<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>

*கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.*

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த
ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.


குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

* கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
* குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
* குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
* வரவு, செலவை வரையறுப்பது எப்படி?


குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

* 1. வருமானம்
* 2. ஒத்துழைப்பு
* 3. மனித நேயம்
* 4. பொழுதுபோக்கு
* 5. ரசனை
* 6. ஆரோக்கியம்
* 7. மனப்பக்குவம்
* 8. சேமிப்பு
* 9. கூட்டு முயற்சி
* 10.குழந்தைகள்


கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

* 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
* 2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
* 3. கோபப்படக்கூடாது.
* 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
* 5. பலர் முன் திட்டக்கூடாது.
* 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
* 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
* 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
* 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
* 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
* 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
* 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய
முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
* 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
* 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
* 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
* 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
* 17. ஒளிவு மறைவு கூடாது.
* 18. மனைவியை நம்ப வேண்டும்.
* 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
* 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
* 21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை
வைத்து சந்தோசப்பட வேண்டும்.
* 22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
* 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
* 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
* 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
* 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக்
கூடாது.
* 27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள்
மனைவி.
* 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
* 29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
* 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
* 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
* 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
* 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
* 34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
* 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
* 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.





*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

                    *V A N A K K A M     S U B B U    *
[image: யவனிகா's Avatar]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to