மனச்சோர்வு / விரக்தியிலிருந்து விடுபட்டு உற்சாகமாக இருக்க சில எளிய வழிகள்
*எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளி தில் வீழ்த்திவிடும். ஆன ந்தமும் வேதனையும் கலந்ததுதான் வாழ்க்கை . ஆனாலும் மனச்சோர் வுடன் இருக்கும்போது நம் வாழ்க்கையில் நிகழ் ந்த சோகமான காரியங் கள் மட்டுமே நினைவுக் கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு* *கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையு ம் பகிர்ந்துகொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார் கள்.* *மனச்சோர்விலேயே உழன் று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர் வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கை யும் இனிமையாக இருக்க வகை செய்யலா ம். இத்தகைய மனச்சோ ர்வில் இருந்து வெளி வருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமா ன குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோ ம். நீங்களோ அல்லது உ ங்களுக்கு அறிமுகமா னவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்கு மாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங் கள்.* <https://wordpress.com/about-these-ads/> *உடற்பயிற்சி செய்வது* *மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி. இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட் டுமின்றி, நேரிடையான சிந்தனைக ளையும் அதிகரிக்கின்றது. உணர்வு களை சீர்படுத் துகின்ற செரோடொ னின் மற்றும் டெஸ்டோஸ்டெரோ ன் ஆகியவற்றை சுரக்க உடற்பயி ற்சி உதவுகின்றது. அதோடு மனச் சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின் றது.* *உதவி கேட்பது* *வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை . வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர் பாப்பது இல்லை. ஆகவே தாய், தந் தை, துணைவர், உடன் பணியாளர் அ ல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும்.* *சமச்சீர் உணவு* *பழங்கள், காய்கரிகள், மாமிசம், தானியங்கள் மற்றும் கார்போஹை ட்ரேடுகள் ஆகிய ஆரோ க்கியமான உணவுகளை உட்கொள்ளுதல், சிந் தனை சிதறாமல் இருக்க உதவுகின் றன. சமச்சீர் உணவு உடல் நலனை யும், மனநலனையும் சீர்ப டுத்துகின் றது.* *சுய விழிப்புணர்வு* *வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடி யாமல், தங்களை அளவுக்கு மீறி அழுத்துவதால் மக்கள் பொதுவா க மனச்சோர்வு அடைகிறோம். எனவே சரியாக தம்மை புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக விரும்பி செய்தால், மனச்சோர்வானது நீங்கும்.* *எடை குறைத்தல்* *மனச்சோர்வுக்கு அதிகமான எடை பிரச்சனையாக இருந்தா ல், எடையை குறைக்க முயல் வது ஒரு நல்ல தீர்வைத் தரு ம். மேலும், உடல் வலிமை ஆரோ க்கியத்தையும், சுயகருத்துக்கு ம் நேர்மறையான சிந்தனை யை கூட்டுகின்றது.* *நண்பர்கள்* *நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இரு ந்து வெளியே வருவதற் கான ஆ லோசனைகளையும் வழங்குவா ர்கள். மேலும், தேவையுள்ள நேர த்தில், சொல்வதை காதுகொடு த்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர் மறையான சிந்த னைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.* *டைரி எழுதுவது* *தினசரி உணர்வுகளை எழுத்து மூலமாக பதிவு செய்வது சுயபரிசோதனை செய்வதற்கும், ஆராய்வதற்கு ஒரு சிறந்த வழி ஆகும். இவ்வாறு வாழ் க்கையை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அனுதினமும் பதிவு செய்தா ல், மனச் சோர்வில் இருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.* *எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது* *தொடர்ச்சியாக பிறரை குறைத்து பே சுகிறவர்களோடு இருக்க யாருமே வி ரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக் களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதா னத்தையும் கொடுக்கும்.* *வேலையை விட்டு விடுதல்* *பிரச்சனைகளின் வேர் வேலையில் இருந்தால், அதைவிட்டுவிடுவது மன அமைதியை கொடுக்கும். தனிப்பட்ட ம கிழ்ச்சியையும் திருப்தியை யும் விட்டுக்கொடுக்காமல், குறிக் கோளை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு வேலை ஒரு தடையாக இ ருந்தால், அதைவிட்டு விடு ங்கள்.* *தனிமையாக இருப்பதை தவிர்ப்பது* *மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமேதவிர, அமை தி யடையாது. அதற்காக எப் போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆ னால் அவ்வாறு நண்பர்களு டன் சேர்ந்து இருந்தால், அ வை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச் சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும்.