்ப முதலியார் அவர் சம்பந்தமாக (சிதம்பர
> விநாயகர் மாலை, மாலைமாற்று மாலை) சோழவந்தான் கிண்ணிமடம் சார்பில் சுமார் 25
> வருடங்களுக்கு முன் இரண்டு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். இப்பொழுது
> அவைகள் எங்களிடம் இல்லை. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அவைகள் உள்ளன. பிரதி
> வாங்க முயற்சிக்கிறேன்.
> ’மாலை மாற்று மாலை’யை அரசஞ் சண்முகனார் தம் பதினெட்டாம் வயதில் (கி.பி 1886
> ல்) எழுதியுள்ளார். இந்நூலுள் 1. மாலைமாற்று, 2. யமகம், 3. காதை கரப்பு, 4.
> இரட்டை நாக பந்தம், 5.ஏக பாதம், 6. கோமூத்திரி, 7. கரந்துறை, 8. நான்காரைச்
> சக்கரம், 9. சருப்பதோ பத்திரம், 10. பஞ்ச பங்கி, 11. சுழிகுளம், 12. திரிபுய
> மகம், 13. துவிபங்கி எனப் பதின்மூன்று வகைச் சித்திரக் கவிகளை
> உருவாக்கியுள்ளார்.
> இவர் இயற்றிய மாலை மாற்று மாலையில் இரு காப்புச் செய்யுள் + 30 பாடல்கள் +
> பாடலுக்குள் பாடலாக 14 பாடல்கள் = 46 பாடல்கள் சண்முகனார் இயற்றிய மாலை மாற்று
> மாலையில் உள்ளன.
> ஆதாரம்: முனைவர் பழ.சிதம்பரம் அவர்களின் ’அரசஞ்சண்முகனாரின் இலக்கியங்கள்’
> என்ற புத்தகத்திலிருந்து.
> டாக்டர்.வ.க.கன்னியப்பன்,
> முன்னாள் கண் மருத்துவப் பேராசிரியர்,
> மதுரை மருத்துவக் கல்லூரி,
> மதுரை
>
> From: "jay bee jaybee555@... [agathiyar]" <[email protected]>
> To: Agathiyar <[email protected]>
> Sent: Saturday, 21 March 2015 6:45 AM
> Subject: [agathiyar] MY YOUTUBE LINKS(Tamil unicode)
>
> அன்பர்களே,
> மலேசிய தொல்லைக்காட்சியில் வெளியாகிய என்னுடைய சிறு
> பேட்டிகள் யூட்டியூபில் போடப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த இணைப்புகளையும்
> ரமேஷ்ராவ் கேட்டிருந்தார்.
> அவருக்கு மட்டும் தனியாக அனுப்புவதற்குப் பதில் ஒட்டுமொத்தமாக
> எல்லாருக்கும் ஆகும்வண்ணம் கீழே தந்திருக்கிறேன்.
> என்னுடைய பேட்டி
> Interview with Dr. S. Jayabarathi @ JayBee
> http://www.youtube.com/watch?v=H6K9cb1pzVI
> சங்கராச்சார்யார்
> Shankaracharyar by Dr. S. Jayabarathi @ JayBee
> http://www.youtube.com/watch?v=AYSq1k_WYwA
> ஏடும் எழுத்தாணியும்
> Edum Eluthaniyum by Dr. S. Jayabarathi
> http://www.youtube.com/watch?v=a0qZnlPGz2w
> திருக்குறளும் ஜப்பானியரும்
> Thirukuralum Jappaniyarum by Dr. S. Jayabarathi
> http://www.youtube.com/watch?v=6IM0s3jNtNw
> SS ரஜூலா
> SS Rajula by Dr. S. Jayabarathi
> http://www.youtube.com/watch?v=ZmtWq3LQmuc
> குறிவைத்தல்
> KuRi Vaiththal by Dr S. Jayabarathi.
> http://www.youtube.com/watch?v=L_U5UbHY8N8
> காளிதாசனும் கண்டசுத்தியும்
> Kalidasanum Kandasuttiyum by Dr. S. Jayabarathi
> http://www.youtube.com/watch?v=QvlY9CgEOL8
> யுக்தியும் குயுக்தியும்
> Yukthi and Kuyukthi by Dr. S. Jayabarathi
> http://www.youtube.com/watch?v=7KUUqgjWcYw
> கன்னாப்பின்னா
> Kanna Pinna by Dr S. Jayabarathi
> http://www.youtube.com/watch?v=ZRvP7zdGQfM
> "நான் ஏன் பறப்பேன்"
> "Naan Ean PaRappEn?" AnandaRangam Pillai Diaries
> http://www.youtube.com/watch?v=j4ID8PZI0Cc
> நாஸ்ட்ரடாமஸ்
> Nostradamus by Dr. S. Jayabarathi
> http://www.youtube.com/watch?v=wBMUK7nq4LI
> கடாரத்துக் கல்வெட்டு
> Ancient Indian Inscription in Cherok Tokun (Kadaram)
> http://www.youtube.com/watch?v=mpYvDY00YIM
> மாலை மாற்று
> Maalai Matru by Dr. S. Jayabarathi
> http://www.youtube.com/watch?v=o_0SNDuZAwE
> குயுக்தி
> Kuyukthi
> http://www.youtube.com/watch?v=hEcCcGnpZcU
> எல்லாமே Crispyயாகத்தான் இருக்கும். 20 நிமிடங்களுக்குள் பேசினால்
> அப்படித்தானே அமையும்.
> தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் என்றால் நீட்டி முழக்கி அடுக்குத்
> தொடர் அது இது என்று சிரிக்கவைத்து பேசலாம். அப்படியே பழகியும்
> விட்டார்கள்; கேட்பவர்களைப் பழக்கப்படுத்தியும் விட்டார்கள்.
>
> அன்புடன்
> ஜெயபாரதி
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to