*லிங்கோத்பவர் திருவடிவம் பற்றி புராணக் கதை ஒன்று உண்டு.*
*ஒருமுறை**, **சரஸ்வதியின் நாயகன் பிரம்மனுக்கும் திரு மகளின் நாயகன் மகாவிஷ்ணுவுக்கும் இடையே**, '**தங்களில் யார் பெரியவர்**?' **என்று விவாதம் எழுந்தது. நெடுநேரம் விவாதித்தும் தீர்வு கிடைக்கவில்லை.* *இந்த சர்ச்சை பெரிய யுத்தமாக மாறியது. இருவருக்கும் இடையே ஒளி பொருந்திய பெரிய நெருப்புத் தூணாக சிவபெருமான் நின்றார். பிரம்ம னும் விஷ்ணுவும் தங்களது சண்டையை விட்டு விட்டு**, **கோடி சூரிய பிரகாசத்துடன் திகழ்ந்த அந்த நெருப்புத் தூணை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது**, ''**ஒளி உருவில் உயர்ந்து நிற்கிறேன். உங்களில் ஒருவர் என் திருவடியையும் மற்றொருவர் என் திருமுடியையும் காண்பதற்கு முயற்சியுங்கள். அதன் பிறகு**, **உங்களது விவாதத்துக்கு முடிவு சொல்கிறேன்!**'' **என்றார் சிவபெருமான்.* *இதையடுத்து**, **வலிமையான கொம்புகள் கொண்ட வராகமாக உருவெடுத்தார் திருமால். பூமியை அகழ்ந்து பாதாளத்துக்கும் கீழே சென்று**, **ஈசனின் பாதமலரைக் காண முற்பட்டார். பிரம்மனோ**, **அன்னப் பறவையாகி சிறகுகளை விரித்துப் பறக்கத் துவங்கினார்... ஈசனின் திருமுடியைக் காண!* *ஆண்டுகள் பல கடந்தன. இருவரும் களைப்புற்ற னர். திருவடியைக் காண முடியாமல் திரும்பினார் திருமால். ஆனால்**, **தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார் பிரம்மன். அந்த வேளையில்**, **தாழம்பூ ஒன்று வேகமாக கீழ் நோக்கி வருவதைக் கண்டார். அதனிடம்**, ''**எங்கிருந்து வருகிறாய்**?'' **எனக் கேட்டார்.* * ''**சிவபெருமானின் திருமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். அவரின் திருமுடியைக் காண்பது**, **உங்களால் இயலாத காரியம்!**'' **என்றது தாழம்பூ. உடனே பிரம்மன்**, ''**எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். ஒளிப் பிழம்பின் திருமுடியைக் கண்ட தாகவும்**, **அங்கிருந்து உன்னை எடுத்து வந்ததாகவும் சொல்வேன். நீ அதை ஆமோதித்தால் போதும்!**'' **என்றார். தாழம்பூவும் சம்மதித்தது.* *தாழம்பூவுடன் பூமிக்குத் திரும்பிய பிரம்மன்**, **தான் திருமுடியைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக திருமுடியிலிருந்து தாழம்பூவை எடுத்து வந்ததாகவும் சிவபெருமானிடம் தெரிவித்தார்.* *பிரம்மன் கூறுவது பொய் என்பதை அறிந்த சிவனார் கோபம் கொண்டார். **''**பிரம்மனே... பொய்யுரைத்த உனக்கு**, **கோயில்களும் பூஜைக ளும் இல்லாமல் போகட்டும். தாழம்பூ**, **இனி எந்த பூஜைக்கும் பயன்படாது!**'' **என்று சபித்தார்.* *தவறு உணர்ந்த பிரம்மனும் தாழம்பூவும் தங்களை மன்னிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். இதன் பலனால்... **'**சிவ பூஜை தவிர**, **மற்ற பூஜைகளுக்கு தாழம்பூ பயன்படும்!**' **என்று அருளினார் சிவனார். இப்படி பிரம்மன்**, **திருமால் இருவரது அகந்தையையும் போக்கி... சிவபெருமான்**, **உலகுக்குத் தனது பேரொளியைக் காட்டிய திரு வடிவே லிங்கோத்பவ மூர்த்தி!* *இந்தப் புராணக் கதையில் உள்ள நுண்ணிய கருத்து சிந்தனைக்குரியது. பிரம்மன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் அகந்தையை அதிகப்படுத்தும். ஆனால் அறிவு**, **செல்வம் ஆகியவற்றால் இறைவனைக் காண முடியாது! செல்வச்செருக்கு**, **இறுதியில் தனது தோல்வியை ஏற்றாலும் கல்விச் செருக்கு தனது தோல்வியை ஏற்கவில்லை. மாறாக**, **தோல்வியை மறைப்பதற்கான சூழ்ச்சியைத் தேடியது. ஆம்**, **அறிவு கூடியதால் அகந்தை கொள்பவர்கள் பொய் சொல்லவும் அஞ்ச மாட்டார்கள் என்ப தையே இந்தக் கதை விளக்குகிறது.* *ஆனால் சிவபர தத்துவத்தை உறுதியாக நம்புபவர்கள்**, '**தாழம்பூ கதை**'**யை ஏற்கமாட்டார்கள். **'**உச்சியிலிருந்து தாழம்பூ விழுந்ததாகக் கொண்டால்... அந்தப் பேரொளி**, **ஒரு வரைமுறைக்கு உட்பட்ட வடிவமாகி விடும். இது தவறு**; **பேரொளி யாக நின்ற சிவனாரின் லிங்கோத்பவ வடிவம் வரைமுறைக்கு உட்பட்டது அல்ல**' **என்பது அவர்களது கருத்து!