நவ கைலாயம் - ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஆலயம்



*இதுவும் நவ கைலாய தலங்களில் ஆறாவது தலம்,*

*இதுவும் தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்த தலம், அகத்திய முனிவரின் சிஷ்யர்
உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டுதலின்படி தாமரை மலர்களை ஆற்றில் விட மலர் 6
ஆவதாக ஒதுங்கிய இடமே ஸ்ரீவைகுண்டம்  கைலாசநாதர் ஆலயம்.*


*மூலவர் : கைலாச நாதர்*

*அம்பாள் : சிவகாமியம்மாள்*

*அமைவிடம் (ஊர்) : ஸ்ரீவைகுண்டம் , திருநெல்வேலி மாவட்டம், *

*ஊரின் சிறப்பு : *
*நவ திருப்பதி தலங்களின் தலங்களும், நவ கைலாயத் தலங்களின் ஆலயமும்
அமைந்திருப்பது இத்தலத்திற்குப்  பெருமை. நவக்கிரகத் தலங்களில் இது சனிக்குரிய
தலமாக விளங்குகிறது. எனவே இவ்வூர் நவக்கிரக, கைலாய, திருப்பதி தலங்களுக்கு
பிரசித்தி பெற்ற ஊராக விளங்குகிறது.*

*திருமாலும், திருலட்சுமியும் இங்கு தங்கியிருப்பதாக ஐதிகம், வைகுதல் என்றால்,
தங்குதல், திருமாலும் லட்சுமியும் இங்கு தங்கியிருப்பதால் ஸ்ரீ என்ற அடைமொழி
சேர்த்து ஸ்ரீவைகுண்டம் எனப் பெயர் வந்ததாகக் கூறப்பெறுகிறது.*

*பிறவி ஊமையாகப் பிறந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் சக்தி
 பெற்று குமரன் அருள் பெற்ற குமரகுருபர சுவாமிகள் பிறந்த ஊர் என்ற பெருமையும்
இத்தலத்திற்கு உண்டு.  *

*அன்னை மீனாக்ஷியின்  அருளைப் பெற்றவரும், வடநாடான காசிக்குச் சென்று திரும்பி
வந்து காசிமடத்தைத் திருப்பனந்தாளில் ஸ்தாபித்தவரும் , சகலகலாவல்லி மாலையைப்
பாடி மொழித்திறனைப் பெற்றவரும் ஆன குமரகுருபரரின் அவதாரத் தலம் ஸ்ரீவைகுண்டம்
ஆகும். *

*தலப் பெருமை : *

*இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதியம்மன் ஆலயத்திலிருந்து
கொண்டுவரப்பெற்றது. இங்குள்ள பூமிநாதர் சிலை, மரத்தால் செய்யப்பெற்றது.
இவர்ஒரு காவல் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். இவர்  சாஸ்தாவின் அம்சமாகக்
கருதப்பெறுகிறார், சித்திரைத்திருநாளில் இவருக்குச் சிறப்புப் பூசைகளும் முதல்
மரியாதையும் தரப்பெறுகிறது.*

* இங்கு சனிபகவானுக்குத் தனிச் சன்னதி உண்டு, நவக்கிரங்களில் சனியின் ஆதிக்கம்
உள்ளவர்களின் பரிகாரத்தலமாக உள்ளது. கைலாச நாதருக்கும், சனிபகவானுக்கும்,
சனியின் உக்கிரம் தனியச் சிறப்புப் பூசைகள் செய்து பரிகாரம் செய்யும்
தலமாகும். சனி தோசத்தால் தடைப்பட்ட திருமணங்கள், இழந்த செல்வங்கள், நீண்ட
நாள் பிரச்சனைகள் இவற்றிற்குப் பரிகாரம் செய்து பலன் அடைகின்றனர். திரு
நள்ளாறு சனீஸ்வரனுக்கு ஈடாக இ்வ்வாலயம் சிறப்புடையது. *

