*4. **தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே*
தசமுகன், இராவணன். பிராட்டி, சீதாதேவி. இங்கு, "செற்றேனோ" என்னும்
சொல்லிற்கு "கொன்றேனோ" என்று பொருள். இராவணனைச் சீதை வதம் செய்யவில்லை.
இங்கு, சீதை
இராவணனைக் கொன்றார் என்றால், இராவணனின் ஆணவத்தை, பேராண்மையைக் கொன்றார் என்று
பொருள். மிதிலையின் இளவரசி. ஸ்ரீ ராமனின் துணைவியாய், ஸ்ரீ ராமனின் நிழலாய்
வாழ அயோத்தி வந்தவர். ஸ்ரீ இராமனைப் பிரிய மனமில்லாமல், பதினான்கு ஆண்டுகள்
மலரினும் மென்மையான பாதத்துடன் வனத்தில் வாழ முடிவெடுத்தவர். இராவணனின்
அஹம்பாவம்,பேராண்மை, தலைக்கணம் நிறைந்த பார்வையும் மனமும் வனத்தில் எளிய
வாழ்வு வாழ்ந்த சீதையின் மேல் பட்டு, அவன் அழிவிற்கு விதையிட்டது. மிதிலையின்
இளவரசியாக இருந்த போதே கொடியிடையாள் என்று வர்ணிக்கப்பட்ட சீதாப் பிராட்டியார்
, இலங்கையில் சிறையில் வாடிய போது இன்னும் மெலிந்தார் என்றால், அவரின்
துயரத்தை எவ்வார்த்தைகள் கொண்டு விளக்குவது?
சீதாதேவி எண்ணியிருந்தால் இராவணனை அவரே வதம் செய்திருக்கலாம். அவரின்
கோபக்கனலே இராவணனை பஸ்பமாகிவிடும். பிராட்டியின் புனிதத் தன்மை ஒன்று போதுமே
இலங்கையைக் கடலின் ஆழத்திற்குத் தள்ள! தேவியும் அடுத்த நொடி ஸ்ரீஇராமனுடன்
வனத்தில் இருந்திருப்பார். அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவரைச் சுடாமல்
பார்த்துக் கொள்ளச் செய்த சீதைக்கு இலங்கையை அழிக்க எவ்வளவு நேரம்
ஆகியிருக்கும்? சிறைப்பட்டு அனுதினமும் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். சீதையின்
இராமபக்தி ஒன்றே உலகைப் பஸ்பமாக்கி விடும் வல்லமை வாய்ந்தது என்றால் இராவணன்
எம்மாத்திரம்!? ஆனால், அவர் அச்செயல் புரியவில்லை. சீதா தேவியார், அனைத்து
இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு, இராமனின் வருகைக்காக காத்திருந்தார்.
அனுக்க்ஷனமும் ஸ்ரீ இராமபிரானையே எண்ணிக் கொண்டிருந்தார்.
இராவணனின் உண்மை நிலையினை அவனுக்கு எடுத்துரைத்தார். ஆணவத்தின்
உச்சத்தில் யோசிக்காமல் தவறுகள் புரிந்து கொண்டிருந்த இராவணனை ஸ்ரீஇராமனுடன்
போர் புரிந்து மடியாமல் அவரிடம் சரணடையுமாறு கூறினார். இராவணனையும், ஹனுமனே
கண்டு வியந்த இராவணனின் அரண்மனையையும் சீதாப் பிராட்டி ஒடிந்த புல்லினைப் போல்
மதித்தார். சீதாதேவியை மயக்க இராவணன் குபேரனுக்கு இணையான தன் சொத்துக்களைப்
பற்றிக் கூறி ஆசை வார்த்தைகள் காட்டிய போதும் அவர் அதைத் தூசினைப் போல்
துச்சமெனக் கண்டார். சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு அனுக்க்ஷனமும் ஸ்ரீ
இராமனை மட்டுமே எண்ணி வாழ்வது கூடச் சுகம் என்றார். அவ்வாறே சிறை வாசத்தைக்
கழித்தார். தன் ஆன்மாவும் உடலும் ஸ்ரீராமனின் உடைமை என்பதை மனதில் நிறுத்தி
அவர் வருகைக்காகவே காத்திருந்தார்.
