*பட்ஜெட் **2019:*

*பெட்ரோல்**, **டீசல் வரி உயர்வு!*



பெட்ரோல், டீசலுக்குக் கூடுதலாக லிட்டருக்கு 1 ரூபாய் வரி விதிக்கப்படும்.-
நிதி அமைச்சர்



*தனி நபர் வரி உச்சவரம்பில் மாற்றமில்லை!*



5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் தனி நபர்களுக்கு வருமான வரி
விதிக்கப்படாது என்று முன்னரே இந்த அரசு தெரிவித்திருந்தது. அது தொடரும்-

*120 **கோடி இந்தியர்களிடம் ஆதார் கார்டு!*



நிதி அமைச்சர்: நாட்டில் 120 கோடி பேரிடம் ஆதார் கார்டு உள்ளது. பான்
கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

*நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது!*



"நேரடி வரி வசூலானது 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில்
6.38 லட்சம்
கோடியாக இருந்த நேரடி வரி வசூல், 2018 ஆம் ஆண்டில் 11.37 லட்சம் கோடி ரூபாயாக
அதிகரித்துள்ளது

*புதிய நாணங்கள் புழக்கத்துக்கு வரும்!*



"பார்வையற்றோரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10
மற்றும் ரூ.20 ஆகிய நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 7 ஆம் தேதி
அறிமுகம் செய்தார். அவரை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குப் புழக்கத்தில்
விடப்படும்.

*மின்சார வாகனங்களுக்கு வரிக் குறைப்பு!*



"மின்சார வாகனங்களுக்கு தற்போது இருக்கும் 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியை, 5
சதவிகிதமாகக்
குறைக்கச் சொல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், மின்சார
வாகனங்களை சுலபமாக வாங்க, கடன் வாங்கும் நபர்களுக்குக் கூடுதலாக 1.5 லட்ச
ரூபாய் வருமான வரி குறைக்கப்படும்

*கார்ப்பரேட் வரி உயர்த்தப்பட்டது!*



நாட்டில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு 25 சதவிகிதமாக வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ச*ர்வதேசக் கடன் குறைவாக உள்ளது!*



"இந்தியாவின் சர்வதேசக் கடன், நாட்டின் ஜிடிபி-யில் 5 சதவிகிதம்தான் உள்ளது.
இது உலக அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவாகும்"-


* என்.ஆர்.ஐ-களுக்கு ஆதார் வழங்குவதில் மாற்றம்*



"நாட்டில் வசிக்காத இந்தியர்களுக்கு ஆதார் கார்டு கொடுக்கும் விதத்தில்
மாற்றம் செய்யப்படும். அவர்கள் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் 180 நாட்கள்
கழித்து ஆதார் கார்டு வழங்கும் நடைமுறை மாற்றப்படும். உடனடியாக ஆதார் கார்டு
வழங்க வழிவகை செய்யப்படும்

*‘**பேட் லோன்ஸ்**’ **திரும்பப் பெறுதல்*



"வங்கித் துறையில் நிலவும் சுணக்கங்களை சரிசெய்தால், நிதி சார்ந்த பலன்கள்
கிடைக்கும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர்
என்.பி.ஏ கடன்கள் 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அது 1 லட்ச ரூபாயாக
குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனையாகும்."

-நடைமுறையில் இருக்கும் பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், 4 பிரிவுகளாக
முறைபடுத்தப்படும்.



-உயர்கல்வியை பலப்படுத்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்



-கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில், விளையாட்டு வீரர்கள்
ஊக்குவிக்கப்படுவார்கள்



-ஸ்டார்ட்-அப்ஸ்களுக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி
ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியை வடிவமைப்பது மற்றும் நடத்துவதும்
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாகவே இருக்கும்.