* *எனினும் புராணங்கள் சிலவற்றில் தாழம்பூ கதை உள்ளது. ருக்வேதசம்ஹிதை**, **சரபோப நிஷத்**, **லிங்க புராணம்**, **கூர்ம புராணம்**, **வாயுபுராணம்**, **சிவ மகா புராணம்**, **உபமன்யு பக்த விலாசம்**, **மகா ஸ்காந்தம்**, **நாரதம் மற்றும் தமிழில் கந்த புராணம்**, **அருணகிரி புராணம்**, **சிவராத்ரி புராணம்**, **அருணாசல புராணம் ஆகிய நூல்களிலும்**, **ஆகமங்கள் பலவற்றிலும் அடி- முடி தேடிய கதை விவரிக்கப்பட்டுள்ளது.* *லிங்க பாணத்தின் நடுவில்**, **சந்திரசேகர் திரு மேனி போல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம். இதில்**, **திருமுடியும் திருவடியும் மறைக்கப்பட்டிருக்கும். இரண்டு**, **நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் சிவனார் திகழ... பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர். சிவாலயங்களில் கருவறைக்குப் பின்புறச் சுவரில்**, **லிங்கோத்பவ மூர்த்தியை அமைக்கும் வழக்கம்**, **முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே இருந்துள்ளது. லிங்கத்தின் நடுவில்- சிவபெருமானும்**, **மேல் பகுதியில்- அன்ன பட்சியாக பிரம்மனும்**, **கீழ்ப்பகுதி யில்- வராகமாக திருமாலும் உள்ள லிங்கோத்பவ வடிவை பல கோயில்களில் காணலாம்.* *லிங்கோத்பவ தத்துவ விளக்கத்தை**, **சிவலிங்கத் தத்துவம் எனலாம். பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ளார் இறைவன். பஞ்ச பூதங்களில் காற்று**, **நீர்**, **ஆகாயம் ஆகியவற்றை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வர இயலாது. ஆனால்**, **மண்ணை ஒரு வடிவமாக உருவாக்கலாம். ஆனால் அது**, **ஒளி உடையது ஆகாது!* *சோதியுருவை**, **கண்ணால் காணலாம். கொழுந்து விட்டு எரியும் தீயில்... அதன் மையத்தை உற்று நோக்கினால்**, **நீள் வட்ட வடிவத்தில்- நீல நிற பிரகாசத்தைக் காணலாம். இதையே லிங்கமாக்கினர் நம் முன்னோர். இதுவே லிங்கோத்பவ மூர்த்தி!* *அர்த்தநாரீஸ்வரராகவும்**, **சிவனும் திருமாலும் ஒன்றி சங்கரநாராயணராகவும்**, **இப்படிப் பல திருவுருவங்களையும் ஏற்றிருக்கிறான். இது போலவே மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும். இந்த மூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி**, **பிற ஆலயங்களிலும்**, **மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்திலும் காணலாம். எந்த ஆலயமும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு மட்டுமே அல்ல என்பது தௌ**p**வாகத் தெரிகிறது.* *எல்லா தெய்வங்களையும் ஒரே கருவறையில் வைக்க இயலாது என்பதால் தான் ஏதாவது ஒரு மூர்த்தியை கருவறைக்குள்ளும்**, **பிற பலவற்றை கோபுரம் முதல் கோஷ்டம் வரையும்**, **விமானம் முதல் திருவலச் சுற்றிலும் வைத்திருக்கின்றனர். இதனால் தான் திருமாலும்**, **பிரம்மனும் இல்லாத சிவாலயமுமில்லை. ஆண் தெய்வமில்லாத பெண் சக்தி ஆலயமுமில்லை.* *மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்குவதாக அமைந்துள்ள லிங்கோத்பவர் வழிபாடு அளப்பரிய சிறப்புடையது. அகண்டாகாரஜோதி நமக்காக தன்னைச் சுருக்கிக்கொண்டு இருக்கின்ற லிங்கோத்பவர் சன்னதியில் விளக்கு ஏற்றுவதும்**, **சூடம் ஏற்றுவதுமே மிக முக்கியமான வழிபாடாகும்.* *அன்றாடமும்**, **மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்**, **பௌவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.* *இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக**, **தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல**, **நம் அறியாமையையும் அகந்தையையும் நீக்குவதற்காக**, **லிங்கோத்பவமூர்த்தியை அனுதினமும் வணங்கிடுவோம்....* *ஓம்நமசிவாய* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BoDzDymW_RoB_KP2FttJ6FGivAbSMHF39uYn9ozyp00xQ%40mail.gmail.com.
