தாலி என்பதன் அர்த்தமும் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விடயமும்,
1 <http://www.worldtamilswin.com/#>

   - [image: தாலி என்பதன் அர்த்தமும் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய
   விடயமும்,]

   *மஞ்சளும் தாலியும்*

   மஞ்சளுக்கும் திருமணத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு தமிழர் மரபில்
   என்றென்றும் உண்டு.
   -

   மல் என்னும் வேரில் கிளைத்த மல்குதல் என்ற சொல்லிற்கு பொலிதல் (to become
   fertile), அதிகப் படுதல் (to grow, to increase) என்ற பொருளுண்டு.
   -

   மல்>மலர்>மலர்தல் என்ற வளர்ச்சியில் பொலிவு, பூ விரிதல் என்ற பொருட்பாடுகள்
   வந்து சேரும்.
   -

   அதுமட்டுமில்லை, “பொன், உலோகத்தைக் குறிக்கும் மாழை, மாடை” என்ற சொற்களும்
   கூடப் பொலிவுப் பொருளில் கிளைத்தவை தான்.
   -

   கத்தூரி மஞ்சளைக் குறிக்கும் சொல்லான மாளம் கூட இந்த வழி வந்தது தான்.

   மல்>மால்>மாழை = பொன், உலோகம்

   மல்>மள்>மளி>மளிகாரம் = வெண்காரம்

   மள்>மண் = புழுதி, சுண்ணச் சாந்து, தரை

   மள்>மாள்>மாளம் = கத்தூரி மஞ்சள்

   மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்

   மாடு>மாடை = பொன், அரை வராகன், உலோகம்'''

   மல்கின் விரிவாய் எழுந்த மலிகுதல் என்ற சொல்லும் பெருகுதற் (to grow)
   பொருளைக் குறிக்கும்.
   -

   மல்கு>மலுகு>மலிகு= பெருகுதல் அடுத்து மங்கல் என்ற சொல் எழுந்ததும் இதே
   வழியில் தான். இருள் மிகுந்த பின்புலத்தில் ஒளிபாய்ந்து பெருகும் போது அது
   மங்கலாய்க் காட்சியளிக்கும்.

   மலிகு>மலிங்கு>மயிங்கு>மய்ங்கு>மங்கு>மங்கல் என்ற சொல் மங்கல் ஒளியைக்
   குறிக்கும்.

   மங்கலின் திரிவே தமிழர் மரபில் மஞ்சள் நிறமாகும். மங்கல்>மங்கள்>மஞ்சள் =
   நிறம், மஞ்சள் பொருள் ஙகர, ஞகரப் போலி தமிழில் மிகுதியானது. மங்கலின் இன்னொரு
   வளர்ச்சி அம் என்னும் பெருமை விகுதி பெற்று மங்கலம் என்றாகும்.
   -

   மங்கல்>மங்கலம் = சிறப்பான நிகழ்வு, பொலிவு. மங்கலமான மணப்பருவம் எய்திய
   பெண்ணைக் குறிக்கும் சொல்லான மங்கையும் கூட மங்கு என்ற சொல்லில் இருந்து
   தோன்றியது தான். மங்கு>மங்கை = மங்கல(மாகிய மண)ப்பருவம் அடைந்த பெண்.

   நாம் செவ்வாய் என்பது, வடவர் கணிப்பில் மஞ்சள் தோற்றமே காட்டும். (மஞ்சட்
   பொருள் காடித் தன்மையில் (acidic nature) மஞ்சள் நிறம் காட்டுவதும், களரித்
   தன்மையில் (alkaline nature) சிவப்பு நிறம் காட்டுவது இயற்கை அறிவு. காடி
   சேர்த்த மஞ்சள் பொற்சுண்ணம் என்று சொல்லப் படும்; பெருமாள் கோயில்களில் தாயார்
   முன்னிலையில் பொற்சுண்ணம் கொடுப்பார்கள்; களரி சேர்த்த மஞ்சள் குங்குமம் என்று
   சொல்லப் படும். அதை ஆண்டாள் முன்னிலையில் கொடுப்பார்கள்.) மங்கலம்>மங்கல வாரம்
   = வட மொழியில் செவ்வாய்க் கோள் (மங்கல் என்பது இங்கே சிவப்பு என்ற பொருளில்
   வந்திருக்கிறது.)

   மங்கலத்தின் இன்னொரு நீட்சி மங்கலம்>மங்கல்யம்>மங்கலியம் = பொன்;
   மங்கலியம்>மாங்கலியம் = பொன்னால் ஆன தாலி, மஞ்சள் நிறைந்த தாலி

   மஞ்சள் என்னும் சொல் கீழ்க்கண்டவாறு இன்னும் திரியும்.

   மஞ்சள்>மஞ்சுளம் = அழகு

   மஞ்சு>மஞ்சுதல் = மஞ்சள் நீரால் முழுக்காட்டுதல்

   மஞ்சுதல்>மஞ்சனம் = நீராட்டு. (பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் என்றே
   சொல்லுவார்கள்; சிவன் கோயிலில் இது அப்பு இழிக்கம்> அப்பிஷேகம் > அபிஷேகம்
   என்று வடமொழிப் படுத்தி ஆளப்படும். தமிழர் வழக்கில், அகவைக்கு வந்த
   பெண்ணுக்குச் செய்யும் நீராட்டும் மஞ்சள் நீராட்டு என்றே சொல்லப்படும்.
   தென்பாண்டி நாட்டில் இந்தச் சடங்கு இன்றைக்கும் பெரிதாய்க் கொண்டாடப் படுவதே.)

   மஞ்சுதல்>மஞ்ஞுதல்> மண்ணுதல் = நீராட்டுதல், அலங்கரித்தல்

   மண்ணுநீர் = மஞ்சன நீர்

   மண்>மணிகம் = நீர்க்குடம்

   மணம் = கல்யாணம்

   என்ற சொற்கள் எல்லாமே மஞ்சளை உணர்த்தும்.
   தால்

   தால் என்ற சொல் தால் என்னும் இயல்பையும் (மஞ்சள் நிறம்), தால் என்னும்
   இயற்பொருளையும் (மஞ்சள் பொருள், பொன் போன்றவை) குறிக்கலாம். இனி, வேலால் ஆனது
   வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலி. இந்தத் தாலி பொன்னால் இருக்க வேண்டியது
   அல்ல. ஒளி நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.
   தகல்>தால்>தாலி

   தகல்>தால் என்று சொல்லுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தாலின் நீட்சியாய்
   எழுந்த தாழ் என்ற சொல், தாழம்பூ என்ற மஞ்சள் நிறப் பூவை நம்முன் கொண்டு வந்து
   சான்று கூறுகிறது. தகதக, தங்கம், தகை, திகழ்தல், திகழி, திங்கள், தாழம்பூ
   ஆகியவற்றை ஒருங்குற எண்ணிப் பார்த்தால் தால் என்னும் சொல் தமிழில்
   இருந்திருக்க வேண்டும். டால் என்னும் பலுக்கற் பிறழ்ச்சி கூடத் தாலைத் தான்
   குறிக்கிறது என்றும் சொல்ல முடியும். ஏரணவியலின் துணைப் படி ஆய்ந்து
   பார்த்தால், தாலி என்பது மஞ்சள் பொருள் கட்டிய கயிறு என்றே பொருள் கொள்ள
   முடியும்.


.........  தொடரும்

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



  [image: 😎]   *v **a n a k k a m**  S u b b u*   [image: 😎]

[image: 2ePRgiWePK_EQVhEywyOKQ7wLrBRMmhIOoeKn_0A]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to