இராஜபதி
இறைவன் கைலாசநாதர்
இறைவி சவுந்தர நாயகி
கிராமம்/நகரம் இராஜபதி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு
நவ கைலாயம் - இராஜபதி கைலாய நாதர்



இதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தலம், அகத்திய முனிவரின் சிஷ்யர்
உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டுதலின் படி தாமரை மலர்களை ஆற்றில் விட மலர் 8
ஆவதாக ஒதுங்கிய இடமே இராஜபதி  கைலாசநாதர் ஆலயம்.

மூலவர் ; கைலாசநாதர்
அம்மை ; சவுந்திர வள்ளி

அமைவிடம் : இராஜபதி  திருநெல்வேலி மாவட்டம் இவ்வூர் தலம் நெல்லை
திருச்செந்தூர் சாலையில் 38 கி.மீ. தொலைவில் தாமிரபரணி நதிக்கரையில்
 அமைந்துள்ளது.

பிராத்தனையும் நேர்த்திக்கடனும் ;


இது கேது நவக்கிரகத் தலமாக உள்ளதால் கேது கிரகப் பரிகாரப் பிராத்தனை.
இத்தலத்தின் மூலவராகிய கைலாசநாதர் கேதுவின் அம்சமாக அருள்பாலித்து வருகிறார்.
எனவே நவக்கிர தோசங்களில் கேது தோசங்களுக்கான பரிகாரங்கள் செய்து, சிறப்பு
பெறலாம், குழந்தையின்மை, விவசாயம், கால்நடை சேதம், திருமணத்தடை, சர்ப்ப
தோசம்,  வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட தோசங்களுக்கு சிறப்புப் பரிகாரம்
செய்து பலன் பெறலாம்,

தலப் பெருமை: இத்தலத்தில் ஒழுங்கற்ற ஒரு லிங்கம் , இதற்கு நான்கு
புறங்களிலும், நான்கு சக்கர வடிவங்கள் உண்டு. இந்த லிங்கத்திற்குக் கீழேதான்
அகத்தியர் உருவாக்கி, உரோமச முனிவர் வழிபட்ட லிங்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பூசை : இது வாயுத் தலமான காளஹஸ்திக்கு இணையான தலமாகக் கருதப்பெறுகிறது. கேது
பரிகாரப் பூசை சிறப்புடையது.

தல வரலாறு : அகத்தியரின் சீடர் உரோமச முனிவர் , தன் குருவிடம் இனி பிறவாத
வரம் வேண்டும் போது, நீ சென்று தென்பகுதியிலுள்ள நவ கைலாயத் தலங்களில் உள்ள
நான் உருவாக்கிய லிங்கங்களைக் கண்டு பூசை செய்து வந்தால் உனக்கு இந்த அருள்
கிடைக்கும் என்றும், நவ கைலாலய லிங்கங்களைக் காண 9 தாமரை மலர்களை தாமிரபரணி
ஆற்றில் விட்டால் அவை ஒதுங்கும் இடங்களிலுள்ள லிங்கங்களைக் கண்டறிந்து
பூசைசெய்யக் கூறினார், அதன் படி அம்முனிவர் கண்ட 8 ஆவது தலம் தான் இராஜபதி
கைலாயநாதர், இத்தலத்திற்கு அருகில் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னனின் அரண்மனை
இருந்தபடியால் இவ்வூர் இராஜபதி என்றானது. இங்குள்ள கோவில் மிகவும்
பழைமையானது. ஒருகாலத்தில் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்த போது
இக்கோவில் மண்ணில் புதைந்து விட்டதாகவும், பின் வந்த சிவனடியார்கள்
இத்தலத்திற்குப் புதிய கோவில் கட்டி வழிபாடு செய்கின்றனர் என்று வரலாறு
கூறுகிறது.

வரலாறு :

அகத்திய முனிவரின் சீடரான உரோமச  முனிவர் முக்தியைக் வேண்ட, ஸ்ரீ அகத்திய
மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை
விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரைப் பிரதிஷ்டை செய்து
வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான

1. பாபநாசம்  2. சேரன்மாதேவி   3. கோடகநல்லூர்  4. குன்னத்தூர்  5. முறப்பாடு
6. ஸ்ரீ வைகுண்டம்  7. தென் திருப்பேரை  8. இராஜபதி  9. சேர்ந்த பூமங்கலம்

என்ற வரிசையில் இது கேது ஸ்தலம். இக்கோவில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற
வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே இருக்கிறது. அம்பாள், பரிவாரத் தெய்வங்கள் யாரும்
இல்லை. இங்குள்ள லிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள்
இருக்கிறது. லிங்கத்திற்குக் கீழே புதைந்து போன கோயில் இருப்பதாகச்
சொல்கிறார்கள். இத் தலம் பற்றித் தெரிந்த பக்தர்கள் மட்டும் இங்கு
வருகின்றனர். பக்தர்கள் இந்த லிங்கத்தை வழிபட்டு, அருகிலுள்ள மண்ணைப்
பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.


திருவிழா : திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதப்பிறப்பு

சிறப்பு : இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும்.

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி
வரை திறந்திருக்கும்.


ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களும், கேதுவின் ஆதிக்கத்தில், உள்ளவர்களும்,
கேது ஸ்தலமான, ஸ்ரீ காளகஸ்திக்கு நிகரான இராஜபதியில் வழிபடுவது சிறப்பு.


பிரார்த்தனை : ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம்
வேண்டிக்கொள்கிறார்கள். ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன்
அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது
நம்பிக்கை.


நேர்த்திக்கடன் : இந்த சிவனுக்கு பலவர்ண வஸ்திரம் சாத்தி, கொள்ளு நைவேத்யம்
படைத்து வழிபடலாம்.


you tube link:

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
https://www.youtube.com/watch?v=e0ejrYICwCA


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*

[image: baloonz]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to