* *சுற்றுலா செல்லுதல்* *எதிர்மறையான சிந்தனைகளை அகற்றுவதற்கு, காட்சி அமைப்பை மாற்றுவது எப் போதுமே உதவியாக இரு க்கும். வாழ்க்கையில் நேர் மறையான சிந்தனைகளை கொண்டு வர ஒருநாள் பிர யாணம் மேற்கொள்வதற்கு ஈடாக எதுவுமே இல்லை. என வே மனச்சோர்வின்போது எங்கேனும் வெளியே சென்றால், எளிதில் மனச்சோர்வானது நீங்கும்.* *நேர்மறையான எண்ணங்கள்* *வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடு க்கும் சிந்தனைகளை தவிர்ப்பத ற்கான சிறந்த வழி. மனதி லே எதிர்மறை உணர்வுகள் இருக் கின்றன. சிந்தனைகளை நேர்ம றையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச் சோர் வின் தாக்கங்களை அகற்றிவிடலாம்.* *மனநல வல்லுநரிடம் பேசுவது* *மனச்சோர்வில் இருந்து வெளிவரு வதற்கு மிகவும் எளிதான மற்றும் ஆற்றல் வாய்ந்த வழி மனநல வல் லுநரிடம் பேசுவது தான். இதனால் மனச்சோர்வின் வேரை கண்டுபிடி த்து அகற்ற முடியும்.* *செல்லப்பிராணியை வளர்ப்பது* *செல்லப்பிராணிகள் தங்கள் எஜமான்களிடம் அற்புதமான வழியில் தொடர்பு கொள்கின்றன. தனியாக வாழ்கிறவர்களை காட்டி லும், செல்லப்பிராணி வளர்ப்பவர் கள் மனச்சோ ர்வின் தாக்கங்களில் இருந்து பிழைத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கி ன்றன. ஆகவே செல்லப் பிராணியு டன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்வது, எதிர் மறையான உணர் வில் இருந்து வெளிவர உதவும்.* *நிகழ்காலத்தில் வாழ வேண்டும்* *இறந்தகால தவறுகளிலும், எதிர்கா லத்தின் நிலையின்மையிலும் உழல்வதில் அர்த்தமே இல்லை. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல் லை என்பதால், அச்சூழ்நிலையி ல் உங்கள் உணர்வுகளை செலுத் துவது பலன் அளிக்காது. ‘எப்போ து ‘,’எங்கே’ மற்றும் ‘நாளை’ என்ப னவற்றுக்கு பதிலாக, ‘இப்போது’, ‘இங்கே’,’இன்று’ என்பன வற்றில் கவனம் செலு த்து ங்கள்.* *நன்றாக தூங்குவது* *நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப ஒருவருக்கு தேவைப்படு வது எல்லாம் ஒரு நல்ல உறக் கமே. இரவு தோறும் 7-8 மணிநே ரம் உறங்குவது குறைவான மன ச்சோர்வுக்கான அறிகுறிகளை காட்டுவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.* *இசையை கேட்பது* *மனச்சோர்வில் இருக்கும் போது, உணர்வை எழுப்பும் இசை யை கேட்பது சோர்வடைந்த மனதிற்கு ஊக்கம் அளிக்கும். உணர்வுகளை மாற்ற வும், ஆன்மாவை உயர்த்தவும், உணர்ச்சி யை அதிகரிக்கவும் உதவும் ஆற்றல் இ சைக்கு இருக்கின்றது. எனினும், மிகவும் உணர்வுபூர்வமான பாடல்களை கேட்ப தால், எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதால், அவற் றை தடுக்க வேண்டும்.* *வைட்டமின் சேர்க்கைகள்* *ஊட்டச்சத்து குறைபாடுகளு ம் மனச்சோர்வு அளிக்கும் சிந்தனையை விளைவிக்க லாம். இதனால் வெளிப்படும் அறிகுறிகளை மருத்துவரி டம் ஆலோசித்து, சமன்பாட் டை சரிசெய்ய வைட்டமின் சேர்க்கைகளை எடுத்துக் கொ ள்ளுங்கள்.* *வலைத்தளம் தொடங்குதல்* *வலைத்தளமோ அல்லது இணையமோ ஒன்றைத் தொடங் கி, அதில் உங்களுக்கு எழும் எண்ணங்களையும் கவிதைக ளாவும், கட்டுரைகளாகவும் அதில் வடிக்கலாம். அல்லது நீங்கள் பார்த்த படித்த நல்ல விஷயங்களை அதில் பதிய லாம். அல்லது உங்களது வாழ்க்கையில் நடந்த சுவா ரஸ்யமா ன சம்பவங்களை அதில் பதிவிட்டு, அடிக்கடி படித்து மகிழ லாம். அல்லது நீங்கள் சம்பந்தப்பட்ட துறை யைப் பற்றியும் அதில் உள்ள நுணுக்கங்களைப் பற்றியும் பதி விட்டு உங்களது நேரத்தை மற்றவர்கள் பயன்பெறுமாறு பயன்படுத்தலாம். இந்த வலைத்தளம் அல்லது இணையம் உங்களைத் தவிர உங்களது வலைத்தளத்தை வேறு யாரும் பார்க்க முடியாது. அல்லது பொதுமக்க ளும் பார்க்கும்படியாகவும் நீங்கள் அனு மதிக்கவும் அதில் வசதி உண்டு.* *கலைகளில் உங்கள் கவனத்தை செலுத் துவது* *உங்களுக்கு ஓவியம் வரைவது, அல்லது சிறுசிறு பொம் மைகள் செய்வது, போன் ற கைவினைத் தயாரிப்புகள் தயாரிக்க உங்களுக்கு தெரிந்திருந்தால், தாராள மாக அந்த வேலைகளில் உங்களை முழுநேரம் உங்களை நீங்களே ஈடுபடுத்திக்கொள்ளலாம்.* *இணையத்தில் கண்டெடுத்த இந்த இடுகையை கூடுதல் வரிகளுடன் மெருகூட்டியது விதை2விருட்சம் * <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> [image: Quinny] *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* [image: γπαη f* η/β] * .* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
