ஒதிமலை - சில தகவல்கள்!
*ஒதிமலை! முருகர் உறையும் தலங்களுள் முக்கியமான ஒன்று. வெளி உலகம் இந்த மலையை
பற்றி அறிந்தது வெகு குறைவு. ஏனென்றால், அதுவே அங்குறையும் முருக பெருமானின்
விருப்பம் போலும். இந்த மலை கோயம்பத்தூருக்கு பக்கத்தில் இருக்கிறது.
காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ளது. செல்லும் வழி காந்திபுரம் > அன்னூர் > ஒதிமலை. அன்னுரிலிருந்து
சுமார் பதினைந்து கிலோ மீட்டர். அன்னூரில் இருந்து நேரடி போக்குவரத்து வசதி
இல்லை. அதனால் ஏதேனும் ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு செல்வது நல்லது.*
*கூகிள் எர்த்தில் ஒதிமலையை பார்த்தால் நன்றாக புரியும். பக்கத்தில் ஒரு கிலோ
மீட்டர் தூரத்துக்கு எந்த ஒரு வீடும், கிராமமும் கிடையாது. அதனால் பசிக்கு
சாப்பிட குடி நீர் கைவசம் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.*
*மலை அடிவாரத்திலிருந்து ஆயிரத்து எண்ணூறு படிகள் மேல் நோக்கி செங்குத்தாக
செல்கிறது. அடிவாரத்தில் முதலில் ஒரு விநாயகர் சன்னதி. அவரை வணங்கி மெதுவாக
படிகள் ஏற, ஐநூறு படிகள் ஏறிய பின் இன்னொரு விநாயகர் கோவில். நல்ல வெயிலில்
ஏறி வந்தவர்களுக்கு நிழலாய், குளிரிச்சியை கொடுக்கும் இடம். மிகவும்
ஆச்சரியமான இடமும் கூட. அங்கு இருந்து உணர்ந்தால் தான் புரியும்.*
*மேலும் ஒரு முன்னூறு படிகள் ஏறி செல்ல, வலதுபக்கத்தில் பூமியில் ஒரு லிங்க
ரூபம். இதை அகத்தியர் லிங்கம் என்கின்றனர். இதற்கும் பூசைகள் உண்டு. ஏறி
செல்பவர்களும் செய்யலாம். அங்கு ஒரு பத்து நிமிடம் இருந்தால், அத்தனை தூரம்
ஏறி வந்த களைப்பு விலகி, முழு தெம்புடன் மீதம் படிகளை கடந்து செல்லலாம்.*
*அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆகும்.
மேலே சென்றதும் நம்மை முதலில் வரவேற்பவர் - இடும்பர். அவரை வணங்கி மேலே
செல்ல ஒதிப்பர் சன்னதி, காசி விஸ்வநாதர் சன்னதி, அம்பாள் விசாலாக்ஷி சன்னதி.
