தலைமன்னார்,குந்துகால் ,வாலிநோக்கம்,வாலந்தரவை பெயர் தோன்றிய வரலாறு:
*இராமநாதபுரம் பெயர் தோன்றிய வரலாறு* *ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியைத் தசரத மாமன்னார் ஆண்டு வந்தார். விதி வசத்தால் இராமர் அயோத்தியின் அரசுரிமை இழந்து மரஉரி தரித்து மனைவி சீதை உடனும் அன்புத் தம்பி இலக்குவனுடனும் கானகம் ஏகினார் . கங்கையைக் கடந்து கால் நடையாக வரும் போது இலக்குவனைக் கண்ட இராவணன் தங்கை சூர்ப்பனகை ,இவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தாள். இலக்குவன் தன்னைத் தவறான நோக்கோடு நெருங்கிய சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விட்டான் . * *இதை சூர்ப்பனகை வாயிலாக கேள்வியுற்ற இராவணன் இராமன் இலக்குவன் இருவரையும் வஞ்சம் தீர்க்கச் சீதையைச் சிறை எடுத்து இலங்கைக்குக் கொண்டு சென்றான். பல நாட்கள், பல மாதங்கள் கடந்து சீதையைக் காணாது தவித்த இராமர் இலக்குவர் இருவரும் தமிழக எல்லைக்குள் வந்தார்கள். இறுதியாக இராமநாதபுரம் வந்து விட்டனர். இவ்வாறாக (இராம அவதாரம் வந்த காரணத்தால்) ,ராம அவதாரம் என்று முதலில் நினைவு கூறப்பட்ட பகுதி இராமநாதபுரம் என மருவியழைக்கப்படுகிறது.* *இராமநாதபுரத்தில் தங்கி இருந்த வேளையில் தனது வேலை ஆட்களை நான்கு திசையிலும் ராமர் அனுப்பித் தேடிக் கண்டு பிடித்து வருமாறு அன்புக் கட்டளை இட்டார் .கட்டளையைச் சிரமேற் கொண்டு வேலை ஆட்கள் நாலாபுரமும் தேட ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவரே அஞ்சநேயர்(அனுமான்) ஆவார். விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் படைத்த ஆஞ்சநேயர், பாம்பன் பகுதிக்கு (தற்போது பாம்பன் புகைவண்டி நிலையதிற்கு தெற்கே உள்ள பகுதி) குந்துக்கால் செய்து தனது உருவத்தை விஸ்வரூபம் எடுத்துள்ளார் . அவரது தலை+மண்+ஆறு (தலைமன்னார்)* *.இவ்வாறாக ஆஞ்சநேயர் குந்துகாலிட்டு விஸ்வரூபம் எடுத்தபோது,அவரது வால் நோக்கி இருந்த இடமே வாலிநோக்கம் என்பதாகும் தற்போது அங்கு கப்பல் உடைக்கும் தளமும் கடல் நீரை நன்ணீராக்கும் ஆலையும் செயல்பட்டு வருகிறது.மேலும் சீதை இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இருந்த போது ஆஞ்சநேயரை நோக்கிச் சிவலிங்கம் பூஜை நடத்த வேண்டும் அதற்கு லிங்கம் தேவைப்படுகிறது என்று கூற, அதைக் கேட்ட அனுமான் இதோ ஒரு நொடியில் வருகிறேன் தாயே”, என கூறிப் பறந்தார். ஆஞ்சநேயர் வரத் தாமதம் ஆனதால் ,அவசரப்பட்டு அன்னை சீதை கடற்கரை மண்ணை லிங்கமாகப் பிடித்துவைத்தாள். ஆஞ்சநேயர் லிங்கத்தைக் கொண்டு வந்தார். அன்னை சீதையை நோக்கி “அன்னையே அவசரபட்டு கடல் மண்ணை லிங்ககமாக பிடித்து விட்டீர்களே என வருத்தபட்ட ஆஞ்சநேயரை நோக்கிச் சீதை “சரி நீ கொண்டு வந்த லிங்கத்தயே வணகுகிறேன்.உன்னால் முடிந்தால் மண் லிங்கத்தை பிடிங்கி எரிந்து விடு”,என்றாள். .மறுகணமே ஆஞ்சநேயர் தன் பலம் கொண்ட மட்டும் வாலால் சுற்றிப் பிடுங்க முயற்சிக்கையில் வால் அருந்து சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விழுந்துள்ளது..அந்த இடமே, இராமநாதபுரதிற்கு இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.இவ்வாறாக அன்றையே காலந்தொட்டு இன்று வரை, பாம்பன் தென்பகுதி குந்துக்கால் என்றும், இலங்கயில் உள்ளதலைமன்னாரும் சாயல் குடியிலிருந்து சில கி.மீட்டர் தூரத்தில் உள்ள வாலி நோக்கம் என்ற இடமும் இப்படிக் காரணப் பெயராக அழைக்கப் பெற்று வருகிறது.* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> [image: Missy M]* d* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* [image: ՙ՚ՙ՚ NOBUY SPIN CYCLE] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
