*முனைவர் மா. பத்மபிரியா*
மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் ஆகும். தேவைகளில் முதன்மையானது உணவே. திணையிலக்கியத்தின் பின் தோன்றிய மணிமேகலையில் ‘உணவின்’ முதன்மையானது, “அறம் எனப்படுவது யாது எனக்கேட்பின் மறவாது இதுகேள் மண் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” *(மணிமேகலை.25.288-291)* என்றவாறு உணர்த்தப்பட்டுள்ளது. திருக்குறளும், “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” *(குறள்.81)* விருந்தினரை வரவேற்று உணவிடுதலே இல்லறத்தான் கடமை என்று தெளிவுறுத்துகின்றார். நீதி மற்றும் காப்பியம் புகழ்ந்துரைக்கும் உணவிட்டு உயிர் ஓம்பும் பழக்கத்தின் மூலஊற்றாக அகத்திணையிலக்கியம் விளங்கினமை தெள்ளிதின் புலனாகும். அகத்திணையிலக்கியத்தில் தன்னைப்போன்ற சக மனிதர்களுக்கு உணவிடும் நேய உணர்வானது ‘விருந்தோம்பல’ என்னும் நிகழ்வால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. விருந்தோம்பல் என்னும் இனிய பண்பாட்டு அறத்தை ஆணும் பெண்ணுமாக இணைந்தே செயல்படுத்தியுள்ளனர். வளம் மேம்பட்டால் தான் விருந்தினருக்கு உணவிட முடியும் என்பதும் அவர்களால் உணரப்பட்டுள்ளது. அதனால் தான் இயற்கை செழிக்கவும் வேண்டியுள்ளனர். “நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!” *(ஐங்குறுநூறு.பா.1)* “விளைக வயலே! வருக இரவலர்!” *(ஐங்குறுநூறு.பா.2)* “பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!” *(ஐங்குறுநூறு.பா.3)* “பசி இல் ஆகுக! பிணிசேண் நீங்குக!” *(ஐங்குறுநூறு.பா.5)* இரவலர் வர வேண்டும், பசி இல்லாமல் போக வேண்டும் என்பது முன்னோர்களின் விருப்பமாக இருந்துள்ளது. சங்ககால மகளிரின் மனையற மாண்புகளில் முதன்மையானதாக ‘விருந்தோம்பல்’ முன் வைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் மனையறம் போற்றும் தலைவியின் மாண்புகளை “விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்” (தொல்.கற்பு.11) என்று விருந்தோம்பலுக்கு முன்னுரிமை தந்து கூறியுள்ளார். திருவள்ளுவர், விருந்தோம்பலுடன் சுற்றம்ஓம்பலையும் அதிகாரமாக வைத்துப் போற்றியுள்ளார். இத்தகைய பெருஞ்சிறப்புற்ற விருந்தோம்பல் அகன் ஐந்திணைகளில் வாழ்ந்த தமிழரின் வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடிக்கப்பட்டமை குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ... தொடரும்... <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* [image: noury thanks owner] *v **a n a k k a m** S u b b u* [image: noury thanks owner] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
