Thirukolur Penpillai Rahasyam - 18



*அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே*

அசோகவனத்தில் சீதாப்பிராட்டி இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த பொழுது அவரின்
காவலுக்கு இருக்கும் அசுரர்களின் தலைவியாய்  த்ரிஜடை என்னும் அசுர குலப்
பெண்மணி இருந்தார். த்ரிஜடை, விபீஷணன் மகள் ஆவார். அசுர குலத்தில்
பிறந்திருந்தாலும், த்ரிஜடை சீதாப்பிராட்டிக்கு உறுதுணையாய் இருந்தார்.
தந்தையைப் போல் நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தார். மனமுடைந்து இருக்கும்
சீதையை த்ரிஜடையே இராமனின் இலங்கை நோக்கிய பயணம் பற்றிக் கூறித் தேற்றுவார்.

சீதை, த்ரிஜடையிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார். அசோகவனத்தில் சம்பாஷித்துக்
கொண்டிருந்த பொழுது, சீதை த்ரிஜடையை நோக்கி, “ஓ,த்ரிஜடை! புழுவானது இடைவிடாமல்
வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது
உண்மையா? அப்படியென்றால் (இராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் இராமனாக மாறி
விடுவேன். எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளித் தூர
இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன், அல்லவா!!”என்றார்.

இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கி, “அப்படி என்றால் அது நல்லதற்குத்
தான்! ஏனெனில் நீங்கள் இராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக்
கொண்டிருக்கும் இராமர் சீதை ஆகி விடுவார்! நீங்கள் (இராமராக ஆகி விடுவதால்)
எதிரியான இராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே இராமருக்கு அருகில் சென்று
விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்!)”, என்றார்.

ஒரு நாள், காவலுக்கு வந்த  பிற அசுர குலப் பெண்கள் சீதையைக் கிண்டல் செய்த
பொழுது, அங்கு வந்த த்ரிஜடை, அவர்களிடம் கோபமாக, "நேற்று இரவு நான் ஒரு கனவு
கண்டேன். அதில் இராவணன் சிகப்பு நிற உடை அணிந்து கழுதை மீது அமர்ந்து தெற்கு
நோக்கிப் பயணிக்க, வானில் இருந்து ஆயிரம் அன்னப் பறவைகள் கொண்ட தங்கப்
பல்லக்கில்,வெண்ணிற உடை அணிந்து, வெள்ளை நிற மலர் மாலை அணிந்து வந்து ஸ்ரீ
இராமன் சீதையை அழைத்துச் சென்றார். என் கனவு நிச்சயம் நடக்கும். எனவே, நீங்கள்
உயிருடன் வாழ விரும்பினால் இப்பொழுதே சீதையிடம் சரணடையுங்கள். ஸ்ரீ இராமன்
இலங்கை வந்து சேரும் நேரம், அவரின் கோபத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றும்
சக்தி, சீதாப்பிராட்டியிடம் மட்டுமே உள்ளது. எனவே உண்மை உணர்ந்து, இப்பொழுதே
அவரிடம் சரணடையுங்கள்.", என்றார்.

ஸ்ரீ ராமனுக்கும் இராவணனுக்கும் இடையே போர் நடந்த போது,த்ரிஜடை, போரின்
நிலவரங்களையும் ஸ்ரீ ராமனின் வெற்றிகள் குறித்த செய்திகளையும் அனுதினமும் கூறி
சீதாப்பிராட்டிக்கு உதவிகள் புரிந்தார்.


   திருக்கோளூர் அம்மாள், "த்ரிஜடையைப் போல் பிராட்டிக்கு நான் ஏதும் உதவி
புரிந்தேனா?", என்று வினவுகிறார்.

*========********========**********========**********========*
*********========**********= *


*andharangam sonnEnO thrijadaiyaip pOlaE*

Trijada was a servant of Ravana and one of the demons who he had ordered to
guard Sita in the Asoka Vanam. Trijada is the daughter of Vibhishana. Like
father, Trijada also follows the path of justice and also believes in Sri
Rama.

After being prisoned in Ashoka Vanam, Trijada was the only soul who was
there to comfort and give confidence to Sita. Sita too shares her feelings,
her stories, and thoughts to Trijada, just like how she would share it to
her sisters and friends. Trijada too protects Sita from the ill-talks of
other guards. One day, the other guards were teasing Sita and mocked her
for her character and for not enjoying the life that King Ravana is ready
to give!

Unable to handle the harsh words and demands of the rakshasis, raged
Trijada says, "I saw Ravana wearing a red dress and heading south while
seated on a donkey. I also saw Rama wearing a white dress with white
flowers and looking like Vishnu, fly in from the sky in a golden palanquin
which is being pulled by a thousand beautifully flawless white swans and
carry Sita around on an elephant. Therefore, Rama will definitely defeat
Ravana and take Sita away. If you all wish to survive, it is better to
surrender to Sita and beg her pardon. When Sri Rama reaches Sri Lanka, and
he will, nothing can save you from the raged and furious heart of him,
other than Sita’s words and one look. So, if you all wish to live a life,
surrender to her, immediately."

Later, during the war between Rama and Ravana, she brought news of the many
victories of Rama's army to Sita. When Indrajit made Rama and Lakshmana
unconscious using his Nagastra, the rakshasas took Sita to the battlefield
and claimed that they were dead. When Sita shed tears seeing them dead,
Trijada consoled her by saying "Do not fear. Rama and Lakshmana have only
fainted. They cannot be killed by the arrows of these rakshasas. There’s no
arrow in this world that could kill them!"

Thus, Trijada helped Piratti in many ways.


Thirukkolur Ammal is asking "Did I do any of the services or at least
comforted her and gave confidence to Sita Piratti like Trijada?"

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*Audio link:*

*http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015November/AUD-20151109-tpr18.m4a
<http://radhekrishnasatsangam.com/audio2015/drops/2015November/AUD-20151109-tpr18.m4a>*



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

[image:
nK1SmcoPy0i6UnlFaghekkGYejPlifLD4i_Uf7R-bnMsm0j-VVRKFqRECeqtHlnG.jpg]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to