*1. Azhaiththu varugiren enraeno akruraraip pole*


Kamsa had tried several times and failed in killing the kid, Sri Krishna
while he was growing up in Gokulam. While Krishna was having fun and
enjoying his life in Gokulam like no other kid in the world, Kamsa’s rage
and pain of repeated defeats grew in his heart. Knowing that it is going to
be tough to kill Krishna in Gokulam he decided to get Him and Sri Balarama
to Mathura and kill them there.

In order to execute his plan, he ordered a yaga to be conducted in Mathura
and sent an invitation to them both through Sri Akrura, who was a Yadava
and a brother of Vasudeva. Even after knowing that Krishna has been slaying
all the demons sent by him, right from when he was a toddler, the
great-minded Kamsa believed in his new plan: To kill them through his royal
elephant (Kuvalayapeeda) or through his royal wrestlers (Chanura and
Mushtika).

The wise Akrura had the great love for Krishna and knew that He was none
other than Sriman Narayana and that Krishna will slay Kamsa in Mathura.
Delighting his life so far by listening only to the stories of Krishna and
his leelas while being truthful to his official duties towards Kamsa, the
moment his King Kamsa informed him to invite Krishna and Balram in person,
seeing that he has got a chance to meet his Krishna, for the first time,
without any second thoughts to save his King, he agreed to the offer the
next moment and immediately prepared his chariot to pick up Krishna and
Balram without wasting any moment.

Longing and wishing only to see Krishna, enjoy the beauty and bliss of
Krishna in his very own eyes and to cherish every single moment he gets to
see him, listen to his words even if Krishna is speaking with others and
not to him and most of all, to be with him, Akrura left the palace with a
delighted heart, just like Krishna longing for butter!

All through his way to Gokulam, all that he thought was only about Krishna
and about his time with Krishna. He then met Krishna and Balram and brought
them back to Mathura in his chariot. All through his way back to Mathura,
he had his eyes, heart and senses fixed one and only on Krishna!!!

Thirukkolur Ammal asks - "Did I show irretrievable confidence and
irrevocable love on Krishna like Akrura?"




*1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே*

            கோகுலத்தில் கிருஷ்ணன் லீலைகள் பல புரிந்து, நண்பர்களுடன்
சேர்ந்து வெண்ணை எல்லாவற்றையும் திருடி உண்டு மகிழ்ந்து, தன் அண்ணன்
பலராமனுடன் இணைந்து மாடுகளை மேய்த்துக்கொண்டு, கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்து,
 கோகுலத்தில் வசிப்போரைத் தன் அழகு பாவனைகளால் மகிழ்வித்து, இடை இடையே
கம்சனால் அனுப்பப்பட்ட அசுரர்களை வதம் செய்து, கோகுலத்தின் மன்னனாய் வாழ்ந்து
வந்தான். தன் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய, கோபம் கொண்ட கம்சன்
மதுராவிற்கு அவர்களை அழைத்து அவர்களைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினான்.
மதுராவிற்கு கிருஷ்ணனையும் பலராமனையும் வரவழைத்து விட்டால் தனது பட்டத்து
யானையினைக் கொண்டோ அல்லது பட்டத்து மல்யுத்த வீரர்களான சநுரன் மற்றும்
முஷ்டிகன் ஐக் கொண்டோ அவர்களைக் கொன்று விடலாம் என்பதே அவன் திட்டம்.
அதற்காக,மதுராவில்
தனுர் யாகம் நடத்த ஏற்பாடு செய்தான். அவ்விழாவிற்கு நந்தகோபன் குமாரர்களை
அழைக்கும் நோக்கத்துடன், தன் மந்திரியான அக்ரூரரை அனுப்பி வைத்தான்.

            அக்ரூரர், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரர்.
மகாபாரதத்தில் பீஷ்மாச்சாரியார் திருதராஷ்டிரனுடன் இருந்த அதே நிலை அக்ரூரரின்
நிலை கம்சனுடன். கிருஷ்ணனின் லீலைகளை நன்கு அறிந்தவர். கிருஷ்ணன் தான் ஸ்ரீமன்
நாராயணன், கம்சனை வதம் செய்யப் பிறந்தவன் என்பதையும் அறிந்தவர். கிருஷ்ணன்
பால் அதீத அன்பும் மாறாப் பக்தியும் கொண்டவர். எனவே கம்சனின் திட்டம்
நிறைவேறப் போவதில்லை என்பதும் மேலும் இதுவே கம்சனின் இறுதித் திட்டம், இதில்
கம்சன் மடிவான் என்பதும் அவருக்குத் தெரியும்.