எளிமையின் வடிவாய் நின்ற ஸ்ரீ இராமனின் முன் இலங்காபுரியின்
மன்னனான இராவணன் தோற்றான். சீதையின் மனம், சரணாகதிக்குச் சிறந்த எடுத்துக்
காட்டென்றால், சீதையின் மனதை வென்ற ஸ்ரீ இராமனின் பண்போ, இன்னலில் தவிக்கும்
பக்தர்களை இரட்சிக்கத் துடிக்கும் கடவுளின் குணம். இறையன்பு.
திருக்கோளூர் அம்மாள், "என்னால் பிராட்டியைப் போல் அனைத்தையும் அவன்
பொறுப்பில் விட்டு விட்டு, அவனையே அனுக்க்ஷனமும் எண்ணி வாழ முடியுமா?", என்று
வினவுகிறார்.
=======*******=======*******=======*******=======*******=======
*******=======*******====
*dhasamuganaich setRREnO pirAttiyaip pOlE*
Dasa mugan is Ravana. PirAtti is Sita. The word “setRRal” refers to
“destroy”.
Princess of Mithila, charming Sita, after marrying Lord Rama, came to
Ayodhya with full of love, dreams and hope. With her heart full of Lord
Rama and her services for him, she even decided to follow her beloved Lord
Rama to the forest for 12 years, ignoring all the pleasures of living life
in a palace as a queen. Such is her love for Lord Rama.
After being abducted by the King of Lanka, Ravana, she lived her
life thinking only about Lord Rama. She looked down upon Ravana and his
wealth. She was willing to stay imprisoned and suffer the torture rather
than agree to his advances.
Sita could have killed him just be her looks, anger and her devotion
towards Lord Rama. Such was her power and purity in heart and soul. But she
did not do so. All she tried was only to make Ravana realize his fault and
surrender himself to Sri Rama. She placed both her body and soul as
belongings of Rama and she just waited for Him.
Thirukkolur Ammal is asking "Can I be like Piratti and live in peace,
placing everything completely in His hands?"
*தசமுகன் என்பது இராவணனைக் குறிக்கிறது. சிறந்த சிவபக்தனும் யாராலும்
வெல்லமுடியாத வலிமை படைத்தவனுமான இராவணனைச் சீதை என்னும் பெண்ணால் எப்படிக்
கொல்ல முடியும்?*
*சீதையைக் கன்னிமாடத்தில் ராமன் கண்டதைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்...*
*'பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்*
*தேன்உண் தேனின்தீம்சுவை செஞ்சொற் கவிஇன்பம்’*
*மருங்கில் மங்கையாம் சீதை. அதாவது, அவளுக்கு இடுப்பே இல்லையாம். அப்படிக்
கொடி போன்ற மெல்லிய பெண்ணா அத்தனை பலம் பொருந்திய ராவணனைக் கொன்றிருக்க
இயலும்?*
*'கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்*
*வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள்*
*சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும், சுவரும், திண்*
*கல்லும், புல்லும், கண்டு உருக, பெண் கனி நின்றாள்.’*
*இப்படி ஒரு பெண்ணழகுப் பேரோவியத்தை, அவள் பிறன்மனை என்பது தெரிந்தும் நோக்கிய
அந்தக் கணமே இராவணனின் பேராண்மை அழிந்தது.*
*பதினான்கு ஆண்டுகள் தான் வனம் செல்லவிருப்பதாகவும், சீதையை அயோத்தியில்
இருக்கும்படியும் இராமன் கேட்டுக்கொள்ள, சீதை மறுத்து உடன் வருவதாகக்
கூறுகிறாள். அப்போது இராமன் கூறுகிறான்...*
*'கல் அரக்கும் கடுமையா அல்ல நின்*
*சில் அரக்குண்ட சேவடிப் போது’*
*அதாவது, அவளுடைய பாதங்கள் மலர்கூட இல்லையாம். அவற்றில் உள்ள போதினைப்போல மிக
மெல்லிய பாதமாம். அப்படிப்பட்ட, 'மலரினும் மெல்லிய’ ஜானகியால் எவ்வாறு
இராவணனைக் கொன்றிருக்க முடியும்?*
*இராவணன் இறந்துவிட்டான் யுத்த களத்தில் என்று கேள்விப்பட்டதும், அவன் மனைவி
மண்டோதரி ஓடி வருகிறாள்.*
*இந்தக் காட்சியைக் கம்பன்,*
*'கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை*
*மனச்சிறையில் கரந்த காதல்*
*உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து,*
*தடவியதோ ஒருவன் வாளி?' *
*புறச்சிறையிலிருந்து சீதையை மீட்ட இராமன், இராவணனுடைய மனச்சிறையில்கூட அவள்
இருக்கக் கூடாது என்று அம்பு செலுத்தினான்’ என்று, அபார கற்பனையின் மூலம்
கம்பர் விளக்குகிறார்.*
*'திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்*
*பிறை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ? தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?’
