2015-12-26 22:20 GMT+05:30 p.v. narayanan <[email protected]>: > > Srini Vasan shared a link:விஜய் டிவி நீயா நானா கோபிநாத்யின் மேடை நாடகம் > அம்பலம் ….. > > - CINEMAPLUZ <http://cinemapluz.com/author/cinemapluz/> > - 25 DEC 2015 > - TAMIZH NEWS <http://cinemapluz.com/category/news/tamizh-news/> > > [image: hqdefault]விஜய் டிவியில் “நீயா நானா” நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது > ஞாயிறு இரவு இந்த நிகழ்ச்சியை பார்காத ஆட்களே இல்லை என்று கூட சொல்லலாம் அந்த > அளவுக்கு ரசிகர்களை கட்டி இழுத்த நிகழ்ச்சி காரணம் இந்த நிகழ்ச்சியில் எடுக்க > படும் தலைப்புகளும் சரி விவாதம் நடத்தும் கருத்துக்கும் ரசிகர்களிடம் பெரும் > வரவேற்புடன் தொடர்ந்து வருகிறது ஆனால் இதன் பின்னல் எவ்வளவு நாடகங்கள் உள்ளது > என்பது யாருக்கும் தெரியாது. > > சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞரும் எழுத்தாளருமான > கார்த்திக் புகழேந்தி இந்த நிகழ்ச்சி குறித்து தனது முகநூல் பக்கத்தில் > கடுமையாக விமர்சித்திருக்கிறார். > “இந்த நிகழ்ச்சியில் தங்கள் நிறுவன ஊழியருக்கே வயதானவர் வேடமிட்டு பேச > வைக்கிறார்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கூட்டத்தில் கலந்துவிட்டு அவர்களைப் > பிழியப் பிழிய அழவைக்கிறார்கள்” என்று அதிர்ச்சி கருத்துக்களையும் > வெளிப்படுத்தி இருக்கிறார். > > இதோ அவரது கருத்து: > “நீயா? நானா? நிகழ்ச்சி பற்றிய அதிருப்தியை எழுதலாமா வேண்டாமா என்ற கேள்வி > நான்கைந்து நாட்களுக்கு மேலாக மனதைக் குடைந்துகொண்டேதான் இருக்கிறது. > ஒண்ணு அழவைப்பாங்க; இல்ல சண்டைபோட வைப்பாங்க என்பதெல்லாம் கடந்து > ஆக்கப்பூர்வமாக சில கருத்துகள் தான் அந்நிகழ்ச்சியின் மீதான விமர்சனங்களைத் > தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. > கடந்தவாரம் “உட்கார்ந்து வேடிக்கைபார்த்ததில்” நீயா நானாவின் பல குட்டுகளை > அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது. ஏற்கனவே வினவு தளம் அடித்து ஊறப்போட்டும், > கலந்துகொண்ட மற்ற நண்பர்களும் தங்கள் கசப்பனுபவங்களைக் கொட்டியும் இருந்தாலும் > இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பரிந்துரைத்தவரின் மீதிருந்த மரியாதையும், > தன்னார்வலர்களைச் சந்திக்க வாய்ப்பமையும் என்ற எண்ணத்திலும் சென்றிருந்தேன். > காலவரையில்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களின் நேரத்தை தின்று > தீர்ப்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. மாலை 5.30க்கு தொடங்கவேண்டிய > ஒளிப்பதிவு 8.00மணிக்குத் தொடங்கியது. 