கத்தார் பிரச்னையை எளிதில் விளக்கும் 12 கேள்வி-பதில்கள்!
[image: மு.நியாஸ் அகமது]
[image: vikatan.com] <http://www.vikatan.com/>
FRIDAY, JUNE 09, 2017
மு.நியாஸ் அகமது

[image: கத்தார்]

*அ*ரபு வளைகுடாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது கத்தார். சவுதி, அமீரகம்
உள்ளிட்ட நாடுகள் தங்கள் ராஜதந்திர உறவுகள் அனைத்தையும் கத்தாருடன்
முறித்துள்ளன... வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள்,
கப்பல்கள் செல்ல அனுமதி மறுத்துள்ளன. கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப
உத்தரவிட்டுள்ளன. அரபு பாலையில் தனியாக நிற்கும் சித்ரா மரமாக இருக்கிறது
கத்தார். அந்த மரத்தின் நிழலில் ஏறத்தாழ 6.5 லட்சம் இந்தியர்கள், தங்கள்
எதிர்காலம் குறித்த அச்சத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில்
கத்தாரின் நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு
அதிகமிருக்கிறது.

அந்தத் தேசத்தின் பிரச்னை... அதுசம்பந்தமான நமக்குள்ள சந்தேகங்கள் குறித்த
விளக்கம்தான் கீழே உள்ள 12 கேள்வி பதில்கள்...

*ஏன் திடீரென்று கத்தார் தேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது... அரபு
தேசங்கள் தங்கள் ராஜதந்திர உறவுகளை ஏன் முறித்துக்கொண்டன...?*

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தோமானால், இது திடீரென்று முளைத்த பிரச்னை அல்ல...
2014 ஆம் ஆண்டு முதலே கத்தார் தேசத்தை, வளைகுடா ஆலோசனை சபை (Gulf Cooperaion
Council) சந்தேகக் கண்ணோடுதான் அணுகிவந்தது. அது, கத்தார் நம்மோடு
கைகுலுக்கிக்கொண்டே, ஈரான், ஹமாஸுடன் கைகுலுக்குவதாகச் சந்தேகித்தது. அப்போதே,
கத்தாரை எச்சரித்தது. ஆனால், இப்போது எழுந்துள்ள பிரச்னைக்குக் காரணமாகக்
கூறப்படுவது கத்தார் இளவரசர் ஷேக் தமீமின் உரை.

அண்மையில் நடந்த ராணுவ பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய ஷேக் தமீம்,
“ஈரான், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) மற்றும் ஹமாஸுடன்
நாம் இணக்கம் பாராட்ட வேண்டும்” என்று பேசியதாக, கத்தார் தேசத்துக்குச்
சொந்தமான கத்தார் செய்தி நிறுவனத்தின் இணையதளம், சமூக ஊடகங்கள் அனைத்திலும்
செய்தி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்துதான் பல தேசங்கள் தங்கள் ராஜாங்க
உறவுகளை முறித்துள்ளன.

*ஹூம்...  வளைகுடா ஆலோசனை சபை என்றால் என்ன...?*

வளைகுடா ஆலோசனை சபை என்பது அரசியல், பொருளாதாரக் கூட்டமைப்பு. இது, 1981 ஆம்
ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. இதில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி
அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகள் உள்ளன.

*அந்த அமைப்பிலுள்ள எந்தெந்த தேசங்கள் கத்தாருடனான உறவை முறித்துள்ளன..? *


பஹ்ரைன்தான் முதலில் தன் உறவை முறித்தது. அதைத் தொடர்ந்து பத்து நிமிட
இடைவெளியில் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து, மாலத்தீவு என அடுத்தடுத்து தனது
உறவை முறித்துக்கொண்டன. சில நாள்களுக்குப் பின் ஜோர்டானும் தன் உறவை
முறித்துக்கொண்டது.

