பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!

லண்டன் சுவாமிநாதன்


*அறிவியல் உண்மை 4*

* வெளிநாட்டுக்காரர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் ஒரு விஷயம் நம் இலக்கியங்களில்
உண்டு. அதை எழுதி, எழுதி நம்மை நக்கல் செய்வது—பகடி செய்வது—கிண்டல் செய்வது
அவர்களுக்குப் பொழுதுபோக்கு. அது என்ன ‘’பலான’’ கதை என்கிறீர்களா?*

*பிரம்மா ஒரு மகளைப் பெற்றார். அவள் பெயர் சதரூபா (நூறு உருவம்)—அவ**ள்
அழகைக் கண்டு பிரம்மா அவளையே உற்று நோக்கினார். அவளுக்கோ வெட்கம் பிடுங்கித்
தின்றது- வேறு திசையில் ஓடி ஒளிந்தாள் அங்கேயும் பிரம்மா திரும்பினார்.
ஒவ்வொரு திசையிலும் ஒரு முகம் வரவே அவருக்கு நாலு முகம் தோன்றி அவர் நான்முகன்
ஆனார். அவளோ வெட்கப்பட்டுக் கொண்டு மேலே போனாள். அங்கு ஐந்தாவது முகம்
உதித்தது. அவளுடன் ஒன்று கூடிப் (incestual intercourse) பின்னர் உலகத்தைப்
படைத்தார். இதைச் சொல்லிச் சொல்லி வெளிநாட்டினர் மகிழ்வர். உண்மையில் இந்தக்
கதையை நம்மிடமிருந்து பைபிளும் இரவல் வாங்கி முதல் அத்தியாயத்திலேயே
எழுதிவிட்டது. ஆதாம் என்பவரின் இடுப்பு எலும்பை கடவுள் முறித்து ஏவாள் என்ற
பெண்ணை உருவாக்கவும், ஆதாம் அவளுடன் கூடி (Incest?) மனித இனத்தை உருவாக்கினார்
என்பது அக் கதை. ஒரே உடலில் இருந்து ஒருவரைப் படைத்தால் அந்த ஏவாளும் சதரூபா
போல ஆதாமின் மகள்தானே!!*

*இதில் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் முதலில் பாக்டீரீயா போல இருந்த
உயிரினம் ஒரு செல் உயிரினங்களாக மாறி நீரில் நீந்தி பிறகு ஒரே உடலில் ஆண் பெண்
உறுப்புகளுடன் பிறந்தன (ஹெர்மாப்ரோடைட் Hermaphrodite). பின்னர்தான் ஆண், பெண்
என**த் தனித்தனி உயிர் இனங்கள் தோன்றின. இதை அர்த்தநாரீஸ்வரர் என்னும் சிவனின்
வடிவத்துடன் ஒப்பிடலாம்.*

*முதலில் ஆண் தோன்றினானா? பெண் தோன்றினாளா? முதலில் முட்டை வந்ததா? கோழி
வந்ததா? (Chicken and Egg question) என்ற கேள்விக்கு விடை கூறும் கதை இது.
பெரிய விஞ்ஞான உண்மைகளை, சுவையான கதைகளாகத் தருபவை நம் புராணங்கள்!*


*[image: Svetovid-Statue-Ruyan-Island-] Four faced Slavic God (Svetonvid)*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!**v **a n a k k a m**  S u b b u*

[image: baloonz]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to