பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!
[image: brahma-]
*கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் *
*இந்துமதத்தில் நவீன அறிவியல் உண்மைகள் (Advanced Science) இருப்பதை உலகம்
வெகு வேகமாக உணர்ந்து வருகிறது. *
*மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை; திறமான புலமை எனில்
வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் — என்று சொற்தேரின் சாரதியாம்
பாரதி பாடி வைத்தான். அது உண்மையாகி வருகிறது.*
*சிவபெருமானின் நடனத்தில்– பிரபஞ்சத்தின் தாள லயங்கள் (Dance of Shiva)
இருப்பதை**ப் பல வெளிநாட்டு அறிஞர்கள் ஆங்கிலத்தில் புத்தகம் வாயிலாக
வெளியிட்டனர். அதை நடராஜர் என்னும் அற்புதமான பஞ்சலோக சிலையாக வடித்த தமிழ்
ஸ்பதிகளின் பெருமையை இன்றும் உலகமே வியந்து பாராட்டி வருகிறது. நடராஜர் சிலை
இல்லாத மியூசியம் உலகில் இல்லை. நடராஜர் படமோ விக்ரகமோ இல்லாத வெளி நாட்டு
இந்தியவியல் அறிஞர் எவரும் இல்லை.*
*கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11ஆவது அத்தியாயத்தில்
இருக்கிறது. உலகின் மிகப்பெரிய அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட்
ஓப்பன்ஹீமர், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் முதல்
அணுகுண்டு வெடித்த கட்சியைப் பார்த்துவிட்டு பகவத் கீதையின் 11 ஆவது
அத்தியாயத்தின் 12ஆவது ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார். திவி சூர்ய
சஹஸ்ரஸ்ய…………………………. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் என்ன நிகழுமோ
அதைப் பார்த்து எனக்கு மயிர்க்கால்கள் தோறும் கூச்சம் ஏற்படுகிறது என்று
சொல்லி அர்ஜுனர் வியந்ததை அப்படியே ராபர்ட் ஓப்ப்ன்ஹீமர் சொல்லி உலகை
வியப்பில் ஆழ்த்தினார்.*
*இப்பொழுது கருந்துளைகள் (Black Holes) பற்றி உலக விஞ்ஞானிகள் எழுதி வியந்து
வருகின்றனர். வானவியலின் புதிய அதிசயங்கள் இவை. யாராவது ஒருவர் நியூ
ஸைன்டிஸ்ட் (New Scientist or Scientific American) அல்லது ஸைன்டிபிக்
அமெரிக்கன் போன்ற அறிவியல் இதழ்களை வாசித்துவிட்டு பகவத் கீதையைப் படித்தால்
புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும். பிளாக் ஹோல் என்னும் கருந்துளைகள் பற்றிய
செய்திகள் அதில் (11ஆவது அத்தியாயத்தில்) உள்ளன!! ஆனால் பிரம்மா பற்றிய
விஞ்ஞான உண்மைகளை யாருமே அறிந்து எழுதவில்லை. ஒரு சில அறிவியல் உண்மைகளை
மட்டும் பட்டியலிடுகிறேன்:–*
*அறிவியல் உண்மை 1*
* கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களும் அதைச்
சுற்றி மில்லியன் கணக்கில் பூமி போன்ற கிரகங்களும் இருப்பதை உலகம் அறியும்.
அதில் பல்லாயிரம் கிரகங்களில் வெளி உலகவாசிகள் (Extra Terrestrials) வசிக்க
உள்ள வாய்ப்புகள் பற்றியும் விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் சத்ய லோகத்தில்
வசிப்பதாகக் கருதப்பெறும் பிரம்மா பற்றிப் படிக்கையில் அவர் ஒரு வெளி
உலகவாசியோ என்று வியக்கத் தோன்றும். அவருடைய வாழ்நாளின் காலம் நாம் இந்தப்
பக்கத்தில் எழுத முடியாத அளவு பெரிய எண்ணிக்கை. மற்ற கலாச்சாரங்களுக்கு 1000,
10,000 என்ற எண்கள் கூடத் தெரியாத காலத்தில் , நாம் உலகமே வியக்கும் ஆயுளை
பிரம்மாவுக்குக் கொடுத்தோம் அது மட்டுமல்ல இது ஒரு பிரம்மாவின் ஆயுள். அவர்
போன பின், அடுத்த ப்ரம்மா வருவார் என்றும் சொன்னோம். இன்னும் விஞ்ஞானிகளுக்கு
— காலம் என்பது சுழற்சி உடையது— Cyclical வட்டமானது என்று கூடத் தெரியாது.
இப்பொழுது கருந்துளை ஆய்வுகள் நிறைய நடப்பதால் நமது கொள்கையை வெகு விரைவில்
உலகம் ஏற்கும்.*
*[image: hindu-gods-brahma]*
*பிரம்மாவின் ஒரு நாள் என்பது 4,320,000,000 ஆண்டுகள். இது போல அவர் 100
ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் புது பிரம்மா வருவார். இப்பொழுதுள்ள பிரம்மாவுக்கு
வயது 51. ஏதோ அறிவியல் புனைக்கதை (Science Fiction) படிப்பது போலத் தோன்றும்..
இது கதை என்று யாராவது நினைத்தாலும் முதலில் அறிவியல் புனைக் கதை எழுதிய
பெருமை நமக்கே கிடைக்கும்.*
*அது மட்டுமல்ல. யுகம் பற்றிய எதைக் கூட்டிப் பார்த்தாலும் ஒன்பது என்ற எண்
வரும். இதை சுமேரியர்கள் கூட நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு பிரளயத்துக்கு
முந்தைய சுமேரிய மன்னர்களுக்கு இப்படி ஆட்சி ஆண்டுகளைக் கொடுத்துள்ளனர்!!*
,,,,,,,, தொடரும்
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u*
[image: baloonz]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.