*அக்டோபர் **2 **முதல் **‘**திறந்தவெளி மலம் கழித்தல்**’ **இருக்காது!*



"வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் இந்தியாவில் திறந்தவெளி மலம் கழித்தல்
இருக்காது என்பதை மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது பிரதமரின் கனவாகும்

*உயர்கல்வியை பலப்படுத்தல்!*



"5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருக்கும் ஒரு உயர்கல்வி நிறுவனங்கள்
கூட, உலகின்
டாப் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால், தொடர்
முயற்சியால் தற்போது 3 கல்வி நிறுவனங்கள் அதில் இடம் பிடித்துள்ளன. வெளிநாட்டு
மாணவர்களை இந்தியாவுக்கு வரவழைக்கும் வகையில் 'இந்தியாவில் படியுங்கள்' என்ற
திட்டத்தை முன்மொழிகிறேன்

* ‘**தூய்மை இந்தியா**’ **திட்டம் விரிவுபடுத்தல்*

"2014, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 9.6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 5.6 லட்சம்
கிராமங்களில் திறந்தெவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியானது
தொடர வேண்டும். எனவே, தூய்மை இந்தியா திட்டத்தை விரிவுபடுத்த கூடுதல் நிதி
ஒதுக்கப்படும்

*2022 **ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைவருக்கும் மின்சாரம்.*



வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும்
அனைவருக்கும் மின்சார வசதி செய்து தரப்படும். 2024 ஆம் ஆண்டுக்குள் தண்ணீர்
வசதி செய்து தரப்படும்-

*விண்வெளித் துறையில் புதிய நிறுவனம்!*



விண்வெளித் துறையில் இந்திய முன்னிலையில் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக்
கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதற்கென்று என்.எஸ்.ஐ.எல் (நியூ ஸ்பேஸ்
இந்தியா லிமிடெட்) என்று நிறுவனம் ஆரம்பிக்கப்படும்.

*ஊடகம் மற்றும் விமானத் துறையில் எப்.டி.ஐ அதிகரிப்பு!*



"ஊடகம் மற்றும் விமானத் துறையில் வெளிநாட்டு முதலீடு வரம்பு அதிகரிக்கப்படும்.
உட்கட்டமைப்புத் துறையில் 100 சதவிகித வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி
அளிக்கப்படும். உலக அளவில் வெளிநாட்டு முதலீடு தொடர்ந்து சரிந்து
வந்தாலும், இந்தியாவில்
ஏற்றம் கண்டுள்ளது

*வாடகை வீடுகளுக்கான சிறப்புத் திட்டங்கள்*



"தற்போது வாடகைக்காக விடப்படும் இடங்கள் குறித்து நடைமுறையில் இருக்கும்
சட்டங்கள் பழமையானவை. விரைவில் இதற்கான புதிய சட்டம் வகுக்கப்படும். இந்த
விஷயத்தில் பல சீர்திருத்தங்கள் செய்யப்படும்

*பெரும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை*

"இந்திய நாட்டு மக்கள் நம் நாட்டின் எதிர்காலத்துக்காக இரண்டு விஷயங்களை
முன்னிருத்தியுள்ளார்கள். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியே அவை. 657
கிலோ மீட்டர் அளவிலான மெட்ரோ ரயில் நெட்வோர்க் செயல்பாட்டில் உள்ளது

இந்த ஆண்டு 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதரத்தை இந்தியா அடையும்

1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இந்தியாவிற்கு 55 ஆண்டுகள் ஆகின.
நாங்கள் 5 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய செய்தோம்.

'புது இந்தியாவிற்கான துவக்கம் இந்த பட்ஜெட்'

பிரதமர் மோடி பாராளுமன்றத்தை வந்தடைந்தார். அவரது தலைமையில் அமைக்கப்பட்ட
இரண்டாவது அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்

*Jul 05, 2019*

*11:02 (IST)*

நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 [image:
oEYIwho5P65TiFULlri0IGP98yjfF3i_Pu6P9Rip2BHdReujIr3MmDnJ9Yn8411O.png]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bq4vVk4S%2BazK1HJb2kpjYmtnYJDymJzqcxmGrHb3HYTBg%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to