“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்ள, ஞானமாகிய விளக்கினால்
முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும்.

இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில்
விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’
என்ற பொருளில்;

   “விளக்கினை ஏற்றி வெளியை அறமின்
     விளக்கினின் முன்னை வேதனை மாறும்
     விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
     விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”

என்று திருமூலர் பாடியுள்ளார்.

‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும்
பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின்
அறிகுறியாகும்.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர
தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

     ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்
     ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்
     ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்
     ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே”

என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.

மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும்,
பலிபீடத்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.

பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது
திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அர்ச்சகர் பலவித அலங்கார தீபங்களை
முறையாகக் காட்டுவார்.

ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு.
திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை
நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம்.

அதுவும் நன்றாக காணமுடியாது. அர்ச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக்
காணமுடியும்.

அர்ச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும்.

மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.

உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும்.

அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில்
நடைபெறும்.

கோவிலில் திரை நீங்குதலும் அர்ச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில்
நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.

ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும்.

ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி
அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும்.

மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும்.

ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற
முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு
முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும்.

ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும்.
மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.

1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும்
பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்பெறும்.

ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக
இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார்
குறிப்பிடுகின்றது.

அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து
தட்டுத் தீபங்கள் காண்பிக்கப் பெறுகின்றன.

இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப்பெறும்.

கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும்
என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல்
கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம்,
ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு.

அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து
இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BqhnhT2Jg52XKdCD39fF-azcbmYw0FM4V%2Bna5Ud%3DE8E3A%40mail.gmail.com.

Reply via email to