ஓதியப்பருக்கு எதிரே படிகளில் கீழே இறங்கி சென்றால் சப்தகன்னிமார்,
ராஜராஜேஸ்வரி சன்னதி.*
*உலகத்தின் மொத்த அழகையும் வாங்கி ஒரு இடத்தில் சேர்த்து வைத்தது போல் முருகன்
இருப்பார். ஐந்தரை அடி உயர, ஐந்து முகத்துடன், எட்டு கரங்களுடன் கூடிய
முருகர் சிலை.*
*கோவில் திங்கள், வெள்ளி கிழமைகளிலும், சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி திதி
நாட்களிலும், கார்த்திகை, விசாகம் நட்சத்திர நாட்களிலும் திறந்து பூசை
நடக்கும். மற்ற நாட்களில் தனிப்பட்ட முறையில் அபிஷேக பூசைக்காக விரும்பினால்,
முன்னரே பூசாரியிடம் முறையாக ஏற்பாடு செய்திருந்தால், திறந்து பூசை செய்து
தருவார்.*
*திரு.கணபதி சிவம் என்பவர் தான் தலைமை பூசாரியாக இருக்கிறார். உண்மையில்
சொல்வதானால் அவரும் ஓதியப்பரும் நெருங்கிய நண்பர்கள். தோளில் கைபோட்டு குசலம்
விசாரிக்க, நன்றாக திட்ட்விடுகிற அளவுக்கு நெருக்கமானவர்கள். மிகவும்
அமைதியானவர், பொறுமையானவர். அவரது அலங்கார கைவண்ணத்தை புகைப்படத்தில்
காணலாம்.*
*இந்த கோவிலில் முருகரிடம் உத்தரவு வாங்கும் முறை ஒன்று உண்டு. பூசைக்கு பின்
யாருக்காவது உத்தரவு கேட்கவேண்டுமாயின் பூசாரியிடம் சொல்ல, அவர் வந்து
நமஸ்காரம் செய்ய சொன்ன பின் முருகருக்கு முன் அமர்ந்து நம் கோரிக்கையை
மனதுக்குள் சொல்லவேண்டும். முருகரின் வலது பக்கமாக பூ விழுந்தால் நம்
கோரிக்கை ஏற்கப்பட்டது. கூடியவரை ஒரு மாதத்திற்குள் நம் கோரிக்கை
நிறைவேறிவிடும். நடுவாக பூ விழுந்தால் - இருக்கும் நிலையே போதும் என்கிற
பதில். சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். இடது பக்கமாக பூ விழுந்தால் -
உத்தரவு இல்லை, இடத்தை காலி பண்ணு என்று அர்த்தம். தற்போது திங்கள்,
வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தான் உத்தரவு கொடுக்கிறார்.*
*இந்த மலை போகர் சித்தருக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். எல்லா வருடமும்
ஆவணி பூச முருகரின் பிறந்த நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு எல்லா
சித்தர்களும் இங்கு அமர்ந்து பல விஷயங்களை தீர்மானிப்பதாக சொல்கிறார்கள்.
பழனியில் நிறுவப்பட்டிருக்கும் நவ பாஷாண முருகர் சிலையை செய்ய, ஓதியப்பரின்
உத்தரவுடன் போகர் சித்தர் இந்த மலையிலிருந்துதான் புறப்பட்டு சென்றார் என்று
தல புராணம் கூறுகிறது. இந்த மலையின் நான்கு மூலைகளிலும் யாகம் ஒன்றை
செய்த்துவிட்டு சென்றாராம். அதில் ஒரு இடம் மட்டும் தான் இன்றும்
காணப்படுகிறது. அது ஈசான மூலையில் "பூதிக்காடு" என்கிற இடத்தில் இருக்கிறது.*
*இந்த மலையில் முருகருக்கு பின் பக்கத்தில் போகர் தவம் செய்த "பாறை" ஒன்று
உள்ளது. அதில் சூரிய உதயத்துக்கு அப்புறம், சூரிய அஸ்தமனத்துக்கு முன்
மட்டும் அமர்ந்து த்யானம் செய்வார்கள். மிக அருமையான ஆசனம். தானத்துக்கு மிக
உகந்த இடம். எங்கோ இழுத்து சென்று விடும். த்யானம் இருக்க விரும்புபவர்கள்
மூச்சை கும்பத்தில் பிடித்து நிறுத்தக்கூடாது. அடங்கி விடும். கவனமாக
மெதுவாக மூச்சை இழுத்துவிட்டு த்யானம் செய்ய வேண்டும்.*
*மலை முழுவதும் மூலிகைகள். எல்லாம் சித்தருக்கு சொந்தமானது. தயவுசெய்து
புனிதத்தை கடை பிடியுங்கள். கோவிலில் அமைதி காக்கவும். அப்பொழுது அதன் அருமை
புரியும்.*
*கோவில் பூசாரி திரு கணபதி சிவத்தின் செல் நம்பர் :09865970586.*
*சென்று ஓதியப்பர் அருள் பெருக!*
--
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
[image: Sylvia] *v **a n a k k a m** S u b b u* [image: Sylvia]
* .*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.