*சரி... ஷேக் தமீம் அப்படிப் பேசியது உண்மையா... அவர் ஹமாஸுடன் இணக்கம்
பாராட்ட வேண்டுமென்றா பேசினார்...?*

'இல்லை' என்கிறது கத்தார். அந்தச் செய்தி தங்கள் ஊடகத்தில் வந்த சில
நிமிடங்களிலேயே இதை மறுத்துவிட்டது. தங்கள் இணையதளம்... சமூக ஊடகக் கணக்குகள்
அனைத்தும் ஹேக்கர்ஸால் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியது. இதுகுறித்து
விசாரித்த அமெரிக்காவின் FBI-யும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. FBI
அமைப்பு, கத்தாரின் செய்தி இணையதளத்தை ஹேக் செய்தது ரஷ்யர்கள் என்கிறது. ரஷ்ய
அரசு இதை மறுத்துவிட்டது. ரஷ்ய அரசுக்கும் இந்தச் செயலுக்கும் தொடர்பில்லை
என்று கூறிவிட்டது.

*ஹமாஸ்... தெரிகிறது. அது, பாலஸ்தீன விடுதலை அமைப்பு. இஸ்லாமிய சகோதரத்துவ
அமைப்பு (Muslim Brotherhood) என்றால் என்ன... அதை இஸ்லாமிய நாடுகளே வெறுக்க
என்ன காரணம்...?*


இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) 1928 ஆம் ஆண்டு எகிப்து
இஸ்லாமிய அறிஞர் ஹசன் - அல்- பானாவால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது
தொடக்கத்தில் அறக்காரியங்களில் ஈடுபட்டுவந்தது. அப்துல் நாசருடன் இணைந்து
எகிப்தில் பிரிட்டன் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், முடியாட்சிக்கு எதிராகவும்
போர் செய்தது. நாசரை அந்தத் தேசத்தின் அதிபராக அமரவைத்ததில் இந்த அமைப்புக்கு
முக்கியப் பங்கு இருக்கிறது. ஆனால், நாசர் மதச்சார்பற்ற கொள்கைகளைத் தழுவியது
இந்த அமைப்புக்குப் பிடிக்கவில்லை. அது விரும்பியது இஸ்லாமிய தேசத்தை. இதனால்,
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு முன்னணித் தலைவர் சையத், நாசரை படுகொலை செய்யத்
திட்டமிட்டார்.. ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, சையத்
கைதுசெய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

இந்த அமைப்பு, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்ப்பதாகவும், தீவிரவாதச்
செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வந்ததையடுத்து பஹ்ரைன், எகிப்து, ரஷ்யா,
சவுதி, சிரியா மற்றும் அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த அமைப்பைத் தடை
செய்துள்ளன.

*ரஷ்யா இந்த அமைப்பைத் தடை செய்ததற்கும்... கத்தார் செய்தி நிறுவனத்தை ஹேக்
செய்ததில் ரஷ்யா பெயர் அடிபடுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா...?*

இருக்கலாம்... கத்தார் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் நெருக்கமாக இருப்பதாகக்
கருதி, கத்தாரைத் தனிமைப்படுத்தக்கூட இதுபோலச் செய்திருக்கலாம். இந்த
விவகாரத்தில் இன்னொரு கருத்தும் இருக்கிறது. கத்தார், பாலஸ்தீனத்துக்கும்
ஹமாஸுக்கும் உதவி செய்வதாக இஸ்ரேல் நினைக்கிறது. அதனால், இஸ்ரேல் - சவுதி
கூட்டணி தந்திரவேலைதான் இது என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

*ஹூம்... கத்தார் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. இதை வளைகுடா ஆலோசனை சபையில்
விழுந்த விரிசலாகக் கருதலாமா...?*
அப்படிக் கருத முடியாது. கத்தாரைத் தவிர, அனைத்து நாடுகளும் இணக்கமாகத்தான்
இருக்கின்றன. குவைத் இந்த விவகாரத்தில் பிற நாடுகளைச் சமாதானப்படுத்தும்
பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது.

*அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன...?*

'கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள்,
தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்' என்று ட்விட்டர் மூலம் கருத்து
தெரிவித்தார். அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ராபர்ட் கேட்ஸ், கத்தாரைக்
கடுமையான வார்த்தைகளால் தாக்கி இருக்கிறார். ''அடிப்படைவாதிகளுக்குக் கத்தார்
பொருளாதார உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்'' எனக் கடுமையான சொற்களில்
கருத்துத் தெரிவித்துள்ளார். கத்தாரின் மிகப்பெரிய ராணுவ விமானத் தளமான
அல்-உதய்த் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. புவியியல்ரீதியாகக்
கத்தார், அமெரிக்காவுக்கு மிக முக்கியமான நாடு. அதனால், அமெரிக்கா எந்தக்
கடுமையான நிலைப்பாடும் எடுக்காது என்றுதான் தோன்றுகிறது.

[image: அல்-ஜசீரா தலைமை அலுவலகம்]*கத்தார் விவகாரத்தில் அல்-ஜசீராவை முடக்க
வேண்டும் என்ற குரலும் கேட்கிறதே...?*

ஆம். அதை முன்வைப்பது சவுதிதான். நேற்று இரவு பத்து மணிக்கு (இந்திய
நேரத்தில்) தங்கள் இணையதளத்தை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக அல்-ஜசீரா செய்தி
வெளியிட்டது. அல்-ஜசீரா... தொடந்து சிரியாவின் அவலங்களையும், அரேபிய
ஆட்சியாளர்களின் முடியாட்சி அட்டூழியங்களையும் வெளிக்கொண்டு வருகிறது. இது,
சவுதிக்குச் அசெளகர்யமான ஒன்று... அதனால், இந்தப் பிரச்னையில் அல்-ஜசீராவையும்
முடக்கப் பார்ப்பதாகத்தான் தெரிகிறது.

*சரி... அங்குள்ள மக்களின் நிலை என்ன... குறிப்பாக இந்தியர்களின் நிலை...
உணவுத் தட்டுப்பாடு என்றெல்லாம் செய்தி வருகிறதே...?*

கத்தார் தனது உணவுத் தேவைக்காகப் பெரும்பாலும் அண்டை நாடுகளைத்தான் நம்பி
இருக்கிறது. எல்லைகள் சீல் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், மக்கள் உணவுக்காகப்
பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, உணவுகளை அதிக அளவில் சேகரித்துவைக்கத்
தொடங்கியுள்ளனர். ஆனால், ஆட்சியாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்கிறார்கள்.

*[image: கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர்]எந்தெந்த நாடுகள் கத்தாருடன்
உறவில் இருக்கின்றன...?*

பஹ்ரைன், எகிப்து, சவுதி, மாலத்தீவு, அமீரகம், லிபிய கலிஃபா ஹஃப்தார்
அரசாங்கம் மற்றும் யேமனைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகள் கத்தாருடன்
உறவில்தான் இருக்கின்றன. 94 தூதுக்குழுக்கள் கத்தாரில் இயங்கி வருகின்றன. 34
நாடுகளின் தூதரக அலுவலகங்கள் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கின்றன.

*எப்போது இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்...?*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
இந்தப் பிரச்னையில் எங்கள் பிழை எதுவுமில்லை. நாங்கள் சரணடைய மாட்டோம் என்று
கத்தார் கூறிவிட்டது. கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் முகமதுபின்
அப்துல் ரகுமான், “நாங்கள் எதற்காகவும், யாருக்காகவும் எங்கள் வெளியுறவுக்
கொள்கைகளையும், தேசத்தின் இறையாண்மையையும் விட்டுத் தரமாட்டோம். சர்வதேசச்
சமூகம் எங்களுடன் இருக்கிறது. அது, இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண உதவும்”
என்று கூறியுள்ளார். இதனிடையே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண, வெள்ளை மாளிகை
பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளது. இப்படியானச் சூழலில் இந்தப் பிரச்னை
உடனே முடியும் என்று தோன்றவில்லை.


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

                 [image: Right ☯ no buy ever !!!]   *V A N A K K A M     S
U B B U *
[image: xyz]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to