என்கிறாளாம் மண்டோதரி.*
*இராவணனுடைய தவம் மிகப் பெரியது. அந்தத் தவத்தினால் மானிடரைத் தவிர வேறு
எந்தத் தேவராலும் தான் வெல்லப்படக் கூடாது என்ற வரத்தை சிவபெருமானிடம்
பெற்றான். 'தேவர்களே ஜெயிக்க முடியாதபோது, இந்த அற்ப மானிடர்களா நம்மைக்
கொன்றுவிட முடியும்?’ என்ற குறைவான மதிப்பீடுதான் அவனை மாய்த்துவிடுகிறது.
அளப்பரிய அவன் பெற்ற வரம் பாற்கடலைப் போன்றது. எத்தனை பெரிய பாத்திரம் நிறைய
பால் இருந்தாலும், பிறன்மனை நோக்கல் என்னும் ஒரு துளி விஷம் அதில்
கலந்துவிட்டதால், அந்த விஷத் துளியானது ராவணனின் உயிர்த் துளியைப்
பருகிவிட்டது.*
*சீதை இராவணனைக் கொல்லவில்லை. அவளுடைய கற்பு என்னும் கனல் அவனைக் கொன்றது.
அனுமன் இலங்கை சென்று சீதையைக் கண்டு ஆறுதல் கூறி, மீண்டும் இராமனிடம்
வந்ததும், முதலில் அவன் கூறியது, 'கண்டனென் கற்பினுக்கணியைக் கண்களால்’
என்பதுதான்.*
*'விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்*
*நற் பெருந்தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்:*
*இப் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்.*
*கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடனம் புரியக் கண்டேன்’ என்கிறான் அனுமன்.*
*பிராட்டிக்கு இராவணனைக் கொல்வது பெரிய விஷயமே இல்லை. 'தாயே! என் முதுகில்
அமர்ந்து கொள்ளுங்கள். நான் ஒருவருக்கும் தெரியாமல் உங்களைக் கொண்டுபோய்
இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன்’ என்று அனுமன் அழைத்தபோது மறுக்கிறாள்
சீதை. காரணம், அப்படிச் செய்தால், அது இராமனின் மகிமையைக் குறைத்து
மதிப்பிடுவதாக அல்லவா ஆகிவிடும்? அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவனைச்
சுடாமல் பார்த்துக்கொள்ளச் செய்த சீதைக்கு இலங்காபுரியை அழிக்க எவ்வளவு நேரம்
ஆகியிருக்கும்? சரணாகதர்களுக்குத் தங்களைத் தாங்களே இரட்சித்துக்கொள்ள
முடியாது; பகவான் ஒருவனுக்கே இரட்சிக்கும் தகுதி உள்ளது. இதை உணர்த்தவே சீதை
பொறுமையுடன் இருந்தாள். ஆனாலும், அவளுடைய கற்புக் கனலானது இராவணனைக் கொன்றது.*
*இதைத்தான் திருக்கோளூர் பெண்பிள்ளை, 'தசமுகனைச் செற்றேனோ சீதையைப் போலே?’
என்றாள். 'செற்றேனோ’ என்றால், 'கொன்றேனா’ என்பது பொருள்!*
*Audio Version:*
*http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015October/AUD-20151022-Thirukkoloor%20Penpillai%20rahasyam%20intro.m4a
<http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015October/AUD-20151022-Thirukkoloor%20Penpillai%20rahasyam%20intro.m4a>
*
*http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015October/AUD-20151023-tpr1.m4a
<http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015October/AUD-20151023-tpr1.m4a>*
*http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015October/AUD-20151024-tpr2.m4a
<http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015October/AUD-20151024-tpr2.m4a>*
*http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015October/AUD-20151025-tpr3.m4a
<http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015October/AUD-20151025-tpr3.m4a>*
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
* V A N A K K A M S U B B U *
[image: Charlie]
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.