---------- Forwarded message ----------
From: p.v. narayanan >
Date: 2016-11-14 16:14 GMT+05:30
Subject: சிவாஜி ...ஆரூர்தாஸ்
To:




Thanks to Soundararajan Doraisamy
<https://www.facebook.com/Rtn.Soundararajan> - shared John Durai Asir
<https://www.facebook.com/johndurai.asirchelliah>
Chelliah <https://www.facebook.com/johndurai.asirchelliah>'s post
<https://www.facebook.com/johndurai.asirchelliah/posts/1130892420298520>.:


[image: Image may contain: 2 people]
<https://www.facebook.com/photo.php?fbid=1130892010298561&set=a.137213362999769.30818.100001333177471&type=3>

ஒருவர் மேல் கோபம் வந்து விட்டால் ,
நமது ஞாபகசக்திக்கு ஓவர் சக்தி வந்து
பழைய சம்பவங்களை எல்லாம்
ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுக்கும்...!
.
புதிய பறவை படத்திற்கு வசனம் எழுத ,சிவாஜி ...ஆரூர்தாசை அழைத்து வரச்
சொன்னபோது.. , அவர் பிஸியாக இருந்ததால் ,எழுத நேரம் இல்லை என்று சொல்லி
இருக்கிறார்..!

உடனே சிவாஜியின் ஞாபகசக்திக்கு ஓவர் சக்தி வந்து ..ஆரூர்தாசை தன் வீட்டுக்கே
வரவழைத்து ...ஆவேச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து ...பழைய சம்பவங்கள்
எல்லாவற்றையும் பட்டியலிட்டுக் கொட்டித் தீர்த்திருக்கிறார்..!

ஆனாலும் ..அதீத அன்பினில் வெளிப்படும் கோபம் கூட அழகாகத்தான் இருக்கிறது..!
அந்த சம்பவமே ஒரு சினிமாக் காட்சி போல நம் கண்களில் ஓடுகிறது...
அது..ஆரூர்தாசின் வார்த்தைகளில் :

..//அண்ணனின் அன்னை இல்லம்!
காரிலிருந்து இறங்கினேன். உள்ளே சென்றேன். ..ஹாலில்அண்ணனும் கமலா அண்ணியும்
அமர்ந்திருந்தனர். அருகில் சென்றேன்.உடனே அண்ணன் எழுந்து நின்று ,
என்னைப்பார்த்து கைகுவித்துக் கும்பிட்டு:-

சிவாஜி:- "வணக்கம் சார்! வாங்க சார்! கமலா! பிரபல கதை வசன கர்த்தா ஆரூர்தாஸ்
சார் வந்திருக்காரு. எந்திரிச்சி நின்னு கும்பிட்டுக்க..." (அண்ணி
அமர்ந்திருந்த வண்ணம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தலை குனிந்து கொண்டார்.)

சிவாஜி:- (உட்கார்ந்து கொண்டே எதிரில் இருந்த சோபாவைக் காட்டி) "ஒக்காருங்க
சார்"...
உட்கார்ந்தேன்.

உடனே "ஏண்டா? "என்று ஒரு கர்ஜனை கேட்டது.நிமிர்ந்து பார்த்தேன்.அண்ணன்
ஆங்காரத்துடன் பேசினார்..

சிவாஜி:- "ஒனக்கு என்ன தைரியம் இருந்தா, என் படத்துக்கு எழுத நேரம் இல்லேன்னு
சொல்லுவே.ஆரூரான் ராசிக்காரன். அதனால முதல் முதல்லே அவனுக்கு அட்வான்ஸ்
கொடுன்னு நான் சொல்லி ஷண்முகம் ஒனக்கு அனுப்புன காரைத் திருப்பி அனுப்பிட்டியா?
டேய் டேய்! இது என் படண்டா! சிவாஜி பிலிம்ஸோட பிரெஸ்டீஜ் . பஸ்ட் கலர் பிலிம்!
என்ன நினைச்சிக்கிட்டிருக்கே..? என் படத்துக்கு எழுதாம இந்த மெட்ராஸ்ல நீ
இருந்திடுவியா? ஏவி.எம்.மும், வாகினியும், பிரசாத் புரொடக்ஷன்சும் எப்போ
ஒனக்கு வந்துச்சு..? என் பாசமலருக்கு அப்பறந்தானே?
அதை மறந்திட்டியா? "

நான்:- "அண்ணே! மன்னிக்கணும், முடியாதுன்னு நான் சொல்லலே. நேரம் இல்லே - முடிய
லேன்னுதான் சொன்னேன். முடியாதுங்குற வார்த்தைக்கும் முடியலேங்குற
வார்த்தைக்கும் வெவ்வேறஅர்த்தம் உண்டு.."

சிவாஜி:- "எங்கிட்டயே டயலாக் பேசுறியா?"

நான்:- "ஒங்ககிட்டே டயலாக் பேசாம வேற யார் கிட்டே போய் நான் பேசுறது? பேச
வைக்குறது என்பேனா! பேசுறது ஒங்க நாக்கு! "

என்று நான் சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் சிவாஜி கோபம் மாறி,ஒரு சிறிய
சிரிப்புடன் அண்ணியைப் பார்த்து தலையசைத்து ஜாடை செய்தார்.அவர் அறைக்குள்
சென்று சற்று நேரத்தில் கையில் புடைப்பான ஒரு கவருடன் வந்து அண்ணனிடம்
நீட்டினார்.

சிவாஜி:- "நீயே உன் கையாலே அவன்கிட்டேகொடு..."

அண்ணி அந்தக் கவரை என் கையில் கொடுத்தார்.
’பாக்கிய லட்சுமி’யின் கரங்களிலிருந்து ’தனலட்சுமி’ வந்தாள்.
வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு இருவருடைய கால்களையும் தொட்டேன்.//
.
...... ஆரூர்தாசின் அனுபவங்களைப் படித்தபோது ஒன்று தோன்றியது...!

# அன்பை யார் மீது வேண்டுமானாலும் காட்டலாம் ...
ஆனால் கோபம் ...
அதை உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்!!

-- 
P.V.NARAYANAN

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to