Thirukolur Penpillai Rahasyam-27


*ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே*

அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும்
அறியப்பெறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை. அகத்தியர், ஒரு இசைப்
போட்டியில், மலையை உருக வைத்து, இராவணனை வென்றவராகவும் அறியப்பெறுகிறார்.

அகஸ்தியர் முக்காலமும் அறிந்த ஞானி. ராமாவதாரத்தின் போது, வனவாச காலத்தில்,
ஸ்ரீ ராமர், சீதை மற்றும் இலக்குவனுடன் முனிவர்கள் பலரின் குடிலில் சென்று
தங்கி ஆசிகள் பெற்றார். அவ்வாறு ஒரு முறை, கோதாவரி நதிக்கரையில்
அமைந்திருக்கும் அகஸ்தியரின் குடிலில் தங்கினர். அவர்கள் விடை பெரும் நேரம்,
முக்காலமும் அறிந்த அகத்தியர், ஸ்ரீ ராமர் எதிர்கொள்ள போகும் போரினை அறிந்து,
ஸ்ரீ இராமருக்கு மூன்று ஆயுதங்களை அன்பளிப்பாக வழங்கினார். அவை மகாவிஷ்ணு
தேவர்களை அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற விஸ்வகர்மாவே செய்த வில், எடுக்க
எடுக்க குறையாத அம்புகளை வழங்கும் அம்பறாத்துணி (அம்புக்கூடு), போர் வாள்!
“எதிர் வரும் காலத்தில் நீ சந்திக்க நேரும் அசுரர்களை இவ்வாயுதங்கள் கொண்டு
வீழ்த்துவாயாக!” – என்றார்.

தண்டகாரண்யத்தில் உள்ள  முனிவர்களின் ஆசிர மங்களில் இளவலுடனும்
பிராட்டியுடனும் தங்கியிருந்து, முனிவர்களுக்கு அரக்கர்களால் துன்பம்
ஏற்படாதபடி பத்து ஆண்டுகள் காப்பாற்றுகிறார்.

ஒரே வாயில் பத்து ஆண்டுகளை கம்பர் தள்ளி விடுகிறார்.

ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு, அவண்,

மைந்தர் தீது இலர்வைகினர்

என்று கம்பர் கூறுகிறார்.

பிறகு, அந்த முனிவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அகத்திய முனிவரின்
ஆசிரமத்துக்குச் செல்கின்றார்.

முதல் பாடலில் அகத்தியரை கம்பர் தமிழுடன் ஒப்பு நோக்கி பெருமிதம் கொள்கிறார்.

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் என்கிறார். தமது திருவடிகளால் இந்த
மூவுலகையும் அளந்த எம்பெருமானைப் போல அகத்தியன் தமிழால் இந்த உலகை அளந்தவர்
என்று இருவருக்கும் மிகப் பெரிய கௌரவம் அளிக்கிறான் கம்பன்.

அகத்தியர் ராமனை வரவேற்று அவனுக்கு ஆசனம் அளிக்கிறார். அவனும் அவரை வணங்கி
நிற்கின்றான். பல காலமாக சிவபெருமான் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த சிவ
தனுசுவை அகத்தியர் இராமனிடம் கொடுக்கிறார். இதனைக் கம்பர்.

'விழுமியது சொற்றனை: இவ் வில் இது

இவண், மேல்நாள்

முழுமுதல்வன் வைத்துளது;

மூஉலகும், யானும்

வழிபட இருப்பது; இதுதன்னை

வடி வாளிக்

குழு, வழு இல் புட்டிலோடு கோடி!

என நல்கி’ என்கிறார்.

 அது மட்டுமின்றி

 இப் புவனம் முற்றும் ஒரு

தட்டினிடை இட்டால்

ஒப்பு வரவிற்று என உரைப்ப

அரிய வாளும்,

வெப்பு உருவு பெற்ற அரன்

மேரு வரை வில்லாய்

முப்புரம் எரித்த தனி மொய்க்

கணையும், நல்கா, என்கிறான் கம்பன்.

அதாவது இந்த உலகம் முழுவதையும் ஒரு தராசு தட்டினில் நிறுத்தி அகத்தியர் அளித்த
வாள் ஒன்றினையும் வைத்தால்கூட அந்த வாளுக்கு இணையாகாது. அப்பேர்ப்பட்ட
வாளினையும், ஒருசமயம் திரிபுரத்தை சிவபெருமான் மேருவை வில்லாக வளைத்து,
மகாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டு எரித்ததாக புராணங்கள் சொல்லும் அப்படிப்பட்ட
அம்பினையும் அகத்தியர் ராமனுக்கு அளிக்கிறார்.

திருக்கோளூர் அம்மாள், “அகத்தியர் போல்   வரும் இன்னல்களை அறிந்து, ஸ்ரீ
இராமருக்கு உதவி புரிந்தேனா?”, என்று வினவுகிறார்.

=========********========********========********========********==



*AyudhangaL IndhEnO agasthiyaraip pOlE*
Agastya was a revered Vedic sage of Hinduism, who is one of the seven or
eight most revered rishis in the Vedic texts. He lived in the Dandakaranya
forest with his wife Lopamudra, on the banks of river Godavari. While
explaining about Sage Agastya to Lakshmana, Lord Rama said – “Sage Agastya
is of such a purified nature that in his hermitage a liar cannot live, nor
a deceitful person, nor a wicked person, nor one that is committed to
sinful activity.”

When Sri Rama entered the Dandakaranya forest in his exile, He went to the
ashramas of several maharishis and paid His respects to them, along with
Sita and Lakshmana. He went to see Sage Agastya too. Agastya received Rama
with respect and love. Knowing Rama's avatara secrecy and what was to come,
he presented Him with three weapons - a bow made by Visvakarma for Vishnu,
an inexhaustible quiver and a sword. He said to Lord Rama, "This bow which
belongs to Vishnu. It was made by Vishwakarma. Using this bow, Maha Vishnu
killed many asuras and helped the devas. These two quivers which never
reduce in arrows and this sword were given to me by Indra. Take these
weapons and use them effectively in slaying the demons."


Thirukkolur Ammal is asking "Did I help the Lord like Agastya did?"

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
 Audio link:
*http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr27.m4a
<http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr26.m4a>*




*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

[image: Law Article]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to