பாம்பாட்டி சித்தர் வரலாறு பாகம் 1தமிழகம் போற்றும் சித்தர் பெருமக்களில் பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார்.
பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆட வைத்து வேடிக்கை காட்டுவது இவரது
தொழிலாகும். ம்த்தகைய பெரிய, கொடிய பாம்பாக இருந்தாலும் அதனை இவர் வெகு
எளிதாகப் பிடித்து விடும் ஆற்றல் பெற்றவர். பாம்பு விஷத்தை முறிக்கும்
மூலிகைகள் பலவற்றை இவர் நன்கறிந்திருந்தார். இவர் கோவைக்கு அருகிலுள்ள
மருதமலையில் அந்தக் காலத்திலேயே விஷமுறிவு வைத்தியம் மற்றும் ஆய்வுக் கூடம்
ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.ஒரு நாள் மலை மீது பெரிய நாகப்பாம்பு
ஒன்றைப் பிடிக்க வேண்டி விரைந்து சென்றபோது இவர் சட்டை முனியைக் கண்டார்.

இவ்விருவரின் சந்திப்பு பற்றி போக முனிவர் தம் போகர் 7000-ல்,

புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும்
புனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை
வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது
வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார்.
என்று கூறுகிறார்.

மேலும் சட்டை முனி தாம் கண்ட பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தருளினார். இதனால்
காடுகளில் கொடிய பாம்புகளை பிடித்து நாடு நகரங்களில் சென்று பாம்புகலை ஆட
வைத்து வேடிக்கை காட்டிப் பிழைப்பு நடத்தி வந்த பாம்பாட்டி சட்டை முனியின்
பேரருளால் மெய்ஞ்ஞானப் பாலூண்டு நானிலம் போற்றும் சித்தராக மாறினார். சிறிது
காலத்துக்கு சமாதி நிலையில் இருந்த பாம்பாட்டிச் சித்தர் பின் வெளிவந்து
சித்துக்கள் பல புரிந்தபடி தேச சஞ்சாரம் செய்து வந்தார்.

ஒருநாள் அந்நாட்டு மன்னர் இறந்து போனார். அது கண்ட இவர் அவனுடம்பில் கூடு
விட்டு கூடு பாய்ந்து அவரது மனைவியுடன் இருந்தபோது செத்த பாம்பு ஒன்றை
உயிர்ப்பித்து ஆட வைத்தார். அதனால் இவர் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயரைப்
பெற்றார் என்று கூறுவோரும் உண்டு. வேறு சிலர் இவர் மன்னரது மனைவியுடன் அதிக
நாட்கள் தங்கி விட்டதால், இவரது சீடர்கள் பாம்பாட்டிகளைப் போன்று வேடமிட்டு
அரண்மனைக்குள் புகுந்து பாம்புகளை ஆட வைத்துப் பாடிய பாடல்களைக் கேட்டுத் தாம்
யார் என்ற உண்மையை உணர்ந்து தம் பழைய உடம்பினுள் பிரவேசித்தார் என்று
கூறுகின்றனர்.

எது எப்படி என்றாலும் இவரது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது என்றே கூறலாம்.
ஒரு சமயம் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்த காடு ஒன்றில் ஏராளமான
கொடிய பாம்புகள் இருந்தன. அப்போது பயம்  என்பதை அறியாத இளைஞன் ஒருவன்
அக்காட்டு வழியே வந்தான். படமெடுத்து ஆடிய நாகம் ஒன்றினை அவன் வரும் வழியில்
கண்டான். அதன் ஆட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. வெகுவாக ரசித்துச்
சிரித்தான். அப்போது அக்கொடிய நாகம் அவன் மீது சீறிப் பாய்ந்தது. அது கண்டு
கலங்காத அவன் அதனைப் பிடித்துத் தரையில் ஓங்கியடித்தான். அதனால் அப்பாம்பு
இறந்து போனது.

ஊர் திரும்பியவன் தன் நண்பர்களிடம் காட்டில் நடந்ததைக் கூறிப் பெருமைப்பட்டுக்
கொண்டான். அப்போது அவனது நண்பர்கள் மிரண்டு, “அடேய்! அந்தக் காட்டு வழியே
இனிமேல் போகாதே! கொடிய விஷப் பாம்புகள் அங்கு ஏராளமாக உள்ளன” என்று
எச்சரித்தனர். ஆனால் அவனோ அவர்களது கூற்றை அலட்சியம் செய்தான்.


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*   [image: [?]]🏼[image: [?]]🏼[image: [?]]🏼[image: [?]]*v **a n a k
k a m**  S
u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to