---------- Forwarded message ---------- From: p.v. narayanan kr> Date: 2015-07-17 20:00 GMT+05:30 Subject: கண்ணதாசனும் வாலியும் To:
Thanks to Ramamurthy Subrahmanyam: “கண்ணதாசன் கடைக்கு எதிர்க்கடை போடவந்தவன் நான். ஆகவே , அவரிடம் வேலைக்குச் சேர விரும்பவில்லை ” இப்படி சொல்லி கண்ணதாசனுக்கு எதிர்பாட்டு பாடி , திரை உலகில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர் வாலி.... ஆனால்..அவரது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தில் ... சரியான வாய்ப்பு கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்தாராம் வாலி.... அந்த சமயத்தில் , ஒரு அரிய வாய்ப்பு , வாலியின் வாசல் தேடி வந்ததாம்... அது ..கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேரும் வாய்ப்பு...! அப்போதுதான் இப்படிச் சொல்லி மறுத்து விட்டாராம் வாலி .... இப்படி கண்ணதாசனை விட்டு விலகிச் சென்ற வாலி , திரை உலகில் புகழ் பெற்று விளங்கி அருமையான பாடல்களைத் தந்தபோது , அவரை வீட்டுக்கே தேடிச் சென்று வாழ்த்தி மகிழ்ந்தாராம் கண்ணதாசன்... இதைச் சொன்னவர் வாலி...சொன்னது கவிஞர் நா.முத்துக்குமாரிடம்...! கவிஞர் நா.முத்துக்குமாரின் ஒரு பேட்டியிலிருந்து : “நான் நல்ல பாடல்களை எழுதும்போதெல்லாம், “ முத்துக்குமார்...என்னைய்யா... இத்தனை அருமையா எழுதிட்டே! ” என்று பாராட்டுவார் வாலி. “என்ன சார் ...இவ்வளவு மனம் திறந்து பாராட்டுறீங்க?” என்று நான் கேட்பேன். “ நான் போன்லதான்யா பாராட்றேன். ஆனா ...கண்ணதாசன் வீடு தேடி வந்து என்னை எத்தனை முறை பாராட்டியிருக்கார் தெரியுமா?” என்று என்னிடம் நெகிழ்வுடன் சொன்னார் வாலி..” # நா.முத்துக்குமார் சொன்னதைக் கேட்டு நானும் கொஞ்சம் நெஞ்சம் நெகிழ்ந்துதான் போனேன்..! # அதனால்தான் கண்ணதாசன் மறைந்தபோது ..இப்படிச் சொல்லி இரங்கற்பா பாடினார் வாலி... “`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்” -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
