*இந்த உலகத்தில் நாம் மட்டுமல்ல, பில்கேட்ஸ், வாரன் பெப்பெட் போன்றவர்கள் கூடப் பிச்சைக்காரர்கள் தான். ஏனென்றால், பிரபஞ்சச் சக்திகளிடம் நாம் பிச்சை எடுத்துத் தான் வாழ்க்கை நடத்துகிறோம். பிறந்த பின்பு தான் பிச்சையா ? பிறக்கும் முன்பு அப்பொழுதும் பிச்சை தான். எப்படி ?*
*ஒரு உயிர் தாயின் கருவறையில். 10 மாதங்கள் சிறிது சிறிதாகப் பிச்சை எடுத்து ஒரு உடல்வாங்கி வருகிறது. பின்பு அந்த உடலை வைத்துப் பல ஆட்டங்கள் ஆடி இறுதியில் வீழ்கிறது. இதைத் தான்நந்தவனத்தில் ஒரு ஆண்டி - அவன்நாலாறு மாதமாய் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைகூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி * *என்று கடுவெளிச் சித்தர் பாடுகிறார்.* *இது தான் மனித வாழ்க்கையும் கூட . ஆனால் இங்குகண்ணதாசன் என்ன கூறுகிறார் என்பதைச் சித்தார்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்றுஇறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று* *ஊரும் உறவும் தவமிருந்து பெற்ற தாய் தந்தையும், மனைவியும், பிள்ளைகளும் புகழும், செல்வமும் நமக்கு நிறைந்திருக்கிறது. என்று மனிதன் மகிழ்வுறுகிறான். அல்லது இவைகளைத் தேடி அலைகிறான் . ஆனால் இது நிலையில்லை என்பதைஊருஞ்சதமல்ல; உற்றார் சதமல்ல **ஊற்றுபெற்ற* *பேருஞ்சதமல்ல ; பெண்டிர் சதமல்ல : பிள்ளைகள்சீருஞ்சதமல்ல ' செல்வம் சதமல்ல என்கிறார் -- பட்டினத்தார்.(சதம் அல்ல -- நிலை இல்லைஉற்று பெற்ற -- தவமிருந்து பெற்ற பெற்றோர் )இதைக் கண்ணதாசன் இரண்டே வரிகளில் சொல்லி விட்டார். நிலையில்லாததை நிலை என நினைத்து நாம் வாழ்வதால் கடவுள் கூட நம்மைப் பாவமாகப் பார்க்கிறான் போல.காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்கால் விலங்கு என்றால் என்ன ? திருமணமா ?திருமண**த்தைதான் அப்படிக் கூறுவார்கள். ஆனால் மாணிக்க வாசகர் என்ன கூறுகிறார் ?* *வைத்த நிதி, பெண்டிர், குலம் , கல்வி என்னும்பித்தோர் உள்ள உலகத்தே என்று கூறுகிறார்.இந்த நான்கும்தான் நாம் தேடல். அதைத் தான் கவிஞர் இங்கு கூறுகிரார்.கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடாகணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடாஅப்பாடா நான் செத்துவிட்டேன். இனிக் கவலையை இல்லை என்று நாம் சொல்ல முடியாது ஏன் தெரியுமா ?உறுபசி என்கிற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலுக்கு அவர் அளித்த முன்னுரையில்எவற்றின் நிழல்கள் நாம்? என்று ஒரு கேள்வியை கேட்கிறார். இதைப் படித்துச் சில வருடங்களுக்குப் பிறகு இன்று தான் பதிலைக் கண்டறிந்தேன். * *மனிதன் என்பவன் நிழல். * *நிஜம் என்பது ..பிறக்கும் முன்பே அவனுக்கு விதிக்கப்பட்ட செயல். * *அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் எதாவது ஒன்றைக் கொடுத்து , அதை உலகிற்குத் தரச் சொல்கிறான் இறைவன். ஆனால் நாம் அதைச் செய்வதில்லை. அரிதாகச் சிலர்தான் தன் திறமைகளைக் கண்டறிந்து உலகிற்குக் கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்யாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இறைவன் எனக்குக் கொடுத்த திறமையை நான் கண்டறிந்து உலகிற்குக் கொடுத்துவிட்டேன். இனி என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் குழப்பமும் இல்லை என்கிறார். அதைப் போல அவனிடம் வாங்கிய திறமையையும் திருப்பிக் கொடுத்து விட்டேன். இனி என்னை வேறு ஒரு பணிக்காக இறைவன் படைக்க மாட்டான் அதனால் கவலையும் முடிந்தது என்கிறார் கவியரசர் கண்ணதாசன். * <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* * V A N A K K A M S U B B U * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
