*நம பார்வதி பதயே*... *கத்தரிக்காயும் கடோரபாபியும் !!!* வித்தியாசமான ஒரு
தலைப்பு.... மதுரையம்பதியும் பிராட்டியும், பதி பசு பாசம்..விளக்கி... பாபி
களுக்கும் படி அளக்கும் அஷ்டமி பிரதட்சி்ண விழா... இன்றைய விழாவில் அம்பாள்
பல்லக்கு சிவஸ்ரீ சக்தியை ( *பெண்களை*) கொண்டு புறப்பாடு ஆகும்...தனித்துவம்
கொண்ட..விழா...
பன்னிரு மாதங்களும் விழாக்கோலம் பூணும் மதுரையம்பதியில் இன்று மார்கழி அஷ்டமி
ப்ரதக்ஷிணம் !!! இந்நாளில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வராள் ரிஷபாரூடராய் பெரும்
சப்பரத்தில் (சிறு தேர் ) ஏரி நகர்வலம் வருவர். அதில் என்ன அவ்வளவு விசேஷம் ?
சப்பரத்திற்குள் எதற்கு ரிஷப வாஹனம் ? முக்கியமாக கத்தரிக்காய் சம்பந்தம் என்ன
? போன்ற கேள்விகளுக்கு இதோ ஒரு அழகான பதில்.

ஸ்காந்த புராணம் ப்ரஹ்மசம்ஹிதை குருகீதையில் வரும் ஒரு சுவையான கதை இது. ஒரு
சமயம் மதுரை திருமங்கலத்தில் மஹாபாபங்களை புரிந்து வந்த ஒரு அந்தணர் வாழ்ந்து
வந்தான் (கடோரபாபி). ஒருமுறை, அவ்வூரில் வசித்து, கத்தரிக்காய் தோட்டம் வைத்து
அனைவருக்கும் அளித்து வந்த மற்றொரு அந்தணரை, இந்த கடோரபாபி தகாத வார்த்தைகளால்
ஏசி காலால் உதைத்தான். அவ்வூர் அரசன் இதனை விசாரிக்க, கடோரபாபியோ
"கத்தரிக்காய் மாமிசத்திற்கு சமமானது. அதை உண்ணுவது பாபம். எனவே தான்
அவ்வந்தணரை தண்டித்தேன் " என்று கூறினான். இதை கேட்டு குழம்பிய அரசன், அகத்திய
முனிவரிடம் வினவ, அவர் கத்தரிக்காயின் பூர்வ ஜென்ம கதையை கூற ஆரம்பித்தார் !!!

ஒருமுறை வார்த்தகன் என்னும் அசுரன் சிவபூஜை செய்யும் வேளையிலே, மஹாவிஷ்ணு அவன்
முன் தோன்ற, அதனை அறிந்திராத அவ்வசுரன் மஹாவிஷ்ணுவை அவமதித்தான். இதைக்கண்டு
பொறுக்காத விஷ்ணு, அவனை ஒரு கொடிய மரமாக (செடியாக) போகும்படி சபித்தார்.
வருந்திய அசுரன் பரமசிவனாரிடம் மன்னிப்பு கோர அக்கருணாமூர்த்தியோ அவன் செடியாக
மாறினாலும் அவனது காய்கள் உண்ணத்தகுந்ததே என்றும் தனக்கு (சிவனுக்கு) அதுவே
மிக பிடித்தமானதாக அமையும் என்றும் வாரம் அளித்தார். அதுவே கத்தரிக்காய் !!!
அன்றுமுதல் கத்தரிக்காய் சிவ நைவேதியங்களில் முக்கியமானதாகவும் விஷ்ணு
நிவேதனங்களில் ஏற்கத்தகாததாகவும் அமையப்பெற்றது.

இக்கதையை அகத்தியர் கூற தெளிவு பெற்ற அரசன் அக்கடோரபாபியை தாண்டித்தான்.
இறுதியில் இறந்து நரகம் சென்ற கடோரபாபி அங்கு ஒரு கல்ப காலம் வேதனையை
அனுபவித்தான். பிறகு பூலோகத்தில் மதுரைக்கு அருகில் சிந்தாமணியில் இடையர்
குளத்தில் பிறந்த அவன் பூர்வ ஜென்ம வாசனையால் இப்பிறவியிலும் தீயவனாகவே
வாழ்ந்து வந்தான்.

