பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!
லண்டன் சுவாமிநாதன் *அறிவியல் உண்மை 2* பிரம்மாவுக்கு ஒரு பெயர் ஹிரண்ய கர்பன். அதாவது தங்க முட்டை! உலகம் உருண்டை என்பதைக் கண்டுபிடிக்க மேலை நாடுகள் ஒரு கலீலியோ, ஒரு கோப்பர்நிகஸ் தோன்றும் வரை காத்திருந்தது. ஆனால் நாமோ துவக்க காலம் முதல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கோள வடிவானவை என்பதை அறிந்து, அண்டம் ( முட்டை வடிவானது), பிரம்மாண்டம், பூகோளம் (புவியியல்) என்று பெயரிட்டோம். அதுமட்டுமல்ல. அந்த ஹிரண்யகர்ப்பன் ஒரு நாள் திடீரென வெடித்து வானமும் பூமியுமாகப் பிளந்ததென புராணங்கள் பகரும் இதையே இப்பொழுது மாபெரும் வெடிப்பு Big Bang Theory — பிக் பேங் – என்று சொல்லுகின்றனர். இது ஏன் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை. நமது சாத்திரங்கள் மட்டுமே கடவுள் ஒரு சொல்லை நினைத்தார் — அதைச் சொன்னார்- உலகம் உருவாக்கப்பெற்றது என்று சொல்லுகிறது. இதை பைபிள் அப்படியே நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டது. ஆனால் அதற்கு மேல் விளக்கவில்லை. நாம் அதற்கும் மேலாக ஒரு படி சென்று மாபெரும் வெடிப்பு —ஒரு நாளைக்குப் பலூன் போல ஊதிக்கொண்டே போய் பின்னர் முடிவில் வெடிக்கும் —அப்பொழுது காற்றுப் போன பலூன் போல பிரபஞ்சம் சுருங்கும் Big Crunch — மீண்டும் பலூன் போல ஊதும் — என்று – ஸைக்ளீகல் Cyclical —வட்டமான சுழற்சி உடையது என்று சொல்லியிருக்கிறோம். இந்த பிக் க்ரஞ்ச் Big Crunch – கொள்கையை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் ஏற்கின்றனர். *அறிவியல் உண்மை 3* தசாவதாரத்தில் முதலில் மீன், பிறகு ஆமை, பிறகு பன்றி, பிறகு பாதி மனிதன் –பாதி சிங்கம் என்பதெல்லாம் டார்வீன் சொன்ன பரிணாமக் (Theory of Evolution) கொள்கையை ஒட்டி இருப்பதை நாம் அறிவோம் ஆனால் முதல் மூன்று அவதாரங்களும் உண்மையில் ஆதி நூல்களில் பிரம்மாவின் பெயரிலேயே (பிரஜாபதி) உள்ளன. ஆக அவரே படைப்புக் கடவுள்—பரிணாம வளர்ச்சிக் கடவுள். இதை சதபத பிராமணம் (Satapata Brahmana) முதலிய நூல்கள் விளக்கும். பின்னர் இதை விஷ்ணுவின் அவதாரங்களாகப் புராணங்கள் எழுதின. இதை இன்னொன்றாலும் அறியலாம். [image: four faced Sumer] Four faced God of Sumer (Brahma?) <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> ......... தொடரும் <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *v **a n a k k a m** S u b b u* [image: baloonz] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
