பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!
லண்டன் சுவாமிநாதன்
*அறிவியல் உண்மை 5*
* பிரம்மாவின் தோற்றம் பற்றிய கதை பெரிய பூகர்ப்பவியல் ( Geology ஜியாலஜி)
கதையாகும். அவர் நீரில் படுத்து இருந்த நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்து
உதித்த தாமரை மலரில் இருந்து தோன்றியதாக ஒரு கதை உண்டு. இது காண்டினென்டல்
ட்ரிப்ட் Continental Drift எனப்படும் கண்டங்கள் நகர்ந்த கதை ஆகும். முதலில்
பூமி என்பது ஒரே நிலப்பரப்பாக இருந்தது பின்னர் அது தாமரை மலர்வது போல மெதுவாக
நகர்ந்து இன்றுள்ளது போல ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பிரிந்தது. இதையே
தாமரையில் பிரம்மா தோன்றி உலகைப் படைத்தார் என்போம். புராணத்தில் கூட
பிரம்மாண்டம் என்று இருப்பதைக் காணலாம். ‘ப்ரு’ என்னும் வடமொழி வேர்ச் சொல்
மூலமே ‘’பெருகுதல், பிரிதல், பெரிய, ப்ருஹத், ப்ரம்ம’’ — முதலிய சொற்கள்
வந்தன.*
*கிரேக்க மொழியில், முதலில் இருந்த சூப்பர் கான்டினென்ட்டை ‘’பங்கேயா’’
Panagaea என்பர். பங்கய என்றால் தாமரை எனப் பொருள். இது பங்கஜம் என்ற வடமொழிச்
சொல். பிற்காலத்தில் இந்தப் பொருள் அறியாதோர் கிரேக்க மொழியில் புதுப் பொருள்
கண்டனர் ( பேன்+ கயா ). பெண்கள் குழந்தை பெறுவதையும் தாமரை மலரில் இருந்து
குழந்தை வந்ததாக வடமொழி இலக்கியங்கள் வருணிக்கும்.*
*அறிவியல் உண்மை 6*
* கணித விஷயத்தில், ஒன்பது என்ற எண்ணின் வியப்புறு குணங்களில் பல ஆராய்ச்சி
செய்து அதன் பெயரில் பிரம்மாண்டமான எண்களைக் க(ல்)ற்பித்து (கல்பம் என்பதே
பிரம்மாவின் ஒரு நாள், பரம் என்பது அவரது 100 ஆண்டு) உலகம் அறியாத புதுமைகளைச்
செய்தனர் இந்துக்கள். ஒன்பது என்ற எண்ணின் பரிபூரணத் தன்மையை மனதிற் கொண்டே
108, 1008 என்ற அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் ஆகியவற்றைப் படைத்தார்கள் *
*[image: brahma-statue]*
*அறிவியல் உண்மை 7*
* நாரா (நீரா) அயனன்= நாராயணன், பிரம்மா மற்றும் முதல் இரண்டு அவதாரங்கள்
எல்லாம் — நீரில்தான் உயிரினங்கள் தோன்ற முடியும், பரிணாம வளர்ச்சி பெற
முடியும் —- என்று காட்டுகின்றன. இன்று வெளி கிரகங்களிலும் நீரின்
மூலக்கூறுகள் (water molecules) இரு**க் கின்றனவா என்று விஞ்ஞானிகள் தேடிக்
கொண்டிருப்பதை நாம் அறிவோம்.*
*அறிவியல் உண்மை 8*
*பிரம்மா என்பவர்*
* வானவியலை (Astronomy/ Cosmology) விளக்கும் கடவுள்*
* பூகர்ப்பவியலை (Geology) விளக்கும் கடவுள்*
* உயிரியல், பரிணாம வளர்ச்சியை (Biology / Theory of Evolution) விளக்கும்
கடவுள்*
* கணிதம், பிரம்மாண்ட எண்களை (Mathematics and Amazing Numbers) விளக்கும்
கடவுள்*
* பிக் பேங், பிக் க்ரஞ்ச்(Big Bang and Big Crunch) முதலிய அதி நவீன
கொள்கைகளை (Ultra Modern Theories) விளக்கும் கடவுள்!!*
கட்டுரை நிறைவு பெற்றது.
{இதைத் தொடர்ந்து இலண்டன் சுவாமிநாதன் அவர்கள் எழுதிய *பிரம்மாவின் 29
வடமொழிப் பெயர்கள் தொடர்ந்து தரப் பெறும்.*
*(இது உலகின் முதல் அகராதி (Thesaurus/ Dictionary நூலான அமரகோசம் என்ற நூலின்
அடிப்படையில் எழுதப் பெற்றது)}*
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*v **a n a k k a m** S u b b u*
[image: baloonz]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.