Thirukolur Penpillai Rahasyam-36


*இரு மாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே*

வைணவ நெறியைப் பின்பற்றிப்  பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்
பத்தாவது ஆழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும்
ஊரில் 'விப்ர நாராயணர்' என்னும் இயற்பெயருடன் வளர்ந்தார்.

பல தலங்கள்தோறும் சென்று, இறைவனை வணங்க எண்ணியவராய் முதற்கண் திருவரங்கம்
பெரிய கோயிலை அடைந்தார். அங்கு பள்ளி கொண்டிருக்கும் அரங்கநானைச் சேவித்து, அவரது
அழகில் ஈடுபட்டவராய், அங்கு ஒரு நந்தவனத்தை அமைத்து இறைவனுக்கு மாலை கட்டித்
தரும் திருப்பணியை மேற்கொண்டு அங்கேயே தங்கலானார். பின் நாளில் திருவரங்கத்திலேயே
வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்குப் பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையைத் தன்
வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார்.

இங்கு “இரு” என்று திருக்கோளூர் அம்மாள் குறிக்கும் மாலை இரு அர்த்தங்கள்
கொண்டுள்ளது. “இரு”...அதாவது “இரண்டு” மாலைகள் என்னும் ஒரு அர்த்தம்.
மற்றொன்று, “மிகப்பெரிய சிறப்புமிக்க” மாலைகள்.

தொண்டரடிப்பொடியாழ்வாரின் இரு மாலைகள் – பாமாலை,  பூமாலை!! அனுதினமும்
ஸ்ரீரங்கநாதனுக்கு, பூமாலை கட்டித் தரும் திருப்பணியை இவர்செய்தார். இது ஒரு
மாலை. மற்றொன்று, அவரால் இயற்றப்பட்ட பாமாலை – திருப்பள்ளியெழுச்சி, திருமாலை.


சிறப்புமிக்க மாலைகள் என்னும் அர்த்தம் எவ்வாறெனில், பரமனுக்கு அடிமை
என்பதினும் அவன் தன் உத்தம அடியார்க்கு அடிமை என்பதைப் பெரிதாக எண்ணுவது வைணவ
மரபு. அதனாலேயே அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும்
பொருள்பட "தொண்டரடிப்பொடி" என்று தன் பெயரை மாற்றிக்கொள்ள, அரங்கனின்
பக்தியில் ஆழ்ந்து போனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க
தொண்டரடிப்பொடியாழ்வார் ஆன விப்ர நாராயணர், பக்தி மட்டுமே மனதில் கொண்டு,
எதையும் எதிர்பார்க்காமல் அனு தினமும் ரங்கநாதனின் புகழ் பாடி பூமாலை
கட்டியதால், அவரது பூமாலைகள் சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக
விளங்குகிறது. மேலும்,
அவரது இரு சிறப்பு மிக்க பாமாலைகள் திருப்பள்ளியெழுச்சி, திருமாலை. பரமனாகிய
திருமாலை அறிய விரும்புவோர் ஆழ்வாரின் “திருமாலை” எனும் நூலை படித்தால் போதும்
என்னும் கருத்தும், மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ
ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது
பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது என்பதும் இவரது
படைப்புகளின் சிறப்பினைக் குறிக்கச்  சிறந்த எடுத்துக்காட்டு.

திருக்கோளூர் அம்மாள், “தொண்டரடிப்பொடியாழ்வார் போல் பூமாலையோ பாமாலையோ சூடிப்
பெருமாளுக்குச் சேவை செய்தேனா?”, என்று வினவுகிறார்.
*==========**********==**====**********==**====**********==**====*
*********==**====**********==**====*****

*irumAlai IndhEnO thoNdaradippodiyAr pOlE*

Thondaradippodi Azhwar or Vipra Narayanan, who called himself as "the Dust
at the feet of Bhagavatals", is the tenth in the line of the twelve *azhwar*s
of South India, who are known for their affiliation to Vaishnava tradition
of Hinduism. Thondaradippodi Azhwar was born in a small village by name
Thirumandangudi. He became an ardent devotee of Ranganatha of Sri
Ranganathaswamy Temple. He developed a big flower garden in Srirangam,
where various beautiful flower plants are still grown. He worshipped all
the devotees of Sri Vishnu and put the podi (Small tiny dust particles),
which is found under the feet of them in his head and sang songs in praise
of Sri Ranganathar. It is for this reason he is called as "Thondaradippodi
Azhwar".

The word "iru", used by Thirukkolur Ammal has two meanings - one is "two"
and the other is "great".

Referring to the two garlands, one is the garlands made by the Azhwar using
the flowers (Poomalai) he has grown in his garden and the other is the
garland he made using words (Paamalai), out of his love and devotion to the
Lord, Sri Ranganatha. The two Paamalai he comprised are Thirumaalai and
Tirupalliezhuchi. Tirupalliezhuchi consisting of 10 verses is the
Suprabatham for Ranganatha and is sung everyday. Thirumaalai comprising of
45 verses contains the essence of Vishnu dharmam.  The power of Lord
Narayana’s Tirunamam (names) has been laid out so clearly and it is said
that those who do not know “Thirumaalai” do not know “Tirumal (another name
of Lord Narayana).”

If used in the first sense, then we can say that Azhwar provided great and
wonderful flower garlands to the Lord and also the two great works of his
Paamalai - Thirumaalai and Tirupalliezhuchi. Vipra Narayana realized that
the dust of the servants of Lord Narayana was the most precious thing on
earth and with that heart, he lived for 105 years, singing only about
Ranganatha. Thondaradippodi vehemently opposed the caste system that was
prevalent during his times and mentioned that the ultimate way to reach
Vishnu is through service to him and his devotees. Because of his devotion
and service to the Lord Sri Ranganatha and to the devotees of the Lord
without any expectation, the garlands are considered as the purest form of
service to the Lord. Also, Azhwar wrote two amazing word garlands to the
Lord through his works Thirumaalai and Tirupalliezhuchi.

Thirukkolur Ammal is asking "Did I provide service to the Lord with such
great garlands like Thondaradippodi Azhwar?"



  Audio Link:

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>

*http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr36.m4a
<http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr36.m4a>
 *

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to