11மணிக்கு முடியும் என அறிவுறுத்தப்பட்ட > நிகழ்ச்சி நள்ளிரவு 2.30மணி வரைக்கும் நீண்டுகொண்டே போனது. > ஊடக தர்மத்தில் நேரம் ஒரு பொருட்டில்லை என்றாலும் வெளியூர்களிலிருந்து > அழைக்கும் நபர்களைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் அதுபற்றிய வருத்தங்களோ, உணர்வோ > இல்லாமல் நடந்துகொள்வது நாங்கள் அடைய வேண்டிய உயரங்களை எல்லாம் அடைந்து > விட்டோம் நீங்களென்ன சுண்டைக்காய் என்பது போலத்தான். > ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கூட்டத்தில் கலந்துவிட்டு அவர்களைப் பிழியப் பிழிய > அழவைப்பது. அவர்கள் மூலம் ஒரு கனமான சூழலை உருவாக்கிவிட்டு மற்ற பெண்களை > நோக்கி கவனத்தைத் திருப்பி அவர்களையும் அழச்செய்வது. தப்பித் தவறி > அழுதுவிட்டால் போதும் “மைக்கை அவர்கிட்டே கொடுங்கள்” என்று விடாமல் சொல்லுங்க > எப்படி இருக்கு உங்கள் மனநிலை சொல்லுங்க என்று துன்புறுத்துவது. > நாற்பது சொச்சம் இருக்கைகளை நிரப்பி இருப்பவர்கள் நிலை ஜென் நிலைதான். யார் > யாரை எங்கே உட்கார வைப்பது என்ற தேர்ந்தெடுத்த பட்டியலை வைத்து இயக்குனருக்கு > முன்கூட்டியே தகவல்கள் போய்விடும். “லகான் படத்தில் இவன் நம்மாளு இவன் பக்கம் > பவுண்டரி அடி புடிக்க மாட்டான்” என்பது போல அவரை வைத்து தங்கள் ஸ்க்ரிப்ட்டைப் > பேச வைத்துவிடுவது. > > கௌரவ அழைப்பாளர்களிடம் பட்டுக்கோட்டைக்கு வழிகேட்க, அவர் கொட்டைப்பாக்கு விலை > இவ்வளவு என்பார். உடனே அங்கிருந்து இயக்குனர் சூப்பர் சொல்லி கை குடுங்க என்று > நெறியாளர் கோபியை உசுப்பிவிட, நம்மவர் உட்கார்ந்த இடத்திலிருந்து > உணர்ச்சிபொங்க எழுந்துவந்து, “அருமை இதான் எதார்த்தம் கையக்குடுங்க உங்க பேரு > என்ன” என்று இயக்குனர் செய்யச் சொன்னதை அப்படியே அப்பட்டமாக நடிக்கும்போது > வாய்மூடி மௌனிகளாக மற்றவர்கள் இந்த நாடகத்தை வேடிக்கைபார்த்து விட்டு ”அட > நாசாமா போனவனுங்களா” என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான். > வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் வரிசையில் “இவர்” எங்கப்பா > வந்தாரு என்று நண்பர் ஒருவர் கேட்டார். அங்கே அமர்ந்திருந்தது நம்ம கிஷோர் கே > சுவாமி. நண்பரை எப்படி கலாய்க்க முடியும் அதனால் தான் புதிய தலைமுறையில் > தமிழிசை சவுந்தர்ராஜன் சொன்ன “அதே கதையை” எடுத்துச் சொன்னதும் என்னை > முறைத்துக்கொண்டே நகர்ந்தார். எவ்வளவு டிராபிக் ஜாம்கள். > > கேமிராக்களுக்குப் பின்னே உட்கார்ந்து இயக்குனர் நம் கருத்துகள் மீது > கோலோச்சுவதாகட்டும், நீ என்னய்யா/ம்மா புதுசா கருத்து சொல்றது, எங்களுக்கு > உங்கள் வாயிலிருந்து என்ன வேண்டுமோ அதைச் சொல்லுங்கள் அதற்காகத்தானே உங்களை > அழைத்துவந்தோம் என அதிகாரத் தொனியில் போட்டுவாங்குவது என்று அத்தனை > நாடகத்தனமும் நம் கண்முன்னே பல்லைக்காட்டும் நிகழ்ச்சி தான் நீயா நானா? > ரியாலிட்டி ஷோ. டாக் ஷோக்களில் கலந்துகொள்பவர்களை மகா மட்டமான மனநிலையோடு > நடத்தும் நடைமுறை நீயா நானாவுடையது என்பது என் சொந்தக் கருத்தாகவே > இருந்துவிட்டுப் போகட்டும். முன்னர் கலந்துகொண்டவர்கள் கூட இந்தப் பதிவை ஒரு > குறுஞ்சிரிப்போடுகூட கடந்துபோகலாம். யார் கண்டது. நிமிட நேரங்களில் > தொலைக்காட்சியில் வருகிறோம் என்ற ஒரே தேவைக்காக ஊடக அழிச்சாட்டியங்களை > வாய்திறந்து பேசாமல் இருப்பது நியாயமானதாகப் படவில்லை. > > நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மழைவெள்ளத்தில் இயங்கிய தன்னார்வலர்கள், > என்.