*எதார்த்தமான உண்மைகள்.. 😜 *1.* கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்., *உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..!*
*(நம்ம ஊரு டிசைன் அப்படி)* 😜 *2.* கும்பிடும் வரை கடவுள்; *திருட்டுப் போனால் சிலை...!* *(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)* 😜 *3.* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!* *(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)* 😜 *4.* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் *அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!* *(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)* 😜 *5.* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது *ஒரு தீ குச்சியின் மரணம்..!* *(மரணம் ஒரு முடிவு அல்ல... !)* 😜 *6.* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட *வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை...!* *(நிதர்சனமான உண்மை)* 😜 *7.* அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, *தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க ..! ஏன் இந்த கொடுமை..!* *(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)* 😜 *8.* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!* *(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)* 😜 *9.* இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். *வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!* *(எல்லாம் பீஸ் தான் காரணம்)* 😜 *10.* இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, *இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு...!* *(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)* 😜 *11.* 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் *இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!* *(லஞ்சம் தான் காரணம்)* 😜 *11.* மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். *இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!* *(யூஸ் பண்ணத் தெரியல..அவ்ளோதான்)* 😜 *12.* தூக்கம் வராமல் முதலாளி... *தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!* *(கரன்சி பண்ற வேலை)* 😜 *13.* கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..! *கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில் இல்லை...!* *இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை* 👍👍👍👍👍👍👍 📚படித்ததிலிருந்து பிடித்த *மனதை நெ௫டிய* ஒரு பதிவுகள் *&* பகிர்வுகள்... Sent from my iPhone -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
