*தரம் அறிந்து, நாள் பார்த்து வாங்கிய நவமணிகற்களை அப்படியே ஆபரணத்தில்
பதித்து அணிவது தவறு. *


*எப்படிமூலிகளைகளும், பாஷாணங்களும் மருந்து செய்வதற்கு முன்னர் சுத்தி
செய்யப் படுகின்றனவோ அதே*

*போலஇந்த கற்களும் சுத்தி செய்தல் அவசியம். இதனை சித்தர்கள் ”தோஷ
நிவர்த்தி” என்பர்.*

*நவமணிகள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான வண்ணக் கதிர்களை வெளியிடும் தன்மை
உடையவை. இந்தகதிர்கள் *



*மனிதனின் உடலில் படும் போது உடல் நலம் மற்றும் மன நலத்தினை சீர்படுத்தி
மேம்படுத்துவதாகவும்கருத்துக்கள் உள்ளது.மாணிக்கம் சிவந்த நிறக்
கதிர்களையும், *

*முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,*

*புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும், *

*கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும், *

*மரகதம் பச்சை நிறக் கதிர்களையும், *

*வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,*

*வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும், *

*நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும், *























*பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடுமாம்.இத்தனை தன்மைகளையும்,
சிறப்புகளையும் உடைய பழுதில்லாத (வெடிப்புக்கள், புள்ளிகள்)
கற்களால்மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கான நற்பலனைத் தரமுடியும். சுத்தமான
கற்களை கண்டறிவது என்பது ஆகச்சிரமமான பணி. தேர்ந்த வல்லுனர்களே
தவறிழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.ஆனால் அகத்தியர் தனது “அகத்தியர்
வாகடம்” என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது
குறித்துவிவரித்திருக்கிறார்.முத்து :- நுரையற்ற பாலில் போட்டால்
மிதக்கும்.மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை
தும்மும்.பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக
தோன்றும்.வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.பவளம் :-
உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.கோமேதகம் :-
பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.புஷ்ப ராகம் _
சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.வைடூரியம் :-
பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.நீலக்கல் :- பச்சிலை
சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to