ஜி.ஓக்கள், மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்புகளிலிருந்து சிலரை அழைத்துவந்து > “மழை கற்றுக்கொடுத்த பாடம் என்ன?” என்பதுபோன்ற தலைப்பைச் சூட்டி அதன் மூலம் > இந்த அரசாங்கம் வெள்ள நிவாரணப் பணிகளில் விரைந்து செயல்பட்டு நோய் பரவாமல் > தடுத்திருக்கிறது என்று ஒரு மருத்துவர் வாயாலே சொல்லவைத்து உஷ்ஷ்ஷ்ஷ்… ஒரு > பக்கா நாடகம். > ஆதங்கத்தோடு வடசென்னை பற்றிய கருத்துகளையோ, இருளர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட > மக்களைப் பற்றிய பேச்சையோ, கடலூரில் நடந்த அடாவடிகளைப் பற்றிய கருத்தையோ > நீங்கள் முன்வைக்கவே முடியாத கூடத்தில் அரசியல் ஜால்ராகளை மட்டும் அடி பின்னி > எடுக்கலாம். கொஞ்சம் அங்கங்கே, மானே தேனே அழுகை. எக்ஸ்ட்ரா பிட்டிங்காக > “வாலண்டியர்ஸ் உங்களை நீயா நானா மனதாரப்பாராட்டுகிறது” என்று பசப்பு > வார்த்தைகள் இதெல்லாம் தான் அன்றைய நிகழ்ச்சியில் வேகவைக்கப்பட்டது. > > மாற்றுக்கருத்துகள் எங்கள் டி.ஆர்.பியை ஏற்றுமெனில் அதுபோதும் என்ற > மனநிலையோடு ரட்சகர் வேடம்போட்டுக்கொண்டு கேள்விகளை முன்வைத்து, தங்களுக்குச் > சாதகமான பதிலை நம் மனதில் பதிய வைப்பதன் மூலம் நம் ஆழமான கருத்துகளுக்கும், > ரோசத்திற்கும் ஆண்மைநீக்கம் செய்துவிடும் இந்நிகழ்ச்சியைத் தான் > சமூகமாற்றத்திற்கான நிகழ்ச்சிகளில் முதன்மையானதாக நம்பிக்கொண்டிருக்கிறது > ஒருபாதித் தலைமுறை. > இன்னும் சொல்லாத நிறைய ஏமாற்றுவேலைகள் இருக்கிறது. தங்கள் நிறுவன ஊழியருக்கே > வயதானவர் வேடமிட்டு முன் வரிசையில் உட்கார வைத்து விசமக் கருத்துகளை > கலந்துவிடுவது தொடங்கி, ஏகப்பட்ட சித்துவேலைகளைக் கைக்கொண்ட > இவ்விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி ஆனமட்டும் ஒரு ஆள்பிடிக்கும் கும்பலாக மாறிக் > கொழுத்து, தங்களுக்கு எதிரான கருத்துகளை ஒழித்துக்கட்டி, இன்றைக்கு மக்களின் > சுய அறிவைச் சிதைக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது என்பதே > என்னளவில் உணர்ந்தது. > இங்கே கோபிநாத் ஒரு பொம்மை. அவரை இயக்கும் எல்லாம்வல்ல வலிமையைக் கைக்கொண்ட > இயக்குனர் மற்றும் நிர்வாகம் அனைத்திற்கும் கூச்சமே இல்லாமல் தலையாட்டும் > பொம்மை. அவரைத்தான் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நீயா நானா புகழ் > கோபிநாத் என்று பேனர் கட்டி அழைக்கிறார்கள் என்றபோது சிரிக்காமல் > இருக்கமுடியவில்லை.” > >
-- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