பசு ஸம்ரக்ஷனை செய்த ஒரே காரணத்தினால் அவன் மீது இரக்கம் கொண்ட அவ்யாஜ
கருணாமூர்த்தியான சோமசுந்தர பெருமான் அவனுக்கு முக்தி அளிக்க முடிவெடுத்தார்.
அதன் படி அப்பனும் அம்பிகையும் ஒரு லீலா வினோதம் செய்து காட்டினர்.
அகிலமெல்லாம் அரசாளும் மீனாட்சி ஒரு பசுவடிவம் கொண்டு அக்கடோரபாபியின் வயலில்
மேய, அப்பசுவை துரத்தி பிடிக்கிறேன் என்று கூறி அதன் வாலை பற்றிக்கொண்டான்
கடோரபாபி. சரணம் என்று அவள் தாள்களை பற்றினாலே கைவிடாத அம்பிகை, வாலை
பற்றினால் விட்டுவிடவா போகிறாள் !!!

பசுவாகிய அம்பிகை அவனை இழுத்துக்கொண்டே மதுரையின் 7 பிரகாரங்களை வலமாக வந்தாள்
(ஆம் மதுரை ஸ்ரீரங்கத்தை போன்று ஸப்த பிரகார ஸ்தலம் என்பாது பலர் அறியாத உண்மை
!!! ) இறுதியாக ஐயன் திருமுன்பு அவனை கொண்டு நிறுத்த அங்கேயே அம்மையும்
அப்பனும் இடபாரூடராய் காட்சி கொடுத்து மஹாபாபியான அவனுக்கும் முக்தி (கயிலாய
பதவி) அளித்தனர் !!!

அவன் முக்தி பெற்ற நாளே மார்கழி தேய்பிறை அஷ்டமி (இன்று) !!! எனவே இந்நிகழ்வை
குறிக்கும் வகையில் இன்று மதுரையில் அஷ்டமி பிரதட்சிணம் கொண்டாடப்படுகிறது.
அம்பிகை பசுவாக வந்த காரணத்தினால் மீனாட்சி ரிஷப வாகனத்திலும், ஐயன்
இடபாரூடராய் காட்சி கொடுத்த காரணத்தினால் சுந்தரேஸ்வரர் மற்றுமொரு ரிஷப
வாகனத்திலும், இருவரும் தனித்தனி தேர் ஏறி காட்சி கொடுப்பர். அம்பிகை அந்த
பாபியை இழுத்துக்கொண்டு 7 (வெளி, மாசி, ஆவணிமூல, சித்திரை, ஆடி வீதிகள்
மற்றும் சுவாமி சன்னதி 2 பிரகாரங்கள் ) பிரகாரங்களை வலமாக வந்ததால் இந்த
உற்சவத்திற்கே அஷ்டமி பிரதட்சிணம் என்றே பெயர் !! (ப்ரதக்ஷிணம் = வலமாக
வருதல்). ஒருகாலத்தில் 7 பிரகார வலம் இருந்திருந்தாலும் தற்காலத்தில் காலத்தை
அனுசரித்து வெளி வீதி வலம் மற்றும் நடைபெறுகிறது.

மதுரையில் இவ்வேழு பிரகாரங்களை வலம்வந்து என்னை தரிசிப்பவர்களுக்கு நான்
என்னையே அளிக்கிறேன் (படி அளத்தல்) என்று சொல்லாமல் சொல்கிறார்கள் அம்மையும்
அப்பனும் !!! (அதனாலேயே இன்று அனைவருக்கும் அரிசி வழங்கப்படுகிறது - "அன்னம்
ப்ரஹமே திவ்ய ஜாநாத்" - வேதம்.. அரிசி இறை ஸ்வரூபம் ). என்னே ஈசனின் கருணை !!!

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*      V A N A K K A M  S U B B U *

           [image: Nantawan N]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to