<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
நந்தி மலை – கோடைக்கேற்ற சிறந்த சுற்றுலாத்தலம்

கர்நாடக மாநிலத்தில் சிக்பல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த ஒரு
சுற்றுலா தலம் நந்தி மலை. பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும்
 சிக்பல்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தென்பெண்ணை, பாலாறு மற்றும் ஆர்க்காவதி ஆகிய நதிகள் இம்மலையிலிருந்தே
உற்பத்தியாகின்றன. மேலும் பறவைகளுக்கான மிகச்சிறந்த சரணாலயமாகவும் இம்மலை
விலங்குகிறது.

சோழர் காலத்தில் ஆனந்தகிரி என அழைக்கப்பட்ட இம்மலை யோக நந்தீஸ்வரர் தவம் செய்த
இடமாதலால் நந்திமலை என பெயர் வந்ததாக தெரிகிறது. இம்மலையின் உச்சியில்
சோழர்கள் காலத்தில் கட்டப்பெற்ற யோக நந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இம்மலை
துயில் கொள்ளும் நந்தியின் உருவத்தில் தோன்றுவதால் இப்பெயர் ஏற்பட்டதாகவும்
தெரிகிறது.

விடுமுறை நாட்களில் செல்லக்கூடிய மிகச்சிறந்த சுற்றுலா தலம். 1500 மீ
உயரத்தில் அமைந்துள்ள இம்மலையில் கோடை காலத்தில் 25 முதல் 28 சென்டிகிரேடு
மற்றும் குளிர்காலத்தில் 8 முதல் 10 சென்டிகிரேடு தட்பவெப்பமானது இங்கு
சுற்றுலா வருபவர்களை ஈர்க்கிறது. ஆந்திராவின் ஊட்டி என அழைக்கப்படும்
மதனப்பள்ளி ஹாஸ்லி மலை போலவே கர்நாடக மாநிலத்தின் ஊட்டி இந்த நந்தி மலை என்பது
மறுக்க முடியாத உண்மை.

மேலும் இங்கு சுற்றுலா செல்பவர்கள் தங்குவதற்காக பல அரசு மற்றும் தனியார்
விடுதிகள் உள்ளன. அடிவாரத்திலிருந்து சுமார் 8 கி.மீ. சென்றால் மலை உச்சியை
அடையலாம். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சுற்றுலா பயணிகள் மலைக்கு செல்ல
அனுமதிக்கப்படுவர்.

பெங்களூர் - பெல்லாரி சாலையில் 36வது மைலில் அமைந்துள்ள தேவனஹள்ளி சந்திப்பில்
இடதுபுறம் திரும்பினால் 11 கி.மீ. தொலைவில் நந்தி சந்திப்பை அடையலாம்.
அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நந்திமலை அடிவாரத்தை அடைந்து 8
கி.மீ. மலைப்பாதை மூலம் மலை உச்சியை அடையலாம்.

பெங்களூரிலிருந்து 2 மணி நேரத்திலும், சிக்பல்பூரிலிருந்து 1 மணி நேரத்திலும்
நந்தி மலைக்கு அரசு பேருந்துகள் மூலம் செல்லலாம்.

பார்க்க வேண்டிய இடங்கள்:

அம்ருத் சரோவர்: வற்றாத அழகிய ஏரி

திப்பு கோட்டை : திப்பு கோடைகாலத்தில் தங்கியிருந்த கோட்டை.

வீரபத்திரசுவாமி கோவில்: திப்பு கோட்டையிலிருந்து சுல்தான்பேட்டை செல்லும்
வழியில் உள்ளது.

பாலாறு உற்பத்தியாகும் இடம்: மலையில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

பிரம்மாஸ்ரமம்: ஆன்மீகத்தை நாடி வருபவர்க்கான ஆஸ்ரமம்.

யோகநந்தீஸ்வரர் கோவில்

ஆர்க்காவதி நதி உற்பத்தியாகும் இடம்: இம்மலையில் தென்மேற்குப் பகுதியில்
உள்ளது.

பூங்கா: கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறையினால் உருவாக்கப்பட்ட பூங்கா
குழந்தைகளைக் கவரும் வகையில் விளையாட்டுக்கென முக்கியத்துவம் கொடுத்து
உருவாக்கப்பட்டது.



விபரங்களுக்கு
அலுவலர், நந்தி மலை, சிக்கபல்பூர் தாலுகா, கோலார் மாவட்டம்,
தொலைபேசி: 08156 – 2678621   (ஜூலை 16 முதல் மார்ச் 14 வரை)

தோட்டக்கலைத்துறை இயக்குநர் அலுவலகம், லால்பாக், பெங்களூர் - 560 004
தொலைபேசி: 080- 2657 9231    (மார்ச் 15 முதல்  ஜூலை 15 வரை)

http://horticulture.kar.nic.in/nandi.htm

http://www.karnatakaholidays.net/karnataka_hotels_nandi.htm

https://www.youtube.com/watch?v=d3b2O6yl3dM

https://www.youtube.com/watch?v=pkzHQXemJp0


கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



   [image: [?]]🏼[image: [?]]🏼[image: [?]]🏼[image: [?]]*v **a n a k
k a m**  S
u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to