<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>

தமிழ் மக்களின் பண்டைக்கால பழக்க வழக்கங்களில் விருந்தோம்பல் ஒன்று.

கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்தகுடி (புறப் 35)

தமிழ்க்குடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டில்
விருந்தோம்பல் சிறப்புமிக்கதாகும். ஆனால் இப்போது அதன் சிறப்பு குறைந்துகொண்டே
வருகின்றது. அதனை எடுத்துக்கூறும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் வகையில் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க
இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, புறநானுறு, பத்துப்பாட்டு நூலான
சிறுபானாற்றுப்படை, நீதி நூலான திருக்குறள், காப்பிய நூலான சிலப்பதிகாரம் ஆகிய
நூல்கள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.

தொல்காப்பியம் கூறும் விருந்து

தொல்காப்பியம் புதியதாக வரும் எல்லா இலக்கியங்களையும் விருந்து என்ற பொருளில்
குறிப்பிடுகின்றது.

விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (பொருள் 1495)

இதனை அடிப்படையாகக் கொண்டே புதியதாக வருபவர்களை விருந்தினர் என்கிறோம்.

நற்றிணையில் விருந்தோம்பலின் சிறப்பு:-

தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்ற எண்ணத்தையும்
அவ்விருந்தினருக்கு இனிய உணவு அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும்
கொண்டிருப்பர். அதனால் மீன் வேட்டைக்குச் சென்ற கணவர் விரைவில் திரும்பி
வரவேண்டும் என்று எதிர்நோக்கிக் காத்திருக்கும் செய்தியும் இரவில் விருந்தினர்
வந்தாலும் மனைவியும் கணவனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வரவேற்று விருந்து
படைக்கும் செய்தியும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.

"............................ மனையிலிருந்து
இருங்கழி துழவும் பனித்தலைப்பரதவர்
திண்திமில் விளக்கம் எண்ணும்" (நற்:372)
"அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்" (42, 9-18)

புறநானூற்றில் விருந்தோம்பலின் சிறப்பு:-

பெருங்குன்றூர்கிழார் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெறச் சென்ற பொழுது எனக்கு
எந்தக் குறையும் இல்லை என்றாலும் விருந்தினர் வந்தால் அவர்களை உபசரிப்பதற்குத்
தேவையான செல்வம் இல்லாத வறுமைநிலை மட்டும் என்னிடம் இருக்கின்றது. அதனை
மட்டும் தீர்த்து வைப்பாயாக என்று கூறுவதன் மூலம் விருந்தோம்பலின் சிறப்பு
வலியுறுத்தப்படுகின்றது.

விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புன ருடம்பிற் றோன்றியென்
அறிவுகெட நின்ற நல் கூர்மையே (புற:266)

என்ற பாடல் வரிகள் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் கூறுகின்றது.

இதைப் போன்று 213, 254, 265, 279, 306, 316, 369 ஆகிய பாடல்களிலும்
விருந்தோம்பல் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சிறுபாணாற்றுப் படையில் விருந்தோம்பலின் சிறப்பு:-

சிறுபாணாற்றுப்படை அரசர்களின் கொடைச் சிறப்பைக் கூறுவதுடன் விருந்தோம்பல்
பற்றிய செய்திகளையும் கூறுகின்றது.

எயில்பட்டின பரதவப் பெண்கள் சூடான குழல் மீன் கறியையும், வேலூரில் இருக்கும்
எயினர் குலப்பெண்கள் இனிய புளிக்கறி சேர்த்து சமைத்த சோற்றுடன் காட்டுப்பசு
இறைச்சியையும், ஆழுரைச் சார்ந்த உழவர்களின் தங்கைகள், குற்றிச் சமைத்த
சோற்றுக் கட்டியுடன் பிளந்த காலுடைய நண்டுக்கறியையும் விருந்தோம்பலுக்குப்
பயன்படுத்துவர் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது.

எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் நாட்டின் அமைவரப் பெறுகுவீர் (சிறு 175 - 177)
சுவைப்பு மான் அரிசி அமலை வெண்சோறு
சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் (சிறு 194-195)

விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் கூறுவதுடன் ஒவ்வொரு ஊரிலும் என்ன வகையான
உணவுகள் விருந்துக்குப் பயன்படுத்தப்பட்டன என்பதையும் சிறுபாணாற்றுப்படை
சுட்டிக் காட்டுகின்றது.




*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



[image: noury thanks owner] *v **a n a k k a m**  S u b b u*    [image:
noury thanks owner]

[image: noury thanks owner]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to