*பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?*


*தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது
இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க
வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக்
கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப்
பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.*



*குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில்
எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப்
பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?’ என்கிற
வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் –
போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம்,
உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள
வேண்டும்.*


*மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?*

*பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி
குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள்
குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.
பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.*


** 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.*

** 2. ஒருவரையொருவர் குறை கூறும் பழக்கம்.*

** 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.*

** 4. விரும்பியதைப் பெற இயலாமை.*

** 5. ஒருவரையொருவர் நம்பாமை.*

** 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.*

** 7. உல்லாசப் பயணம் போக இயாலாமை.*

** 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.*

** 9. விருந்தினர் குறைவு.*

** 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.*

** 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.*

** 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.*

** 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.*

** 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.*

* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>*


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! *

*வாழிய பாரதமணித் திருநாடு!   *


*                    V A N A K K A M     S U B B U
    *

*[image:
v6nOIFtHyBN8h3KrjGrdAKbDA1aC44bhw4_eHHmifXlDY46T4EGDKwzHq9cIt6Z7.gif]*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to