தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள்
*அசோகச் சக்கரம் (Ashoka Chakra) **அசோகரின் பல சிற்பங்களில் காணப்பெறும் ஓர் 24 **கோல்களைக் கொண்ட சக்கர வடிவச் சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டுக் கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்று அழைக்கப்பெறுகிறது. புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்கத் தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப் பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத் தூணில் உள்ள சிங்கத் தலைகள் இந்தியக் குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பெற்றுள்ளது. * [image: image.png] தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள் குறிக்கும் பொருள். *அசோகர் பரப்பிய தர்மங்கள் 24* * (போதி சத்வ தர்மங்கள்)* *1. அஹிம்சை உயிர்களுக்கு இன்னா செய்யாமை.* *2. அப்பந்தா சிக்கனம்* *3. அபிச்சதி பயபக்தி(பெரியோர்&ஆசிரியர்)* *4. அபசினவம் மானமுடைமை* *5. உத்சஹா உற்சாகம்* *6. கிருதக்ஞாதா செய்நன்றி அறிதல்* *7. சத்யம் உள்ளத்தால் உண்மை* * சொல்லால் உண்மை* * செயலால் உண்மையை போற்றுதல்.* *8. சமயப்பொறை மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்* *9. சாதுதா நல்லவனாயிருத்தல்* *10. சாம்யமா புலனடக்கம்* *11. சாத்வம் நன்மை தரும் செயல்களைச் செய்தல்* *12. சிரமசேவிதம் கடின உழைப்பு* *13. சுஷ்ருதா சரீர சஹாயம், உடல் நோய் தீர்த்தல்* *14. சௌசம் உடல் தூய்மை* *15. தயை இரக்ககுணம்* *16. தானம் வறியோர்க்கு வழங்கல்* *17. தம்மதானம் தர்மத்தைப் பரபபுதல்* *18. தம்ம விஜயம் அறத்தின் வழிபெறும் வெற்றி* *19. தர்மதாமதா அறம் செய்வதில் ஆர்வம்* *20. த்ருதபக்திதா மாறாத அன்புள்ளம்* *21. பயம் பாவம் செயவதில் அச்சம்* *22. பரிக்ஷா தன்னம்பிககை* *23. பாவசுத்தி எண்ணத்தூய்மை* *24. மார்த்தவம் அருளுடைமை.* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* * V A N A K K A M S U B B U * [image: Charlie] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
