*பதிவு செய்த நாள்29நவ2015 *
-
*சென்னைக்கு தற்போது 326-வது பிறந்தநாள். *
*v*
1.
*1869- ஆம் வருடம் சூயஸ் வாய்க்கால் வெட்டப்பட்டது. *
2.
* ஆங்கிலேயர்கள் துணிகளுக்கு சாயம் போடுவதற்காக கூவம் ஆற்றின் நீரைப்
பயன்படுத்தி நெசவு செய்வதற்காக ஆந்திராவிலிருந்து நெசவாளர் குடும்பங்களைக்
கொண்டுவந்து குடிஅமர் த்தினார்கள். அந்தக் குடியிருப்பு சின்னத்தறிப் பேட்டை
என்று இருந்து சிந்தாதிரிப்பேட்டையாக மாறியது. ..........திரு கே.ஆர். நரசையா
அவர்கள் சூரிய வணக்கத்தில் சன் தொலைக்காட்சியில் பேசியது. *
3. *அலாஸ்கா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் சேர்க்கும் முன்னர்
ரஷ்யாவிற்குச் சொந்தமானது. எதற்கும் பயனற்ற பிரதேசம் என்று எவர்தலையில்
கட்டலாம் என்றிருந்த ரஷ்யாவிடம் பேரம் பேசி குறைந்த பரிவர்தனையில் அலஸ்கா
இணைந்தது. அதில் கிடைக்கும் அளப்பரும் கனிம வளங்கள் உலகச் சந்தையை
நிர்வகிக்கின்றது.அதிர்ஷ்டம் யாருடையது? லேனா தமிழ்வாணன் பேசியது*
4. *நுழம்பு - கொசு என்னும் பொருளில் இலங்கையில் வழங்கப்படுவதாக ஒரு அன்பர்
தெரிவித்தார்.*
5. *சில பழமொழிகள் தெய்வம் மற்று புராணத்தொடர்புடையவை சில அனுபவத்தைச்
சுருங்கச்சொல்லும். சில பழமொழிகள் மன வேற்றுமையையும் தர்க்கத்தையும்
துக்கத்தையும் தந்துவிடும்-(எ.கா) உறவினர் தன்னுடைய இழப்புகளைப் பற்றிப்
பேசும்போது “பட்ட காலிலேயே படும்; கெட்டகுடியே கெடும்” என்று பேசியவருடன்
பெரும் சண்டை உருவானது.
*
6. * *பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது-- பஜனை நிகழ்ச்சிகளில்
முதலில் பாடுவது கணபதிப் பாயிரம். முடிக்கும் போது ஆஞ்சனேயன் புகழ்பாடி நிறைவு
செய்யவேண்டும். *
7. * *சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் கந்த சஷ்டியில் விரதம்
இருந்தால், அகப்பையில் (கருப்பையில்) தானாக சிசு வரும்.*
8. ** அரசமரத்தை அண்டிய பிசாசு, பிள்ளையாரையும் சேர்த்துப் பிடித்தது. *
9. ** சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்பிரமணிக்கு மிஞ்சிய
தெய்வமும் இல்லை.*
10. ** அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம்.
(அவசரமாய் விருப்ப நிறைவேற்றம்) ** * *
11. *ஆறிலும் சாவு நூறிலும் சாவு --- குந்தியின் மக்களிலும் சாவு. (கர்ணன்)
காந்தாரியின் மக்கள் கௌரவர்களிலும் சாவு. *
12. * * கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய். தீர விசாரிப்பதே
மெய்.கிழக்கில் உதிக்கும் சூரியன் தோற்றம்- (பூமி சுழல்வதால்) அஸ்வத்தாமன்
என்றவன் இறந்தான் என்று காதால் கேட்டது பொய். துரோண்ர் இறந்தது செய்தி. *
13. **.ஆற்றுக்குள் இருந்து அரோஹரா போட்டாலும், சோற்றுக்குள் இருப்பான்
சொக்கநாதன் (. உணவே பிரதானம்)*
14. *தாலி வாங்கமல் கூலி வாங்கி வந்தாள்------ திருமணம் இல்லாமல் கர்ப்பம்
தரித்தாள் என்பது. வெ.சுப்பிரமணியன்*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.