*கைலாய நாதருக்கு எதிரிலுள்ள நந்தியைச் சுற்றி 108 விள்க்குகள் உள்ளன. இந்த
108 விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது
நம்பிக்கை.*

*அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இவ்வாலயம் உண்டாகக் காரணமாக இருந்த
உரோமச முனிவருக்கும் நடராஜர், விநாயகர், சனிஸ்வரர் ஆகியவர்களுக்குத்  தனிச்
சன்னதிகள் உண்டு.*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>





* இந்தக் கோவில் காசி விஸ்வநாதர் கோவில் எனவும் அழைக்கப் பெறுகிறது. இந்தக்
கோவிலில் தான் நவ கைலாயக் கோவில்கள் உருவாகக்  காரணமாய் இருந்த உரோமச
முனிவருக்குச் சிற்பம் அமைக்கப்பெற்றுள்ளதாய் தெரிய வருகிறது.  மேலும் எல்லாக்
கோவில்களிலும் இருப்பது போல் நடராஜர், வீரபத்திரர் போன்றோரின் சிற்பங்களும்
உள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மனும் காட்சி கொடுக்கிறார். இந்தக்
கோவிலின் கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து
கொண்டுவரப்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். நடராஜர் இங்கே சந்தன சபாபதி என்ற
பெயரில் அழைக்கப் பெறுகிறார். மூலவர் காசிவிஸ்வநாதர், சிவகாமி அம்மனுடன்
உள்ளார். தடைப்பட்ட திருமணங்கள், இழந்த சொத்துக்களைத் திரும்பப் பெறுதல்
போன்றவற்றிற்கு இங்கே பரிகாரம் செய்து கொள்ளுதல் நலம் எனச் சொல்லப் பெறுகிறது.
இலக்குமியும்(ஸ்ரீ), வைகுண்ட வாசனும் இந்தத் தலத்தில் தங்கி இருப்பதாலேயே இது
ஸ்ரீவைகுண்டம் என அழைக்கப் பெறுவதாகவும்,  நவதிருப்பதிகளிலும், 108 திவ்ய
தேசங்களிலும் ஒன்றான கள்ளர்பிரான் கோவிலான நவதிருப்பதிக் கோவிலும் இங்கேயே
அமைந்துள்ளதும் விசேஷமாய்ச் சிறப்பித்துச் சொல்லப் பெறுகிறது.
நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகவும், நவ கைலாயத்தின் சனிக்குரிய
தலமாகவும் இருப்பதும் தனிச்சிறப்பு.இங்கே காவல் காப்பது பூதநாதர் ஆகும்.
பூதநாதருக்குத் தனிச் சிறப்புடன் சித்திரைத் திருநாளில் முதல் மரியாதை செய்யப்
பெறுகிறது. சாஸ்தாவின் அம்சமான பூதநாதருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனத் தைலம்
மட்டுமே தடவி வடைமாலை சார்த்துவது விசேஷமாய்ச் சொல்லப் பெறுகிறது. மற்ற
கோவில்களில் பைரவர் சந்நிதியில் கோவிலின் சாவியை வைப்பது போல் இங்கே பூதநாதர்
சந்நிதியில் கோவிலைப் பூட்டிச் சாவியை வைத்து வந்ததாகவும், பூதநாதரை மிஞ்சி
எவரும் உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கை இருந்ததாகவும் தெரிய வருகிறது.
சித்திரை, ஐப்பசியில் பிரம்மோற்சவமும், ஆறாட்டுவிழாவும் நடக்கிறது. ஐப்பசியில்
திருக்கல்யாண உற்சவம், கந்த சஷ்டி, சிவராத்திரி போன்றவையும் சிறப்பாக
நடத்தப்பெறுகின்றன. ஸ்ரீவைகுண்டம் கொஞ்சம் பெரிய ஊராக இருப்பதால் இரவு ஒன்பது
மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.*

*you tube link:*

*https://www.youtube.com/watch?v=E2RI5LVpkFU
<https://www.youtube.com/watch?v=E2RI5LVpkFU>*



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*

[image: KITKAT]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to