பழைய உணவு விஜயநகரத்தில் ராம்ராவ் என்ற பணக்கார சேட் வசித்து வந்தார்.ஒரு நாள் அவர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நற்குணங்கள் நிறைந்த மருமகள் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தாள்.அப்போது அவரது வீட்டில் ஒரு சாது வந்து பிஷை கேட்டார்.சாதுவின் குரலை அலட்சியம் செய்தபடி மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சேட். சாது இரண்டாம் முறையும் பிஷைக்கு குரல் கொடுத்த போது சேட்டின் மருமகள் " ஸ்வாமி! என் மாமனார் பழைய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.ஆகவே நீங்கள் வேறு வீடு சென்று கேளுங்கள்" என்றாள். இதைக் கேட்ட சேட்டின் கண்கள் கோபத்தால் சிவந்தன. சாப்பிடுவதை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்தார். மருமகளை நோக்கி " ஒரு பிஷைக்காரனுக்கு முன்னால் என்னை அவமதித்து விட்டாய்.இந்த நிமிடமே நீ என் இல்லத்திலிருந்து இறங்கிச் செல்" என்று கூறினார். இதைக் கேட்ட மருமகள் மிகப்பணிவுடன் " திருமணத்தின் போது நீங்கள் நான் ஏதாவது தவறு செய்து விட்டால் எட்டு நற்குணங்கள் மிகுந்த பெரியோருடன் கலந்து ஆலோசித்த பிறகே எனக்கு தண்டணை வழங்குவதாக என் தந்தைக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள்" என்றாள். சேட் எப்படியாவது தனது மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட விரும்பினார். ஆகவே மிகுந்த கோபத்துடன் "அப்பிடியே ஆகட்டும்" என்றார்.அவர் நகரத்திலுள்ள பெரியோரிடம் இல்லத்தில் நடந்ததைக் கூறி தனது முடிவையும் தெரிவித்தார். அப்போது அவரது மருமகள் "பெரியோரே! தனது முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவர் இப்பிறவியில் செல்வந்தர் ஆகிறார். என் மாமனாரிடம் நிறைந்த செல்வம் இருக்கிறது.அது இவரது முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பலனாகும்.அவர் இப்பிறவியில் புண்ணியம் செய்வதை நிறுத்திவிட்டார்.அதனால்தான் நான் என் மாமனார் பழைய உணவை சாப்பிடுகிறார் என்று கூறினேன்.நான் கூறியது தவறாக இருப்பின் நீங்கள் எந்த தண்டணை அளித்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்றாள். மருமகள் கூறியதைக் கேட்ட அனைவரும் பதில் கூற இயலாமல் மௌனமாயினர். மௌனத்தைக் கலைத்துக் கொண்டு யாராவது வாய் திறந்து பேசுவதற்கு முன்பே சேட் எழுந்தார். தனது செயலை எண்ணி வருந்தியதுடன் தனது மருமகளின் புத்திசாதுர்யத்தை எண்ணி மனதிற்குள் பெருமை கொண்டார்.அங்கு கூடியிருந்த பெரியோரின் முன்னிலையில் தனது தவறுக்காக மருமகளிடம் மன்னிப்பு கேட்டார். நன்றி : மாத்ருவாணி மாசி 2016 இதழ்
Request shyamala raghavedra ji to give apt English translation -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
