பக்குவம் அடைந்த ஜீவன் இறைவனின் சாரூப நிலையைப் பெறுவதால் இறை வடிவமாகப் போற்றப்படுகிறது. எனவே எட்டு திசைகளிலும் உள்ளவர்கள் போற்றுவதைக் குறிக்கும் வகையில் அஷ்டமங்கலம் காட்டப்படுகிறது.
கிழக்குத் திசையான இந்திரன் திசையிலிருந்து குடையும், தென்கிழக்கான அக்னி திக்கில் இருந்து அடுக்கு தீபமும், தெற்கு திசையாகிய யம திக்கில் இருந்து சுவஸ்திகமும், தென்மேற்கு திசையாகிய நிருதி திக்கில் இருந்து சாமரமும், மேற்கு திசையான வருண திக்கில் இருந்து பூரண கும்பமும், வடமேற்கு திசையான வாயு திக்கில் இருந்து விசிறியும், வடக்கு திசையான குபேர திக்கில் இருந்து ஆலவட்டமும், வடகிழக்கு ஈசான்ய திக்கில் இருந்து கொடியும் கொண்டு வரப்பட்டதாகக் கருதி அவை காட்டப்படுகின்றன. கோவில்களுக்குச் செல்பவர்கள் ஏதோ தீபாராதனை விதவிதமாகக் காட்டப்படுகிறது என்று நினைத்து விடாமல்- இதன் மூலம் ஆன்மா எல்லையற்ற பரந்த வெளியில் நிறைந்திருக்கும் இறைவனிடமிருந்து முதலில் ஒலியாகவும், பின்னர் ஒளியாகவும், அதிலிருந்து படிப்படியாக உலகமாகவும், அதில் நிறைந்த உயிர்களாகவும் தோன்றுவதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி மூலமான இறைவனிடம் தோன்றிய ஆன்மா உலகை அடைந்து இங்குள்ள உலக விவகாரங்களில் சிக்கிக் கொள்கிறது. அதில் சிக்கிக் கொள்ளாத ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதைக் குறிக்கும் வகையில் வேதங்கள் முழங்கப்படுகின்றன. இறைவனின் வார்த்தைகளான வேதத்தின் வழி செல்லும்ஆன்மா தன்னை உணர்ந்து கொண்டு படிப்படியாக முன்னேறு கிறது. இதையே ஒன்று முதல் பத்து வரையில் உள்ள தீபங்கள் குறிப்பிடு கின்றன. நற்குணங்களால் நிறையப் பெற்ற ஜீவனை எட்டு திசைகளில் உள்ளவர் களும் வாழ்த்துகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் குடை, அடுக்கு தீபம், சாமரம் ஆகியவை காட்டப் பெறுகின்றன. கோவில்களுக்குச் செல்பவர்கள் ஏதோ தீபாராதனை விதவிதமாகக் காட்டப்படுகிறது என்று நினைத்து விடாமல்- இதன் மூலம் ஆன்மா எல்லையற்ற பரந்த வெளியில் நிறைந்திருக்கும் இறைவனிடமிருந்து முதலில் ஒலியாகவும், பின்னர் ஒளியாகவும், அதிலிருந்து படிப்படியாக உலகமாகவும், அதில் நிறைந்த உயிர்களாகவும் தோன்றுவதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி மூலமான இறைவனிடம் தோன்றிய ஆன்மா உலகை அடைந்து இங்குள்ள உலக விவகாரங்களில் சிக்கிக் கொள்கிறது. அதில் சிக்கிக் கொள்ளாத ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதைக் குறிக்கும் வகையில் வேதங்கள் முழங்கப்படுகின்றன. இறைவனின் வார்த்தைகளான வேதத்தின் வழி செல்லும்ஆன்மா தன்னை உணர்ந்து கொண்டு படிப்படியாக முன்னேறு கிறது. இதையே ஒன்று முதல் பத்து வரையில் உள்ள தீபங்கள் குறிப்பிடு கின்றன. பின்னர் கற்பூர தீபம் காட்டப்படுகிறது. இதுவே பூரண நிலை எய்திய ஜீவனின் நிலையாகும். கற்பூரம் எரிந்து காற்றில் கலந்து விடுவதைப்போலவே, ஜீவனும் தன் பாசப் பிணைப்பை உதறிவிட்டு பகவானோடு ஐக்கியமாவதை இதனால் உணர்ந்துகொள்ள வேண்டும். பின்னர் விபூதி அளிக்கப்படுகிறது. இதுவரை நிகழ்ந்த உலகத்தின் தோற்றத்தையும் இறுதியில் அது ஒடுங்கி விட்டதையும் குறிக்கும் வகையில் நெருப்பின் மீதியான சாம்பல் பிரசாதமாக அளிக்கப்படுகிறது <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* [image: oEYIwho5P65TiFULlri0IGP98yjfF3i_Pu6P9Rip2BHdReujIr3MmDnJ9Yn8411O.png] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BoMYH5M%2BZg8BiOyyE1ehRkRxff0F1m1k9xOdQwM8yD%3D%3Dg%40mail.gmail.com. For more options, visit https://groups.google.com/d/optout.