அனைத்தும் அறிந்திருந்தும் கம்சன் கூறியவுடன், மறுப்பேதும் கூறாமல், "இதோ
புறப்படுகிறேன்!! இப்பொழுதே அழைத்து வருகிறேன்!!!" என்று கிருஷ்ணனை விழாவிற்கு
அழைக்கச் சென்றார். காரணம்? கண்ணனின் மீதுள்ள மாறா நம்பிக்கை மட்டுமல்ல, கண்ணன்
மீதுள்ள தீராக் காதலும் தான். இதன் பயனாக அவர் கிருஷ்ணனுடன், அவனருகில்
இருக்கும் பேறினைப் பெறுவார் அல்லவா!! குறும்பு கண்ணனின் சேட்டைகளை காதால்
கேட்டு மட்டுமே இதுவரை ரசித்தவர், இப்பொழுது நேரில் சென்று அவனை, அவன் அழகுகளை,
 அவன் அன்பை, அவன் சிரிப்பைக் கண்ணாரக் கண்டு இரசிக்கலாம் அல்லவா!!

கோகுலம் செல்லும் வழி முழுவதும் கிருஷ்ணனின் லீலைகள் பற்றியும் அவனுடன்
இருக்கப் போகும் கிடைப்பதற்கரிதான நொடிகளைப் பற்றியும் எண்ணிக்கொண்டே
சென்றார். கோகுலம் சென்று நந்தகோபன் மற்றும் யசோதையின் ஆசியுடன் கிருஷ்ணனையும்
பலராமரையும் மதுரா அழைத்து வந்தார். வழி நெடுக நொடி கூட இமைக்காமல் கண்ணனைக்
கண்கள் குளிரக் குளிரக் கண்டு இரசித்தார், மனதில் ஆனந்தம் கொண்டார்.
இதனால்,கிருஷ்ணன்
அருகில் இருக்கும் பேறும், அவன் கடாட்ஷமும் பெற்றார்.

            "அக்ரூரர் போல்  மாறா பக்தியும் அளவில்லா அன்பும் நம்பிக்கையும்
கொண்டு எந்நேரமும் அந்த கிருஷ்ணனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேனா?", என்று
வினவுகிறார் திருகோளூர் அம்மாள்.

============***** ===================  ***** =================== *****
===================

அக்ரூரர் பகவான் கிருஷ்ணரின் பரம பக்தர் என்பது தெரியும். அவரது பெற்றோர் யார்
தெரியுமா? தந்தையின் பெயர் ஸ்வபல்கர், தாயின் பெயர் காந்தினி. மழையின்றி
சிரமப்பட்டுக் கொண்டிருந்த காசி மாநகருக்குள் ஸ்வபல்கர் காலடி எடுத்து
வைத்தவுடன் மழை பொழிந்தது. அதனால் மகிழ்ச்சியடைந்த காசிராஜன் தனது மகள்
காந்தினியை ஸ்வபல்கருக்கு திருமணம் செய்து முடித்தான். தனது தந்தையைப் போன்றே
நற்குணம் படைத்திருந்த அக்ரூரர் சென்ற இடங்களிலெல்லாம் மழை பொழியும். அங்கே
துன்பமோ, மகாமாரி போன்ற தீமைகளோ நெருங்காது என்று *ஸ்ரீமத் பாகவதம் *
கூறுகிறது.


கிருஷ்ணனும் அவனது அண்ணன் பலராமனும் கட்டிளம் காளைகள். இருவரும் உத்தரப்
பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் இருந்து குஜராத் மநிலத்தில் உள்ள
துவாரகைக்குச் செல்லத் திட்டமிட்டனர். உடனே அக்ரூரர் என்ற குடும்ப நண்பர் –
கிருஷ்ண பக்தர் — அவர்களை இரதத்தில் அழைத்துச் சென்றார். இரதத்தை ஓட்டி வந்த
சாரதி  அக்ரூரருக்குக் களைப்பு. உடனே இரண்டு சகோதரர்களையும் இரதத்திலேயே
உட்காரவைத்துவிட்டு அவர்கள் அனுமதியுடன் குளிக்கச் சென்றார். யமுனை ஆற்றுத்
தண்ணீரில் தலையை முக்குகிறார். நீருக்கு அடியில் இரதத்தில் கண்ணனும் பலராமனும்
இருக்கக் கண்டார். வியப்புடன் நீருக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.
கிருஷ்ணனும் பலராமனும் சிரித்து மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

மீண்டும் தலையை நீருக்குள் முக்கினார். அப்பொழுது கிருஷ்ணன், விஷ்ணுவாக
ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்திருப்பதைக் கண்டார். மீண்டும் வியப்பு.
தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தால் இரண்டு சகோதரர்களும் அதே
இடத்தில் ரதத்தில் இருந்தனர். இப்போது அக்ரூரருக்கு கண்ணன்- பலராமன் அவதார
புருஷர்கள் என்பது விளங்கிற்று.

கடவுள் என்பவன் காலத்தைக் கடந்தவன் என்பது தெளிவாயிற்று. விஷ்ணுவின் மறு
அவதாரம் கிருஷ்ணன் என்றும் ஆதிசேஷனின் மறு அவதாரம் பலராமன் என்றும் இந்துக்கள்
நம்புகின்றனர்.


<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
you tube link: Shri Velukudi Krishnan Swamy
https://www.youtube.com/watch?v=NMLQgu6hEIA



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*      V A N A K K A M  S U B B U *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to